• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-16 12:51:06    
சீனாவின் மஞ்சு இனம்

cri

மஞ்சு இன மக்கள், சீனாவின் வடகிழக்குப் பகுதியின் 3 மாநிலங்களில் முக்கியமாக செறிந்து வாழ்கின்றனர். இவர்களில் மிக அதிகமானோர் liaoning மாநிலத்தில் வாழ்கின்றனர். தவிர, உள் மங்கோலியா, ஹபெய், ஷாங்துங் முதலிய மாநிலங்களிலும் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலும், சில மஞ்சு மக்கள் பரவி வாழ்கின்றனர். மஞ்சு இன மக்கள் தொகை, 98 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேலாகும். இது, சீனாவின் 55 சிறுபான்மைத் தேசிய இனங்களில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இனமாகும்.

மஞ்சு இனத்துக்கு சொந்த மொழியும் எழுத்துக்களும் உண்டு. இம்மொழி, Artic மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். மஞ்சு மொழி, 16ம் நூற்றாண்டின் இறுதியில் உருவானது. 17ம் நூற்றாண்டின் 40ம் ஆண்டுகாலத்தில், மஞ்சு இனத்தவர், 3 வட மாநிலங்களிலிருந்து வேறு இடங்களில் இடம்பெயர்ந்த பின், பொதுவாக சீன மொழியைக் கற்று பயன்படுத்தியுள்ளனர். தற்போது Heilongjiang மாநிலத்தின் aihui, fuyu மாவட்டங்களில் வாழ்பவர்களில் சிலர் மட்டும் மஞ்சு மொழியைப் பேச முடியும். மஞ்சு இனப் பெண்கள், qipao என்ற ஆடை அணிவதை விரும்புகின்றனர். இந்த ஆடை, அதன் தனிச்சிறப்புடன், சீனப் பெண்ணின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

மஞ்சு இன மக்கள், வசந்த விழாவைக் கொண்டாடும் போது, இரு முறைகளாக வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள், ஆண்டின் இறுதி நாளிரவில், வழிபாடு செய்து பழையதை கைவிடுகின்றனர். புத்தாண்டின் முதல்நாள் மீண்டும் வழிபாடு செய்து புதியதை வரவேற்கின்றனர்.

மஞ்சு இன மக்கள், நாயை அடிப்பது கொல்வது சாப்பிடுவது ஆகியவற்றை விரும்புவதில்லை.

மஞ்சு இன மக்களின் விழாக்கள் ஹான் இனத்தின் விழாக்களைப் போலவே இருக்கின்றன. விழாவைக் கொண்டாடும் போது, அவர்கள் பன்றியைக் கொன்று விருந்துண்பது வழக்கம். வசந்த விழாவைக் கொண்டாடும் போது, ஒவ்வொரு குடும்பமும், 2 அல்லது 3 பன்றிகளைக் கொல்கிறது. ஆண்டின் இறுதி நாளிரவில், jiaozi என்ற மாவு உணவைச் சாப்பிட வேண்டும். வசந்த விழா, விளக்கு விழா, duanwu விழா, சந்திர விழா முதலியவை, மஞ்சு மக்களின் முக்கிய பாரம்பரிய விழாக்களாகும். விழாவின் போது, முத்து பந்து, குதிரையேற்றம், பனிக்கட்டியில் சறுக்கல் விளையாட்டு முதலியவை நடைபெறுவது வழக்கம்.