• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-16 15:02:34    
ஷாங்காய் டென்னிஸ் போட்டி

cri

ஆடவர் தொழில் முறை டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் 2007ம் ஆண்டு ATP மாஸ்டர்ஸ் கோப்பை இறுதிப்போட்டி 10ம் நாள் ஷாங்காய் நகரில் துவங்கியது.
இவ்வாண்டில் ஆடவர் தொழில் முறை டென்னிஸ் ஆட்டங்களில் தலைசிறந்த சாதனையைப் பெற்ற வீரர்கள் Federer, Nadal, Djokovic, Davydenko, Roddick, Ferrer, Gonzalez, Gasquet ஆகியோர் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். இவர்களில், Djokovic, Ferrer, Gasquet மூவரும் இப்போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதன் முறையாகும். உலகில் மிக உயர் நிலை ஆடவர் தொழில் முறை டென்னிஸ் போட்டி இது ஆகும். இப்போட்டியில் சிவப்பு மற்றும் தங்க பிரிவுகள் இடம் பெறுகின்றன.

ஷாங்காய் 3வது முறையாக ஆடவர் தொழில் முறை டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ATP மாஸ்டர்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டியை நடத்துவதுகிறது.
12ம் நாள் நடைபெற்ற சிவப்பு பிரிவின் ஒரு ஆட்டத்தில், சிலி வீரர் Gonzalezஉம ஸ்பெயின் வீரர் Ferrerஉம் மோதினர். 126 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் Ferrerஐ 3-6, 7-6, 7-5 என்ற ஆட்டக் கணக்கில் தோற்கடித்து Gonzalez இப்போட்டியில் தனது முதலாவது வெற்றியைப் பெற்றார். அத்துடன், தொழிற்முறை டென்னிஸ் போட்டியில் Ferrerஐ அவர் வென்றது இதுவே முதன் முறையாகும்.
இதர சிவப்பு பிரிவு ஆட்டத்தில், Davydenkoஐ 2-1 என்ற ஆட்டக் கணக்கில் Roddick தோற்கடித்தார். தங்க பிரிவின் முதலாவது சுற்று ஆட்டத்தில் Gasquet, Ferrer இருவர் வெற்றி பெற்றார்கள்.
8வது சீனச் சிறுபான்மை தேசிய இனங்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி 10ம் நாளிரவு சீனத் தென் பகுதியிலுள்ள Guang Zhou நகரில் துவங்கியது.

இத்திங்களின் 10 முதல் 18ம் நாள் வரை, இப்போட்டி நடைபெறுகின்றது. 34 பிரதிநிதிக் குழுக்களை சேர்ந்த 6300க்கு அதிகமான வீரர்களும் வீராங்கனைகளும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். வரலாற்றில், முன் கண்டிராத மிகப் பெரிய சிறுபானஅமை தேசிய இனங்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி இதுவாகும்.
சர்வதேச நெடுஞ்சாலையிலான 2007ம் ஆண்டு "Hai Nan சுற்றுலா" மிதிவண்டி போட்டி நவம்பர் 10ம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள San Ya நகரில் நிறைவடைந்தது.
போலந்தின் Intel-Acation அணியின் வீரர் Robert Radosz 26 மணி 40 நிமிடங்கள் 48 வினாடிகள் என்ற நேரப் பதிவில், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இப்போட்டியின் மொத்த நீளம் 1061.8 கிலோமீட்டராகும். 24 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 18 அணிகளும் 105 வீரர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.