உயரமான மெந்மையான மேங் சியௌ யே, 30 வயதுக்கு மேற்பட்டார். பேசும் போது, முகத்தில் புன் சிரிப்பு எப்போதும் காணப்படுகிறது. அவர் ஒரு சாதாரண சட்டத்துறை பணியாளராவார். சீனாவின் குவாங்சி மாநிலத்தைச் சேர்ந்த அவர், 2004ம் ஆண்டு பெய்சிங் பல்கலைகழகத்தில் தேர்ச்சி பெற்ற பின், சட்ட உதவி வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
1996ம் ஆண்டு, பெய்சிங் பல்கலை கழகத்தின் சட்ட கல்லூரியில் இரண்டாவது வகுப்பில் கற்றுக் கொண்ட போது, அவர் கல்லூரி வழங்கிய முதலாவது புலமைப் பரிசை, தாய் ஊரின் குழந்தைகளுக்கு கொடையாக அளித்தார். அப்போது, பலர், இச்செயலை சரியாக புரிந்துக் கொள்ள வில்லை. மே சியௌ யேவின் குடும்பம் சாதாரண வசதியுடைய குடும்பம் வசதி பொதுவானது. ஏன், அவர், பரிசை மற்றவருக்கு வழங்கினார் என்பது பற்றி அவர் பேசுகையில், அப்போது நான் பெற்ற முதலாவது புலமைப் பரிசை பயன்படுத்தி, ஊள்ளூரின் குழந்தைகளுக்கு உதவி அளிப்பது, நீண்டகாலமாக என் மனதில் இருந்த கருத்தாகும். அவர்களுக்கு சிறிதளவாவது உதவ நான் விரும்பினேன் என்றார் அவர். 1999ம் ஆண்டு, அவர் பெய்சிங் பல்கலைகழகத்தில் தேர்ச்சி பெற்ற பின், ஹே நான் மாநிலத்தின் சி மாவடத்தில் அமைந்துள்ள ஒரு இடைநிலை பள்ளியில் தொண்டர் ஆசிரியராக ஓராண்டு பணி புரிந்தார். இது, அவருடைய தொண்டர் சேவையின் புதிய துவக்கமாகும். அங்கே, புத்தாக்க கருத்து பற்றாக்குறை என்பது குழந்தைகளின் மிகப் பெரிய பிரச்சினை என்று அவர் கண்டறிந்தார்.
இந்த ஆண்டில், அவர் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி, குழந்தைகளின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தி, அவர்களது திறமைகளை வளர்க்க உதவினார். சில ஆண்டுகளுக்கு பின், அவருடைய மாணவர்களில், பத்து பேர் பெய்சிங்கின் சில பல்கலைகழகங்களில் பயில தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை பற்றி பேசுகையில் மகிழ்ச்சியில் அவர் முகத்தில் புன்னகை மலர்கிறது. அவர் கூறியதாவது
|