தற்போது தைவான் நீரிணையின் இரு கரைகளுக்குமிடை பரிமாற்றங்களில் கல்வி துறையிலான ஒத்துழைப்பு மிக சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பகுதியாகும். அறிவாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடை பயணப் பரிமாற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.

அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற 3வது இரு கரை பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பண்பாட்டு கருத்தரங்கில், இரு கரைகளுக்குமிடை கல்வி பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் முன்னேற்றுவது பற்றி, இரு தரப்புகளின் நிபுணர்களும் அறிவாளர்களும் ஆழமாக கலந்தாலோசித்து, பல ஒத்த கருத்துக்களை உருவாக்கியுள்ளனர். தைவான் பல்கலைக்கழகங்கள் பெரு நிலப்பகுதியில் மாணவர்களைச் சேர்ப்பதை வரவேற்பதாகவும் பெரு நிலப் பகுதி தரப்பு அறிவித்துள்ளது ஒரு புதிய கள ஆய்வின் படி, சுமார் 15 விழுக்காட்டு தைவான் மேனிலை பள்ளிகளின் 3வது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பெரு நிலப்பகுதியின் பல்கலைக்கழகத்தில் பயில விரும்புகின்றனர் என்று தைவான் செய்தி ஏடுகள் தெரிவித்தன. சர்வதேச மயமாக்கக் கருத்தை வளர்ப்பதற்குத் துணை புரியும், எதிர்காலத்தில் பெருநிலப் பகுதியில் வேலை புரிவதற்கு இது ஆயத்தம் செய்யும் முதலியவை இதற்கான காரணங்களாகும்.

தற்போது தைவானில், நான் பீகிங் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றேன் என்று கூறினால், மக்கள் பொறாமை அடைவதை உணரலாம். பெருநிலப் பகுதியில் பணி புரிந்தால் வாய்ப்புகள் அதிகம். ஆகையால், பலர் இங்கே தங்கியிருப்பதைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், நீண்ட காலமாக, பெருநிலப் பகுதியில் கிடைத்த பல்கலைக்கழக கல்வித்தகைமை தைவானில் அதிகாரப்பூர்வமாக ஏற்றக்கொள்ளப்படவில்லை. இது தைவான் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. தைவான் அதிகார வட்டாரம், பெரு நிலப்பகுதியில் கிடைத்த பல்கலைக்கழக கல்வித்தகைமையை வெகுவிரைவில் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டோர் பலர் வேண்டிக்கொண்டனர்.

தைவான் shi jian பல்கலைக்கழகத்தின் வேந்தர் zhang guang zheng கூறியதாவது தைவான் மாணவர்களைப் பொறுத்த வரை, பெரு நிலப் பகுதிக்குச் சென்று பயில்வதற்கு ஊக்கம் அளிக்கின்றோம். பெரு நிலப் பகுதியில் பயின்றால், அங்குள்ள நிலைமையை ஆழமாக அறிந்து கொள்வதுடன், சீனப் பண்பாட்டின் அறிவுகளையும் அதிகரித்து, சுதந்திரமாக முடிவு எடுப்பதற்குத் துணை புரியும். இது மட்டுமல்ல இது சந்தை போட்டியின் மூலம், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் முன்னேற்றத்தையும் தீவிரமாக்கும். கடந்த சில ஆண்டுகளாக, படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் பெரு நிலப் பகுதி தரப்பு தைவான் மாணவர்களுக்கு சலுகைக் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. தைவான் கல்வி வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் கல்வி நிலையங்களின் கல்வித்தகைமை பெரு நிலப்பகுதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கல்விக் கட்டணம், விடுதி, இயற்கைக் காட்சி தளங்களின் நுழைவுச் சீட்டு விலை முதலியவற்றில் தைவான் மாணவர்கள் பெரு நிலப் பகுதி மாணவர்களுக்கு சமமான அணுகு முறையை அனுபவிக்கலாம். புலமைப் பரிசில் பெற விண்ணப்பம் செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1700 தைவான் மாணவர்கள் 70 இலட்சத்துக்கு அதிகமான புலமைப் பரிசுகளை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை பெரு நிலப் பகுதியில் படிக்கும் தைவான் மாணவர்களில் நான்கில் ஒரு பகுதி வகிக்கின்றது.
|