• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-22 20:32:51    
பாரம்பரிய கலைப்பொருட்களைச் சேமிக்கும் சிறப்பான அருங்காட்சியகம்

cri

பெய்ஜிங் பூத்தையல் கலைப்பொருள் ஒன்றுக்கு, பத்துக்கு மேலான செய்தல் முறைகள் தேவைப்படுகிறது. கைதேர்ந்த பூத்தையல் கலைஞர், டிரேகன் ஆடையைத் தயாரிப்பதற்கு, குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவை. அழகான படம், தலைச்சிறந்த பூத்தையல் தொழில் நுட்பம், ஆழமான பண்பாட்டு உள்ளடக்கம் ஆகியவற்றினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளும், கலைப்பொருட்களைத் திரட்டுபவர்களும், பெய்ஜிங் பூத்தையல் கலைப்பொருட்களை, மதிப்புக்குரிய அரியபொருட்களாக சேமித்து வைத்துள்ளனர்.


அழகான பெய்ஜிங் பூத்தையல் பொருட்களைப் பார்த்த பிறகு, ஜேடு சிற்பக் கலையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜேடு சிற்ப வேலையில் 30க்கு அதிகமான ஆண்டுகள் ஈடுபட்ட கலைஞர் YANG YU ZHONG கூறியதாவது:
தரமிக்க மூலப்பொருள், தலைச்சிறந்த வடிவமைப்பு, உணர்ப்பூர்வமான தயாரிப்பு ஆகியவை, தலைச்சிறந்த ஜேடு சிற்பப் படைப்புக்கான முக்கிய காரணிகளாகும் என்றார் அவர்.


பெய்ஜிங் பூத்தையல், ஜேடு சிற்பம், அரக்குப் பொருட்கள் உள்ளிட்ட 8 அரண்மனை கலைப்பொருட்கள், சீனாவின் பொது மக்களிடையில் பெய்ஜிங்கின் எட்டு தனிச்சிறப்பியல்ப்புகளாக அழைக்கப்படுகின்றன. இதில், அரக்குப் பொருட்கள், மிகவும நீண்டகால வரலாறுடையவை. தொடர்புடைய பதிவேட்டின் படி, பெய்ஜிங்கின் அரக்கு சிற்பம், அரக்குப் பொருட்களின் தொழில் நுட்பத்தில் ஒருவகையாகும். கலைஞர்கள் பல்வேறு வடிவிலான மூலப்பொருட்களில் நூற்றுக்கணக்கான முறைகளில் அரக்கை நேர்த்தியாக துடைத்த பிறகு, கத்தியால் செதுக்குகிறார்கள். பண்டைக்கால அரக்குப் பொருட்கள், சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களை முக்கியமாக கொண்டுள்ளன.
அரக்குப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அரக்கு, இயற்கையாக இருக்கிறது. அரங்கை, மருத்தாக பயன்படுத்துவதோடு, உண்ணவும் செய்யலாம். பேய் குங் பாங்கின் அரக்குக் கலையகத்தின் மேலாளர் WANG XIAO FEI அம்மையார், அரக்குப்பொருள் பற்றிய கதை ஒன்றை கூறினார்.


முன்பு, வெளிநாட்டு வணிகக் கப்பல் ஒன்று, யிங்குலிஷ் நீரிணையில் மூழ்கிவிட்டது. 30 ஆண்டுகளுக்குப் பின், இக்கப்பலிலுள்ள பொருட்கள் காப்பாற்றப்பட்டன. அதில் இரண்டு அரக்கு புட்டிகள் கிடைத்தன. கடல் நீர் அழித்தல் தன்மை மிக்கதாக இருந்தும், இந்த அரக்கு புட்டிகள் புதியது போல பளபளப்பாக காணப்படுகின்றன. இது, அரக்குப் பொருட்களின் தொழில் நுட்பத்தை மெய்ப்பித்துள்ளது என்றார் அவர்.
பயன்பாட்டுத் தன்மையையும் அனுபவித்துக் கண்டுரசிக்கும் தன்மையையும் கொண்டதால், அரக்குப் பொருட்கள், அரசர் குடும்பங்கள் மற்றும் உயர் குடி மக்களால் வரவேற்கப்பட்டன. பல நாடுகளில், அரக்குப் பொருட்கள், மதிப்புக்குரிய அரியபொருட்களாக சேமித்து வைக்கப்பட்டு, அன்பளிப்பாக மதிப்புக்குரிய விருந்தினர்களுக்கு வழங்கப்படுகின்றன.

 
நேயர்கள் இதுவரை, பெய்ஜிங்கிலுள்ள பேய் குங் பாங் என்னும் சிறப்பான அருங்காட்சியகம் பற்றி கேட்டீர்கள். இத்துடன், இன்றைய சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி நிறைவடைகிறது.