• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-23 16:28:16    
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தொண்டர்

cri

தொண்டர்கள், வறுமையான பிரதேசத்தின் குழந்தைகளுக்கு உதவி அளித்து, அவர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவது, ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகும் என்றார் அவர்.


ஹே நானிலிருந்து பெய்சிங்கிற்கு திரும்பிய பின், அவர் சமூக சட்ட உதவி பணியில் ஈடுபட துவங்கினார். ஹே நான் பள்ளியிலான ஆசிரியர் அனுபவத்தால் அவர் தொண்டர் பணியின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டார். இது, அவர் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தொண்டராக மாற விரும்பும் முக்கிய காரணமாகும் என்றார் அவர்.
2008ம் ஆண்டின் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை அவர் மிகவும் எதிர்பார்க்கிறார். இப்போட்டியில் தன்னார்வத்தொண்டராக செயலாற்ற விண்ணப்பம் செய்திவர்களில் ஒருவராக அவர் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறார். அனைவருடைய தனிச்சிறப்பான அறிவும் அனுபவமும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு உதவியாக அமையும் என்று அவர் கருதினார். கனடாவைச் சேர்ந்த ஒரு வல்லுநரின் தொண்டர் அனுபவ்ததை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது


அண்மையில் நாங்கள் ஒரு நடவடிக்கை மேற்கொண்டு, ஒரு வல்லுநருக்கு அழைப்பு விடுத்தோம் அவர், கனடா Ontario மாநிலத்தின் சட்ட உதவி அலுவலகத்தின் துணை தலைவராவார். அவர், சிட்னி ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்துக்கொண்டார். தொண்டர் முறையில், அவர் வாகன ஓட்டுராக பணிபுரிந்தார். இது, ஒரு தொழில் நுட்பமாக திகழ்க்கிறது. வாய்ப்பு இருந்தால், நாம் பல்வேறு உள்ளார்ந்த சிறப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விளையாட்டு போட்டிகளுக்கு உதவி அளிக்கலாம் இது ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
2008ம் ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிசில திங்களுக்கு பின் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆயத்த பணிகளும் ஒழுங்காகவும் சுற்சுறுபாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு மொத்தம் 1 லட்சம் விளையாட்டு போட்டி தொண்டர்களும், 4 லட்சம் நகர சேவை தொண்டர்களும் தேவை. போட்டி தொண்டர்கள், நேரடியாக போட்டிகளுக்கு சேவை வழங்குவர். நகர சேவை தொண்டர்கள், முழு நகர இயங்கலுக்கு உத்தரவாதம் அளிப்பார்கள் என்று மே சியௌ யே குறிப்பிட்டார். அனைவரும் முக்கியமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு தொண்டர்களும், தங்களது சிறிய நடவடிக்கையை நன்றாக மேற்கொண்டு, சமமான அர்ப்பணமான தொண்டர்களின் எழுச்சிக்கிணங்க, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சேவை வழங்க வேண்டும் என்று மே சியௌ யே தெரிவித்தார்.


ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, பெய்சிங்கிற்கென என செல்வாக்கு ஏற்படுத்தும், வணிக வாய்ப்புகள் மட்டும் அல்ல. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மூலம், பெய்சிங் நகரவாசிகளின் ஒட்டு மொத்த அறிவும் உயர்வடையும் என்றார்.