அரசு உடைமை சாரா பொருளாதாரம்
cri
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் அரசு உடைமை சாரா பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனை பெற்றுள்ளது. இன்று பெய்சிங்கில் நடைபெற்ற அனைத்து சீனத் தொழில் மற்றும் வணிக சம்மேளனத்தின் 10வது மாநாட்டில் எமது செய்தியாளர் இத்தகவலை அறிந்தார். அரசு உடைமை சாரா பொருளாதாரம், சீனச் சோஷலிச சந்தைப் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாகும். தனியார் தொழில் நிறுவனத்தை பிரதிநிதியாகக் கொண்ட அரசு உடைமை சாராப் பொருளாதாரம், கடந்த சில ஆண்டுகளாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் கண்டுள்ளது. இந்நிறுவனங்களின் முதலீட்டுச் சூழல் பெரிதும் மேம்பட்டுள்ளது என்று இச்சம்மேளனத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். தொழில் சின்னம் மற்றும் தொழில் நிறுவனப் பண்பாட்டு உருவாக்கத்தில் மேலதிக தனியார் தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி, சமூகப் பொது நலன் லட்சியத்துக்கு மேலும் கூடுதலான பங்காற்றியுள்ளன என்றும் அவர் கூறினார். இனி, தனியார் தொழில் நிறுவனங்களுக்கு, சமமாக போட்டியிடும் வளர்ச்சி சூழலை உருவாக்கி, தனியார் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தி, அரசு உடைமை சாரா தொழில் நிறுவனங்களின் பிரமுகர்கள், அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் மேலும் செவ்வனே பங்கெடுப்பதற்கு இச்சம்மேளனம் வழிகாட்டும் என்று அவர் கூறினார்.
|
|