• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-20 10:46:34    
மிங் வம்சப் பேரரசர்களின் கல்லறை (இ)

cri

Ming கல்லறை: Chang கல்லறையின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள Yangcuiling மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. Chang கல்லறையின் அளவை விட, அதன் அளவு சிறியதாக இருக்கிறது. ஆனால், அதன் கட்டமைப்பு அழகாக இருக்கிறது. இது, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மிங் லோ மாளிகை, முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, 13 கல்லறைகளில் முதலிடம் வகிக்கிறது. சுவர்கள், வண்ண கற்களால் கட்டியமைக்கப்பட்டுள்ளன.

தீங் கல்லறை: Chang கல்லறையின் தென்மேற்குப் பகுதியிலுள்ள தாயூசான் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது, மிங் வம்சக்காலத்தின் 13வது பேரரசர் Zhu Yijun மற்றும் அவரது இரு பேரரசிகளின் கல்லறையாகும். 1583ம் ஆண்டு, அவர், தன் அமைச்சர்கள் சிலரை அழைத்துச் சென்று, தியான் சோ மலையில் தாமாகவே கல்லறை இடத்தைத் தேடி நிர்ணயித்து, கல்லறையின் கட்டுமான அமைப்பை உறுதிப்படுத்தினார். 1584ம் ஆண்டு, கட்டுமானப் பணி துவங்கியது. 6 ஆண்டுகளில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவத் தொழிலாளர்களும், கலைஞர்களும் இக்கட்டுமானத்தில் ஈடுபட்டனர். லீங் வாயில், லீங் அன் வாயில், லீங் அன் அரண்மனை, மிங் லோ மாளிகை, பௌ தீங் சிகரம், நிலத்தடி அரண்மனை ஆகியவை, அங்குள்ள முக்கிய கட்டுமானங்கள் ஆகும். மிங் லோ மாளிகையையும் பௌ தீங் சிகரத்தையும் தவிர, பிற கட்டுமானங்கள், சீர்குலைந்து விட்டன. இம்மாளிகையின் உச்சி, மஞ்சள் நிறக் கற்களால் போடப்பட்டது. வெளிப்புறக் கூரையின் கீழே, தீங் கல்லறை என்ற இரு சீன எழுத்துக்கள் காணப்படுகின்றன. மாளிகையில், ஒரு சின்னம் உள்ளது. இதில், Shen zong xian பேரரசரின் கல்லறை என்ற சில சீன எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. Baocheng மாளிகையின் இரு பக்கங்களில், ஒரு வட்ட வடிவிலான சுவர், கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நீளம், 750 மீட்டர்.

நிலத்தடி அரண்மனை: தீங் கல்லறையின் நிலத்தடி அரண்மனை, 13 கல்லறைகளில் ஒரே நிலத்தடி அரண்மனையாகும். இது, தீங் கல்லறையின் மிங் லோ மாளிகையின் பின்பகுதியில் அமைகிறது. இதற்கும், கல்லறையின் உச்சிக்குமிடையில் 27 மீட்டர் இடைவெளி உள்ளது. அதன் மொத்த நிலப்பரப்பு, 1195 சதுர மீட்டராகும். இது, முன்புறம், நடு, பின்புறம், இடது, வலது ஆகிய ஐந்து மண்டபங்களால் உருவாக்கப்பட்டது. முன்புறம் மற்றும் நடு மண்டபங்கள், செங்கோனத் தாழ்வாரமாக இருக்கின்றன. பின்புற மண்டபம், நிலத்தடி அரண்மனையில் மிகப் பெரிய மண்டபமாகும். அதன் நீளம், 30.1 மீட்டர், அகலம் 9.1 மீட்டர், உயரம் 9.5 மீட்டர்.