• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-20 16:50:29    
சீனப் பாணி கத்தரிக்காய் வறுவல்

cri

வாணி – வணக்கம் நேயர்களே, மீண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகி்ழ்ச்சி. இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தங்களுக்கு இன்னொரு சீன உணவு வகை ஒன்றின் தயாரிப்பு பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

க்ளீட்டஸ் -- இன்றைய நிகழ்ச்சியில், சீன முறைப்படி, கத்தரிக்காய் வறுவல் தயாரிப்பு பற்றிப் பார்ப்போமா?

வாணி -- இன்று, இறைச்சிக்கு விடுதலை போல் தெரிகின்றது. அப்படித்தானே?

க்ளீட்டஸ் -- ஆமாம்! கத்தரிக்காய் வறுவல் சீன முறைப்படி சமைக்கத் தெரிந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

வாணி -- நல்ல எண்ணம், வரவேற்கத்தக்கது.

க்ளீட்டஸ் -- பாராட்டுக்கு நன்றி. தேவையான பொருட்கள் இதோ:
சர்க்கரை 25 கிராம்
சோயா சாஸ் அல்லது மிளகாய் சாஸ் 15 கிராம்
வெங்காயம், இஞ்சி, பூண்டு தேவையான அளவு
மாவு + தண்ணீர் கலவை 20 கிராம்

வாணி -- கத்தரிக்காய் வறுவலுக்குச் சோயா சாஸ் எதற்கு?

க்ளீட்டஸ் -- அதுதான், இந்த உணவு வகைக்கே சிறப்பு.

க்ளீட்டஸ் -- தேவையான பொருட்களை கூறினேன். வாணி, செய்முறையைப் பார்ப்போமா?

வாணி – கண்டிப்பாக. முதலில், கத்தரிக்காய் தோலைச் சீவிக் கொள்ள வேண்டும். 2 சென்டி மீட்டர் அளவு இருக்குமாறு, துண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றின் தோலை உரித்து, நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், மாவு கலவை ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கி வைக்கவும்.

க்ளீட்டஸ் – இதில் சிக்கல் ஒன்றும் இல்லை.

வாணி – அடுத்த செய்முறையும் சிக்கல் இல்லை.
வாணலியை அடுப்பின் மீது வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். பிறகு, கத்தரிக்காய் துண்டுகளைக் கொட்டி, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு, எண்ணெயை வடித்து விட்டு, வதக்கிய கத்தரிக்காய் துண்டுகளைத் தனியே வைக்கவும்.

இப்போது, வாணலியை அடுப்பின் மீது வைத்து, சிறிதளவு சமையல் எண்ணெயை ஊற்றி, இஞ்சி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் கொட்டி வதக்கவும். பிறகு, மாவு கலவை, சோயாசாஸ் அல்லது மிளகாய் சாஸ், கத்தரித்துண்டுகள் ஆகியவற்றை அதில் கொட்டி, நன்றாகக் கலக்கவும். பதமாகும் வரை வதக்கவும்.

க்ளீட்டஸ் – அன்பு நேயர்களே, இப்பொது வாணலியிலிருந்து தட்டுக்கு மாற்றிக் கொண்டால் சீன வகை கத்தரிக்காய் வறுவல் பரிமாறுவதற்குத் தயார்!

வாணி -- சுவை எப்படி இருக்கும் என்று கூற முடியுமா?

க்ளீட்டஸ் -- இனிப்பு, உவர்ப்பு, காரம் என்பனவற்றின் கலவை இந்தக் கத்தரிக்காய் வறுவல்.

வாணி -- என்ன நேயர்களே!எளிய உணவு வகை. வீட்டில், இந்த சீன உணவு வகையை தயாரித்து ருசிப் பார் பிறகு, ஒரு வரி எழுத மறக்க வேண்டாம்.

க்ளீட்டஸ் – வாணி, அடுத்த வாரம் எந்த உணவு வகை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்?

வாணி – அடுத்த முறை,

க்ளீட்டஸ் -- சரி, இத்துடன் இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவோர், வாணி. க்ளீட்டஸ்.