• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-20 16:44:15    
நேயர் நேரம் நிகழ்ச்சி

cri

க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம், ஜெயங்கொண்டம் எம். பாலச்சந்தர்எழுதியது. சீன வானொலி நிகழ்ச்சிகள் மெருகேறிக்கொண்டே உள்ளன. நிகழ்ச்சிகள் சிறப்பாகவும், திறமையுடனும் தொகுக்கப்படுகின்றன. இன்னும் நிகழ்ச்சிகள் சிறப்புடன் வழங்கப்படவேண்டும் என்பது என் ஆவல். என் ஆசை நிறைவேற்றக்கூடியதுதானே என்று கேள்வியெழுப்பியுள்ளார்.கலை: அன்பு பாலச்சந்தர். நிகழ்ச்சியிலும் சரி, நிகழ்ச்சிகளை வழங்கும் எங்களது திறமையிலும் சரி, மாற்றங்கள், முன்னேற்றங்கள் என்பது மெல்ல மெல்ல தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதே எமது கருத்தும். நிகழ்ச்சிகளை மெருகேற்றவும், அழகு சேர்க்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். உங்களை போன்ற நேயர்கள் பலரின் ஆசைகள் நிறைவேற தொடர்ந்து பாடுபடுவோம். உங்கள் அனைவரது ஆதரவுடன் இவையெல்லாம் சாத்தியமே என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கை.

க்ளீட்டஸ்: அடுத்து மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். சீன மகளிர் நிகழ்ச்சியில் துங் சின் லின் நிதியம் பற்ரிக் கேட்டேன். நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின், சிறப்பாக குழந்தைகள் மற்றும் மகளிரின் நலனுக்காக அரும்பாடு பட்ட துங் சின் லின் அம்மையாரின் நினைவாக இந்நிதியம் நிறுவப்பட்டு, மகலீ மற்றும் குழந்தைகளின் நலம் பேண அந்நிதியம் பாடுபட்டு வருவது பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும். இந்நிதியத்தின் குழந்தைகள் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து வருவதன் மூலம், எதிர்கால் சமுதாயம் அறிவியல் அறிவு நிரைந்த திறமைசாலிகளை கொண்டதாகவும், அனிஅவரும் கற்றவர்களாக் ஐருக்கவும், மகளிரும் குழந்தைகளும் உடல் நலனுடன் வாழவும் வழிகோலியுள்ளது என்பதில் ஐயமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கலை: அடுத்து ஆரணி ஜே. அண்ணாமலை எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் புத்தகம் கிடைத்தது நன்றி. நூல் வடிவமைப்பு சிறப்பு. எழுத்துக்களும் பெரிய அளவில் இருப்பதால் படிக்கவும், மனப்பாடம் செய்யவும் தோதாக உள்ளது. கலையரசி அம்மையாரின் முன்னுரையும், பதிப்புரையும் பயனுள்ள கருத்துக்களை கூறியுள்ளன. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பேச்சு மொழியை சிறப்புடன் அச்சிட்டுள்ளமைக்கு பாராட்டுக்கள் என்று எழுதியுள்ளார்.க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி நேயர் பி. அஸ்ஃபாக் அகமது எழுதிய கடிதம். வான் அலையில் தவழ்ந்து வரும் சீனச் செய்திகளை கேட்டு பயன் பெறுவதில் பெருமிதம் அடைகிறேன். அதைவிட மகிழ்ச்சி சீன மொழியைக் கற்கும் வாய்ப்பு கிடைத்ததாகும். வானொலியில் சீன மொழிப்பாடம் நடத்தினாலும், அதன் எழுத்து வடிவங்களை நேரில் காணமுடியாது. ஆனால் அந்தக் குறையை போக்கும் முகமாக நீங்கள் அனுப்பிய தமிழ் மூலம் சீனம் என்ற புத்தகம் என் கரம் கிட்டியதும்
நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக நன்றிகள் பல. விரைவில் சீன மொழியில் தேர்ச்சி அடைவேன். உலகில் அதிக மக்கள் பேசும் மொழியான சீன மொழியை பேச நாங்களும் விரும்புகிறோம் என்று எழுதியுள்ளார்.

கலை: அடுத்து மட்டக்களப்பு மு. அ. பா. சாரா எழுதிய கடிதம். உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டும், கிரகித்தும் வருகிறேன். உங்கள் கடின சேவையினால் உங்கள் நிகழ்ச்சிகள் யாவும் அருமையாக இருக்கின்றது. இருப்பினும் மேலும் புதுப்புது நிகழ்ச்சிகளையும் இணைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும். தற்போதைய நிகழ்ச்சிகளிலும் மேலும் கூடுதலான தகவல்களை உள்ளடக்கி வழங்கவேண்டும், அவ்வண்ணமே என்னையும் உங்கள் நேயராக இணைத்துக்கொள்ளவேண்டும்.
அன்பு சாரா, சீன வானொலி தமிழ்ப்பிரிவு நேயர் குடும்பத்தில் உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

.........மலர்ச் சோலை நிகழ்ச்சி பற்றியும் பாச்சேதுங் சிந்தனை சீனக் கம்யூனிஸ்ட கட்சி பற்றியும் நிகழ்ச்சிகளை கேட்டு பலளி பக்சி சிங்க தெரிவித்த கருத்து இதோ.......

க்ளீட்டஸ்: இந்த வேளையில் தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில நாளேடான தி ஹிண்டுவில் வெளியான செய்தி பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும்.
சீன பாணியில் தமிழ் வானொலியை கேட்பது என்ற தலைப்பில், தமிழகத்தில் சீன வானொலி கேட்கும் எமது அன்பு நேயர்களை பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. வர்த்தகத்திற்காக நாதுலா கணவாய் திறந்து வைக்கப்பட்டமைக்கு முன்னரே, வானலைகளினூடே இருநாட்டு மக்களிடையே தொடர்பு இணைப்பு ஏற்பட்டுள்ளதாகவே சீன வானொலிக்கும், நேயர் பெருமக்களுக்கும் இடையிலான தொடர்பு உணர்த்துகிறது என்று அந்த செய்தி முடிவடைகிறது.
 
கலை: அது மட்டுமல்ல நேயர்களே. சீனாவுக்கும், இந்தியாவுக்குமிடையிலான நட்புப்பாலமாக விளங்கும் சீன வானொலியின் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியில் நேயர்களாகிய நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. தொடரட்டும் நம் நட்பு. வளரட்டும் நம் இருநாட்டு சுமூக உறவு.
 
க்ளீட்டஸ்: இந்தச் செய்தியை இணையச் சுட்டியோடு எமக்கு அனுப்பி வைத்த அன்பு நேயர் சென்னை, ஜெயசக்திவேலுக்கு நன்றிகள்.