• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-21 13:59:41    
சு சோ நகராட்சித் தலைவர் YAN LI

cri

YAN LI

சு சோ நகரம், சீனாவின் ஜியாங் சு மாநிலத்தில் நீண்ட பண்பாட்டு பாரம்பரியமும் வரலாறும் கொண்ட புகழ்பெற்ற நகரமாகும். 2005ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், YAN LI என்பவர், சு சோ நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொது மக்களுடன் இணைந்து பேருந்தில் வேலைக்குச் சென்றதால் நகரவாசிகளிடையில் வரவேற்பைப் பெற்ற அவருக்கு வயது 47 மட்டுமே. சு சோ நகரத்தை எவ்வாறு சீராக, இணக்கமாக வளரச் செய்வது, இந்த வளர்ச்சியின் மூலம் சு சோ மக்கள் நன்மை பெறுவது என்பது, அவர் அடிக்கடி யோசிக்கும் ஒரு விடயமாகும்.

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சு சோவின் நகர மயமாக்கப் போக்கு தீவிரமடைந்து வருவதாலும், வெளியூரிலிருந்து வந்த மக்கள் தொகை விரைவாக அதிகரித்து வருவதாலும், சு சோ நகரவாசிகளின் குடியிருப்பு பற்றிய பாரம்பரிய கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்துறையில் வேறுபட்ட மக்களின் தேவையை நிறைவேற்ற, கடந்த இரு ஆண்டுகளில், நகரப் பரவல், பழைய நகரத்துக்கான சீராக்கம் ஆகியவற்றில் சு சோ நகராட்சி பெரிய மாற்றம் செய்துள்ளது. நகராட்சித் தலைவர் YAN LI கூறியதாவது—

பழைய நகர காட்சி

"நகரவாசிகள் பலர் பழைய நகர காட்சிகளையும் வாழ்க்கையின் வழக்கத்தையும் நினைக்கின்றனர். ஆனால், இளைஞர்கள் சிலரும் வெளியூரிலிருந்து குடிபெயர்ந்த மக்களும் நவீன நகர சூழலை உணர்ந்து ரசிக்க விரும்புகின்றனர். எனவே, சு சோ நகரில், அவர்கள் விரும்பிய இருவகை சூழல்களையும் நிலைநிறுத்தியுள்ளோம்" என்றார் அவர்.

பல்வகை திறமைசாலிகளை ஈர்ப்பது, வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கான வெற்றிகரமான ஏற்பாட்டுக் கொள்கை ஆகியவை, சு சோ நகரம் வேகமான வளர்ச்சியைக் காண்பதற்கான முக்கிய காரணங்களாகும். தலைசிறந்த திறமைசாலிகளை தொடர்ந்து ஈர்ப்பதற்காக, பல்வேறு நிலையிலான பல்வகை வளர்ச்சி மண்டலங்களுக்கு சு சோ நகராட்சி மேலும் பெரும் சுயநிர்ணய உரிமையை வழங்கியுள்ளது.

ஓய்ந்த வாழ்க்கை

தற்போது, சு சோ பொருளாதாரத்தின் மொத்த வளர்ச்சி அளவு, சீனாவின் பல்வேறு பெரிய மற்றும் நடுத்தர நகரங்களில் முன்னணியில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூகக் காப்பீடு உள்ளிட்ட துறைகளில் நகராட்சி பெரும் தொகை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், சு சோ நகரவாசிகளின் வாழ்க்கைக்கு மேலதிக உத்தரவாதங்கள் கிடைத்தன. நகராட்சித் தலைவர் YAN LI கூறியதாவது—

"எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டில் இலவச கட்டாய கல்வி நடைமுறைக்கு வந்தது. பொது மக்களின் வருமானம் இதனால் அதிகரிக்கவில்லை என்ற போதிலும், அவர்களின் செலவு குறைந்தது. பொது மக்களுக்கு இதுவும் நன்மையைக் கொண்டு வந்தது. தவிர, மருத்துவ சிகிச்சைத் துறையில், சமூகக் காப்பீடு, மருத்துவ மீட்புதவி ஆகியவற்றின் மூலம், பொது மக்களுக்கு நாம் ஈட்டு உறுதியை வழங்கலாம்" என்றார் அவர்.

நகரத்தில் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அளவை முயற்சியுடன் வலுப்படுத்தி, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்துவது என்பது, சு சோ நகராட்சியின் பணிகளில் மற்றொரு முக்கிய அம்சமாகும். நகராட்சித் தலைவர் YAN LI கூறியதாவது—

ஒவ்வொரு நாளும் அவற்றின் எஞ்சிய உணவுக்கழிவு

"சு சோவிலுள்ள அனைத்து புராதன நகரப் பகுதிகளும் நீரால் சூழப்பட்டுள்ளன. எனவே, நகரப் பகுதியில் நீர் கட்டுப்பாடு முக்கியமான ஒரு பணியாகும். நமது குடிநீர் மூலவளமான TAI HU ஏரி செவ்வனே பாதுகாக்கப்படுகிறது. இதர நீர் நிலைகளை, புதிய சுற்று கட்டுப்பாடு மூலம், வாழ்க்கைக்கு பயன்படக் கூடிய நீரின் வரையறையை எட்டச் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

சு சோ நகரில் உணவு விடுதிளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் அவற்றின் எஞ்சிய உணவுக்கழிவு 400 டன்னுக்கு மேலாகும். இந்நிலைமையை சமாளிக்க, இவ்வாண்டு ஜனவரி முதல் நாள், நகராட்சித் தலைவர் கட்டளை ஒன்றை சு சோ நகராட்சி வெளியிட்டது. எஞ்சிய உணவுக்கழிவு குப்பைக் கூளங்கள் குறிப்பிட்ட இடத்தில் கையாளப்பட வேண்டும் என்று இக்கட்டளையில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. இதனால், சு சோ நகரிலுள்ள உணவு விடுதிகளின் சுகாதார நிலைமை மேம்படுவது மட்டுமல்ல, மாசுப் பொருளான குப்பைக் கூளங்கள் பொருளாதார மதிப்பு மிக்க புதுப்பிக்கவல்ல எரியாற்றலாகவும் மாறியுள்ளன.

உள்ளூர் அதிகாரி என்ற முறையில் பொது மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்பது, சு சோ நகராட்சித் தலைவர் YAN LI அடிக்கடி கூறும் வாக்கியமாகும். தமது பதவிக்காலத்தில், சு சோ மக்களுக்காக மேலும் அதிகமான நன்மைகளைக் கொண்டு வர வேண்டும. தம் மீதான அவர்களின் நம்பிக்கைக்கு இரண்டகம் செய்யக் கூடாது என்பது தன் விருப்பம் என்று கூறினார் YAN LI.