• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-22 14:20:48    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அரங்குகளும் திடல்களும்
"பெய்ஜிங் ஒலிம்பிக்" எனும் பொது அறிவுப் போட்டிக்கான 3வது கட்டுரை

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு 37 அரங்குகள் தேவைப்படுகின்றன. இவற்றில், புதிதாக கட்டப்பட்ட 19 அரங்குகளும், திருத்தி விரிவாக்கப்பட்ட 11 அரங்குகளும், தற்காலிகப் பயன்பாட்டில் உள்ள 7 அரங்குகளும் அடங்கும். இவற்றுக்கான மொத்த முதலீடு 267 கோடி அமெரிக்க டாலராகும் என மதிப்பிடப்படுகிறது. சீன அரசும் பெய்ஜிங் மாநகராட்சியும் இந்த அரங்குகளின் கட்டுமானத்துக்கு முக்கியத்துவம் தந்து, அரங்குகளின் வடிவமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் தலைசிறந்த குழுக்களைத் தெரிவு செய்துள்ளன. தனிச்சிறப்பு வாய்ந்த, புதிய எண்ணங்கள் நிறைந்து காணப்பட்ட அரங்குகளின் வடிவமைப்புகள், மிகுந்த தொழில் நுட்பங்களையும் கலை மதிப்பையும் பெற்றுள்ளன. தேசிய விளையாட்டு அரங்கு, தேசிய நீச்சல் அரங்கு உள்ளிட்ட முக்கிய அரங்குகளின் வடிவமைப்புகள் பரந்தளவில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. ஒலிம்பிக் கட்டிட வரலாற்றில் இவை தலைசிறந்த படைப்புகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாக்கள் நடைபெறும் முக்கிய இடமான தேசிய விளையாட்டு அரங்கு, தனது சிறப்பான வடிவத்தினால், பறவைக் கூடு என அழைக்கப்படுகிறது. இவ்வரங்கின் கட்டுமானம், 2003ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியில், பெய்ஜிங் மாநகரின் வட பகுதியிலுள்ள ஒலிம்பிக் பூங்காவில் துவங்கியது. தற்போது அதன் கம்பீரமான வெளிப்புறத் தோற்றத்தின் கட்டுமானம் அடிப்படையில் நிறைவுற்றுள்ளது. கட்டுமான இடத்தில் திட்டப்பணிக்குப் பொறுப்பான துணைத் தலைமைப் பொறியியலாளர் LI JIU LIN பேசுகையில், பறவை கூட்டின் இரும்புருக்கு கட்டுக்கோப்பின் மேல் உள்ளிருப்பதை தெரியும் படியான ஒரு மெல்லிய தோலை அணிவிப்பது என்பது, கட்டுமானப் பணியாளரின் அடுத்த கட்ட கடமை என்று கூறினார். இந்த தோலின் சிறப்புப் பெயர், சவ்வு என்பதாகும். கண்ணாடி அல்லது பிளாஸ்திக் போன்ற ஒரு உயர் அறிவியல் தொழில் நுட்பப் பொருள் இதுவாகும். தற்போது கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களில், ஜெர்மனியின் மியூனிக்கிலுள்ள உலகக் கோப்பை அரங்கு மட்டுமே இத்தகைய சவ்வு கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.

உண்மையில், புதிய தொழில் நுட்பங்கள், மூலப் பொருட்கள், முறைகள் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது, பறவைக் கூடு என்ற கட்டிடத்தின் முக்கிய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். பொறியியலாளர் LI கூறியதாவது—

"ஒன்று, திட்டப்பணியின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. உருக்கு கட்டமைப்பு, சவ்வு கட்டமைப்பு முதலிய புதிய தொழில் நுட்பங்கள் அதிகம். தொழில் நுட்ப இன்னல்கள் இவற்றுடன் ஏற்படுகின்றன. பயன்படுத்தக் கூடிய, முந்தைய அனுபவங்கள் இல்லை. இரண்டு, தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு, தற்போதைய வடிவமைப்பு பற்றிய விதிமுறை வரம்பை மீறியுள்ளது" என்றார் அவர்.

எனவே, பறவைக் கூட்டின் கம்பீரமான காட்சியை உருவாக்கும் போக்கு, திரும்பத் திரும்ப இன்னல்களைத் தீர்த்து கடக்கும் போக்காகும். அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, திட்டப்பணி வரையறைக்கான சிறப்பு வடிவமைப்பு மற்றும் புத்தாக்கத்தின் மூலம், கட்டுமானப் பணியாளர்கள் அனைத்து இன்னல்களையும் தீர்த்துள்ளனர். திட்ட வரைப் படத்தை, இரும்புருக்கு மற்றும் கற்காரை கொண்டு உருவான உண்மையான கட்டிடமாக அவர்கள் மாற்றியுள்ளனர்.
வரைவுத் திட்டத்தின்படி, விளையாட்டு, பண்பாடு, கண்காட்சி, வணிக வர்த்தகம், சுற்றுலா, உடற்பயிற்சி, பொழுது போக்கு ஆகியவற்றுக்கு இடையிலான திறன் மாற்றமும், போக்குவரத்து, செய்தித்தொடர்பு, பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றுடனான இணைப்பும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளின் கட்டுமானத்தில் முழுமையாகக் கருதப்பட்டுள்ளன. எதிர்கால வர்த்தகப் பயன்பாட்டுக்கு ஒழுங்கு செய்யக் கூடிய வாய்ப்புகளையும் லாபம் கிடைக்கும் வசதிகளையும் வழங்கி, ஒலிம்பிக் அரங்குகளின் சமூகப் பயனையும் பொருளாதாரப் பயனையும் இயன்ற அளவில் வெளிக்கொணர்வது என்பது இதன் நோக்கமாகும்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், தேசிய விளையாட்டு அரங்கு, பெய்ஜிங் GUO AN கால்பந்து மன்றத்தின் உபசரிப்பு அரங்காகவும், வணிக அலுவலகமாகவும், உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கு மையமாகவும் விளங்கும். தேசிய விளையாட்டு அரங்கு நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ZHANG HENG LI கூறியதாவது—

"2008ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவுற்ற பின், வணிக வசதிகளையும் நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்வோம். சிறப்பு இருக்கை வசதி கொண்ட மேல் மாடம், ஹோட்டல், விளையாட்டுப் போட்டி முதலியவை இவற்றில் அடங்கும். போட்டிக்குப் பிந்தைய பயன்பாட்டு மாதிரியை முழுமையாக உருவாக்குவோம்" என்றார் அவர்.

நீர் கன சதுரம் என அழைக்கப்பட்ட தேசிய நீச்சல் மையம், தேசிய விளையாட்டு அரங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. நீ்ச்சல், நீர் குதிப்பு, நீர் பந்து உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இங்கே நடைபெறும். பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவினால் குறிப்பிடப்பட்ட, ஹாங்காங், மகௌ மற்றும் தைவான் உடன்பிறப்புகள், வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் ஆகியோரின் நன்கொடையை கொண்டு கட்டியமைக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு அரங்கு, நீர் கன சதுரம் மட்டுமே. மந்திர உணர்வு தரும் அதன் நீல நிறமான கட்டிட தோற்றம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வரங்கிற்குப் பொறுப்பான சீன வடிவமைப்பாளர் WANG MIN கூறியதாவது— "தொடக்கத்திலிருந்தே எங்களுக்கு சிறப்பாக செய்ய நல்ல விருப்பம் இருந்தது. மிக நீண்ட நாட்கள் போராடி, இறுதியில் அந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தோம். அதன் கட்டமைப்பு முறைமை, நீர் குமிழ் வடிவிலான மூலக்கூறு கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பை பெரிதாக்கி முழு கட்டிடத்தின் கட்டமைப்பு முறைமையாக அமைக்கின்றோம்" என்றார் அவர்.

தனிச்சிறப்புமிக்க வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், போட்டிக்குப் பிந்தைய பயன்பாடு ஆகியவற்றைத் தவிர, பசுமை ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்ற கருத்துக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் அரங்குகளின் கட்டுமானத்தில் முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. பாய்மர படகு போட்டி நடைபெறும் QING DAO ஒலிம்பிக் பாய்மர படகு மையம் முக்கியத்துவம் வாய்ந்தது.

QING DAO ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி குழுவின் திட்டப்பணி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைத் தலைவர் LI ZHI PENG பேசுகையில், மாசற்ற அறிவியல் தொழில் நுட்பங்கள் ஒலிம்பிக் பாய்மர படகு மையத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மின்சாரம் முதலிய தொழில் நுட்பங்களைத் தவிர, காற்று வளம் மற்றும் சூரிய ஆற்றலால் இயங்கும் விளக்குகளும் இம்மையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஒலிம்பிக் என்ற கருத்தை மக்களின் மனதில் ஆழப்பதியச் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் Hain Verbruggen பெய்ஜிங் ஒலிம்பிக் அரங்குகளின் கட்டுமானம் பற்றி ஆக்கப்பூர்வ மதிப்பீடு வழங்கினார்.



"இவ்வரங்குகளின் கட்டுமானம் சீரான வேகத்தில் முன்னேறி வருகிறது என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். திட்டப்பணிகள் சரியான முறையில் திட்டத்துக்கு ஏற்ப முன்னேற்றப்பட்டு வருகின்றன. அதாவது சீரான பாதையில் இருக்கின்றன என்பது, நான் குறிப்பிட்ட சீரான என்ற சொல்லின் பொருள். இந்தத் திட்டப்பணிகள் உண்மையாக மாறிக் கொண்டிருப்பதைக் கண்டு, பெருமிதமடைகின்றேன்" என்றார் அவர்.

1. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு எத்தனை அரங்குகள் தேவை?
2. பெய்ஜிங் ஒலிம்பிக் விளாயாட்டுப் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாக்கள் நடைபெறும் தேசிய விளையாட்டு அரங்கின் மற்றொரு பெயர் என்ன?
நாளை, இந்தப் பொது அறிவுப் போட்டியின் 4வது கட்டுரை வழங்கப்படும்.