• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-22 14:20:48    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒத்துழைப்பு நகரங்கள்
"பெய்ஜிங் ஒலிம்பிக்" எனும் பொது அறிவுப் போட்டிக்கான 4வது கட்டுரை

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் அனைத்து போட்டிகளும், பெய்ஜிங்கில் மட்டும் நடைபெறப் போவதில்லை. தியன் சின், சின் ஹுவாங் தேள, ஷாங்காய், சென் யாங் ஆகிய நகரங்கள், கால்பந்து போட்டிக்கான கிளைப் போட்டி திடல்களை கொண்டுள்ளன. சிங்தேள நகரில், வள்ள ஓட்டப் பந்தயம் மற்றும் பாய்மர படகு போட்டி நடைபெறவுள்ளன. குதிரையேற்றம் பந்தயம் அனைத்தும், ஹாங்காங்கில் நடைபெறும்.

வள்ள ஓட்டப் பந்தயமும், பாய்மர படகு போட்டியும், கடலில் நடைபெறுகின்ற போட்டிகளாகும். இதனால், நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் சேர்ந்த கடல் போட்டிகள், கடலோர நகரத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பசிபிக்கின் மேற்கு கரையில் அமைந்துள்ள சிங்தேள நகரம், நிதானமான காற்றையும் நீர் ரோட்டத்தையும் கொண்டுள்ள காரணம், சர்வதேச வள்ள ஓட்டப் பந்தயம் நடைபெறுவதற்கு அருமையான இடமாக அமையும். தவிர, இந்நகரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் புகழ்பெற்ற பூங்கா நகரமாகும். பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கான இணைப்பு நகரமாக உறுதிப்படுத்தப்பட்ட பின், சிங் தேள, மேலும் அதிகமான வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்நகரத்தின் தலைவர் XIA GENG கூறியதாவது:

ஒலிம்பிக் பயனுடன், கடந்த சில ஆண்டுகளில், இந்நகரத்தின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், சிங் தேள நகரவாசி மற்றும் கிராமவாசிகளின் வருமானம், ஆண்டுக்கு, முறையே 15.1 விழுக்காடும், 11.8 விழுக்காடும் அதிகரித்துள்ளன என்றார் அவர்.

நகர கட்டுமானம் வளர்ச்சியடைவது என்பது, ஒலிம்பிக் வள்ள ஓட்டப் பந்தயம் கொண்டு வந்த மிகப் பெரிய மாற்றமாகும். புள்ளிவிபரங்களின் படி, கடந்த 4 ஆண்டுகளில், ஒலிம்பிக் வள்ள ஓட்டப் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு, சிங் தெள நகரம், நகரத்தின் கட்டுமானத்தில், சுமார் ஈராயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவச்சிகிச்சை, பண்பாடு, போக்குவரத்து முதலிய துறைகளில், நகராட்சி நிதியின் ஒடுக்கீடு, ஆண்டுக்கு சராசரி 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் காலத்தின் சீரான போக்குவரத்துக்கு உத்தரவாதம் செய்யும் பொருட்டு, சிங்தேள, பொது போக்குவரத்து கட்டுமானத்தை வலுப்படுத்தி, நிலத்தடி குடை வழியையும், வளைகுடா பாலத்தையும் கட்டியமைக்கத் தொடங்கியது. ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியைச் சுற்றி மேற்கொண்ட இந்த அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில், சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பூங்கா நகரமான சிங்தெள, அழகான இயற்கைக் காட்சியை நிலைநிறுத்துவதுடன், மேலும் நவீனமயமாகவும் நாகரீகமாகவும் மாறியுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 28 ஆக்க போட்டிகளில் விளையாட்டு வீரங்கள், விலங்குகளுடன் ஒத்துழைக்கும் ஒரேயொரு போட்டியாக, குதிரையேற்றம் பந்தயம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலான குதிரை பந்தயம் நடைபெற்ற அனுபவத்தைக் கொண்ட ஹாங்காங், பெய்ஜிங் ஒலிம்பிக்கைச் சேர்ந்த குதிரையேற்றம் பந்தயத்தை நடத்துவதற்கான மிக சிறந்த இடமாகும் என்று சர்வதேச விளையாட்டு வட்டாரத்தினர் பொதுவாக கருத்து தெரிவித்தனர்.

குதிரையேற்றம் பந்தயம், ஹாங்காங் மக்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுப் போட்டியாகும். ஹாங்காங்கின் குதிரை ஓட்டிகள் சங்கம், ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமையிலும், குதிரை யேற்றம் பந்தயத்தை, நடத்தி வருகிறது.

ஹாங்காங் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுத் தலைவர் HUO ZHEN TING பேசுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக்கின் குதிரை யேற்றம் பந்தயம் ஹாங்காங்கில் நடைபெறுவது, விளையாட்டு முக்கியத்துவம் மட்டும் வாய்ந்ததல்ல என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இதன் மூலம், தாய்நாடு பற்றிய ஹாங்காங் மக்களின் நாட்டுப்பற்று வலுப்படுத்தப்பட முடியும். கிரேக்கம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்திய பிறகு, தமது விளையாட்டு நிலையையும் ஒட்டுமொத்த நாட்டு ஆற்றலையும் வலுப்படுத்தியதோடு, இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, இளைஞர்களின் நாட்டுப்பற்றை, பெருமளவில் வலுப்படுத்தியது என்பது அனைவருக்கு தெரிந்த விடயமாகும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், கால் பந்து பந்தயம், நேரம் நீடித்திருக்கும் பந்தயமாகும். போட்டிகளுக்கு, வசதி வழங்கும் வகையில், கடந்த சில ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், கால் பந்து பந்தயத்துக்கு கிளை திடல், ஏற்பாடு செய்யப்பட்டன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காலத்தில், ஷாங்காய், சென் யாங், தியன் சின், சின் ஹுவாங் தேள ஆகிய நகரங்கள் ஒவ்வொன்றிலும், 10 கால் பந்து பந்தயங்கள் நடைபெறும்.

இதில் ஷாங்காய் மாநகரம், செழுமையும் பொருளாதார ஆற்றல் மிக்க ஒரு மாநகரமாகும். உலகப் பொருளாதாரத்தில், ஷாங்காயின் தகுநிலை நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருவதோடு, உலகம் இம்மாநகரத்தின் மேலும் அதிகமான கவனம் செலுத்தி வருகிறது. தொழில் முறை டென்னிஸ் வீரர்களின் மாஸ்டர் கோப்பையின் இறுதிப்போட்டி, F1 உலக கார் பந்தய சாம்பியன் போட்டியைச் சேர்ந்த சீனப் பரிசுப்போட்டி, 2007 மகளிர் கால் பந்து உலகக் கோப்பை, 2011ம் ஆண்டின் உலக நீச்சல் சாம்பியன்பட்ட போட்டி, 2007 உலக கோடைக்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முதலியவை, ஷாங்காயில் நடைபெற்ற அல்லது நடைபெறவுள்ள போட்டிகளாகும். ஷாங்காய் மாநகராட்சி இயக்குநர் HAN ZHENG கூறியதாவது:

திறப்புத்தன்மை வாய்ந்த சர்வதேச மாநகரான ஷாங்காய், இத்தகைய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பின் புதிய வடிவத்தையும், ஷாங்காயின் புதிய வடிவத்தையும் வெளிக்காட்ட வேண்டும் என்றார் அவர்.

ஒன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வேறு 6 நகரங்களின் பெயர்கள் என்ன?

இரண்டு, ஹாங்காங்கில் எந்த விளையாட்டுப் போட்டி நடத்தப்படும்?