பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 8ஆம் நாள் பெய்சிங்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியின் கருத்தை மேலும் பிரச்சாரம் செய்து, உலகிற்கு சீனாவின் ஆழ்ந்த பண்பாட்டை காட்டும் பொருட்டு, பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக்குழு, 2005ஆம் ஆண்டில் போட்டிக்கான முழக்கம் மற்றும் மங்கல சின்னத்தை வெளியிட்டது.
"'ஒரே உலகம், ஒரே கனவு'
"'ஒரே உலகம், ஒரே கனவு' என்பது 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கம்"
2005ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 26ஆம் நாளிரவு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ சாங்சுன், பெய்சிங் தொழிலாளர் விளையாட்டு அரங்கில் இதை அறிவித்தார்.
ஒலிம்பிக் முழக்கம், ஒலிம்பிக் கருத்தையும், உபசரிப்பு நாட்டின் பண்பாட்டையும் செறிவாக வெளிப்படுத்துகின்றது. 1988ஆம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது முதல், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்திய ஒவ்வொரு உபசரிப்பு நாடும், ஒரு முழக்கத்தை வெளியிட்டது. எடுத்துக்காட்டாக, 2004ம் ஆண்டு Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், கிரேக்க நாட்டவர்கள், "வீடு திரும்பலை வரவேற்போம்" என்ற முழக்கத்தை பெருமையுடன் வெளியிட்டனர். Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் உலகில் உள்ள ஒலிம்பிக் பெரும் குடும்பத்தின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கான மிக உளமார்ந்த அழைப்பு இம்முழக்கத்தில் அடங்கும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பிறப்பு இடமான கிரேக்கம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தன் பிறப்பு இடம் திரும்புவது குறித்த மகிழ்ச்சியும் பெருமையும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மங்கல சின்னங்கள்
"ஒரே உலகம், ஒரே கனவு" என்ற முழக்கம் வெளிப்படுத்தும் எண்ணம் என்ன? ஒலிம்பிக் எழுச்சியின் அழைத்தலுடன், முழு உலகம், மனித குலத்தின் அருமையான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் பொது விருப்பத்தை இம்முழக்கம் வெளிப்படுத்துகின்றது. மட்டுமல்ல, பெய்சிங் மாநகரவாசிகளும், சீன மக்களும், உலகின் பல்வேறு நாடுகளது மக்களுடன் இணைந்து, அருமையான தாயகத்தை கூட்டாக கொண்டு, நாகரிகப் பயனை கூட்டாக அனுபவித்து, எதிர்காலத்தை கையோடு கைகோர்த்து உருவாக்குவதை இது வெளிப்படுத்துகின்றது. தவிர, மனித குலத்துக்கும், இயற்கைக்குமிடை இணக்கமான உறவையும், மக்களுக்கிடை இணக்கமான உறவையும், சீனப் பாரம்பரிய பண்பாடு எப்பொழுதும் வலியுறுத்தியுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கம், சீனப் பாரம்பரிய பண்பாட்டுடன் தொடர்புடையது. பெய்சிங் பல்கலைக்கழகத்தின் ஒலிம்பிக் துறையின் ஆய்வு தொடர்பான நிபுணர் Zhang Yi Wu கூறியதாவது:
"இந்த முழக்கத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. உலகமும் கனவும் என்பன மையங்களாகும். சீனா, வெளிநாட்டுத் திறப்பு என்ற எழுச்சியை கொண்டு, உலகத்துடன் தொடர் கொள்ள விரும்புகிறது என்பதை ஓரே உலகம் என்பது குறிக்கிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அமைதி போன்ற மனித குலத்தால் நேசிக்கப்படத்தக்க மதிப்பு கருத்து ஆகியவை மீது சீனாவும், உலகமும் கொண்டுள்ள பொது விருப்பத்தை ஓரே கனவு என்பது குறிக்கிறது" என்றார், அவர்.
2005ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பண்பாட்டு நடவடிக்கை ஆணையம், உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெய்சிங் ஒலிம்பிக் முழக்கங்களை திரட்டும் பணியை துவக்கியது. குறுகிய ஒரு திங்கட்காலத்தில், 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கு அதிகமான முழக்கங்களை அணித்திரட்டல் அலுவலகம் பெற்றது. தைவான் மாநிலம் உள்ளிட்ட சீனாவின் அனைத்து மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்கள், ஹாங்காங் மற்றும் மக்கெள சிறப்பு நிர்வாகப் பிரதேசங்கள் ஆகியவற்றிலும், அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் வாழும் சீனர்களும், அன்னிய நண்பர்களும் உற்சாகத்துடன் தத்தமது முழக்கத்தை அனுப்பி வைத்தனர்.
2 லட்சத்து 10 ஆயிரத்துக்கு அதிகமான முழக்கங்கள், ஒலிம்பிக் முழக்கத்தின் உருவாக்கத்துக்கு அதிகப்படியான மூலப்பொருட்களாக மாறின. இம்முழுக்கத்தை உருவாக்க நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு துறைகளின் நிபுணர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மீதான உலகளவிலான மக்களின் நல்வாழ்த்துக்களையும், பெரும் கவனத்தையும் இம்முழக்கம் வெளிப்படுத்துகின்றது. இதற்கிடையில் ஒலிம்பிக் மீது சீன மக்கள் கொண்டுள்ள புரிந்துணர்வையும் இம்முழக்கம் செறிவாக எடுத்துக் காட்டியுள்ளது.
2005ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 11ஆம் நாள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு முந்திய 1000ம் நாளாகும். அன்று, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான மங்கல சின்னங்கள் வெளியிடப்பட்டன. அவை, Bei Bei, Jing Jing, Huan Huan, Ying Ying மற்றும் Ni Ni என்னும் அன்பான 5 Fuwa பொம்மைகளாகும். நீண்டகால வரலாறுடைய சீனப் பண்பாட்டில், வெளிப்படுத்தப்படத்தக்க உள்ளடக்கங்கள் அதிகமாக இருப்பதால், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு 5 மங்கல சின்னங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. 1972ம் ஆண்டு Munich ஒலிம்பிக் விளையாட்டின் போது போட்டிக்கான மங்கல சின்னம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது முதல், தற்போது வரை பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மங்கல சின்னங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
Bei Bei, Jing Jing, Huan Huan, Ying Ying Ni Ni ஆகிய Fuwa என்னும் 5 பொம்மைகளை வடிவமைக்கும் போது, மீன், பாண்டா, ஒலிம்பிக் தீபம், திபெத் மறிமான், குருவி ஆகிய உருவங்கள் இந்த 5 பொம்மைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. கடல், காடு, தீ, பூமி, வானம் ஆகியவற்றுடன் இவை தொடர்புடையவை. மனித குலத்துக்கும் இயற்கைக்குமிடை இணக்கத்தை அடையாளப்படுத்துகின்றன. Bei Bei, Jing Jing, Huan Huan, Ying Ying, Ni Ni ஆகிய 5 பெயர்களின் முதலாவது எழுத்துக்களை இணைத்தால், இது சீன மொழியில் பெய்சிங் உங்களை வரவேற்கிறது என்று பொருள்படும். சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் பெய்சிங் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர், இந்த 5 Fuwa பொம்மைகளுக்கு பெரும் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"5 Fuwa பொம்மைகள் மனிதரின் கையின் 5 விரல்களால் நெருக்கமாக இணைகின்றன. 5 ஒலிம்பிக் வட்டங்களுக்கு ஒத்தாக இருக்கின்றன. மனித குலத்துக்கும், இயற்கைக்குமிடை இணக்கத்தை பிரதிபலிக்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டு, பெய்சிங்கிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்" என்றார், அவர்.
நேயர்களே சீனாவின் "பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி" க்கான முழக்கம் மற்றும் மங்கல சின்னம் பற்றி கேட்டீர்கள். இது பற்றிய இரண்டு கேள்விகள் பின் வருமாறு:
1. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முழக்கம் என்ன?
பதில், ஒரே உலகம், ஓரே கனவு
2.Fuwa என்னும் 5 பொம்மைகளின் பெயர்கள் என்ன?
பதில், Bei Bei, Jing Jing, Huan Huan, Ying Ying மற்றும் Ni Ni
மீண்டும் கேட்கின்றோம்.
1 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முழக்கம் என்ன?
பதில், ஒரே உலகம், ஓரே கனவு
2. Fuwa என்னும் 5 பொம்மைகளின் பெயர்கள் என்ன?
பதில், Bei Bei, Jing Jing, Huan Huan, Ying Ying மற்றும் Ni Ni
நேயர்களே, "பெய்சிங் ஒலிம்பிக்" என்னும் பொது அறிவுப் போட்டியின் மூன்றாவது கட்டுரை நாளை ஒலிபரப்பப்படும். இதை தவறாமல் கேளுங்கள்.
|