• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-22 15:34:51    
பயணம் இனிதாக சில உணவு குறிப்புகள்

cri

விடுமுறைகளில் சுற்றுலா செல்வது அல்லது இதர பயண திட்டங்கள் பலருக்கும் உண்டு. அப்படி செல்ல தயார் செய்யும் போது, பால், உப்பு, இஞ்சி ஆகிய பொருட்களை பையில் எடுத்துச் செல்வது, நல்லது. அது, வழியில் உங்களுக்கு துணை புரிய கூடும்.

 

புதிய இடத்தை அடைந்ததும், களைப்பால் அவ்வூர் உணவுவகைகளைச் சாப்பிடுவதில் அக்கறையின்றி இருப்பது, இயல்பு. அப்போது, ஒரு கோப்பை பாலை குடிக்கலாம். பாலில் புரதசத்து உள்ளதால் அது உடலில் விரைவாககிரகிக்கப்பட்டு, உடம்புக்கு ஆற்றலைத் தருகின்றது.

பால், இரைப்பையைப் பாதுகாக்க உதவும். குறிப்பாக chongqing, yunnan முதலிய இடங்களிலுள்ள உணவு காரம் மிகுந்தது. இவ்விடங்களில் உணவு சாப்பிடும் முன், பாலைக் குடித்து, உறைப்பின் கொடுமைலிருந்து இரைப்பையைப் பாதுகாப்பது, நல்லது என்று, சீன பாரம்பரிய மருத்துவக் கல்லூரியான wangjing மருத்துவமனையின் இயக்குநர் Wangzemin கூறினார்.

பிற இடங்களுக்குச் செல்லும் போது, அங்குள்ள பழங்களை சாப்பிடுவது, திண்ணம். அப்படி பழங்களை கழுவும் போது, உப்பு பெரும் பங்காற்றும். நச்சு தன்மையைப் போக்கும் அதேவேளையில், பழங்களிலுள்ள பூச்சி கொல்லி மருந்துகளையும் நீக்க உதவும். கோடைக்காலத்தில், பெரும்பாலோருக்குச் செருப்பு அணியும் பழக்கம் உண்டு. நாள் முழுவதும் நடந்து திரிவதால், காலில், தூசியும் கிருமியும் அதிகம் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு, இரவில் உப்பு நீரில் கால்களைக் கழுவினால், கிருமிகளை அகற்றி. களைப்பை நீக்கும்.

இஞ்சியால் பயணத்தில் போதான மயக்கத்துக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று பலருக்கும் தெரியும். தவிர, தீக்காயத்தை குணப்படுத்தும் மாமருந்தும் அதுவாகும்.

மருத்துவர் Wangzemin கூறியதாவது, கவனக்குறைவினால் தீக்காயம்பட்டால், அது சூடான நீரால் அல்லது தீயால் எற்பட்டதா என்பதை பொருட்படுத்தாமல், அதில் இஞ்சிசாற்றைத் தடவலாம். அப்படியே சில முறை தடவினால், தீக்காயம் குணம் பெறும். புதிய இடங்களின் சூழல் ஒவ்வாததாக இருக்கும் போது, இஞ்சியை மென்று சாப்பிட்டால், உடல் நலத்துக்குத் துணை புரியும் என்று அவர் கூறினார்.