
தென் சீனாவின் முத்து ஆற்றின் கழிமுகத்திற்கு அருகில் 300 சீன தொழிலாளர்கள் முதலாவது நீருக்கடி இருப்புப்பாதை குகை குடையும் பணிளை தொடங்கியுள்ளனர். இது சீனாவின் முதலாவது நீருக்கடி இருப்புப்பாதை குகையாகவும், எல்லாவகை குகைகளிலும் நீளமானதாகவும் அமையும் என்று சீன இருப்புப்பாதை அமைச்சக குகை அகழ்வு வாரியத் தலைவரும், அத்திட்ட பணியை கட்டியமைப்பவருமான குவோ தா ஹீவன் தெரிவித்தார். இவ்விருப்புப்பாதை குகை அகழ்வு சீனாவின் பொருளாதார ஆற்றல்களில் ஒன்றான குவாங் துங் மாநில தலைநகர் குவாங் சு, சென்ஸன் நகர் குவாங் துங் மற்றும் ஹாங்காங் ஆகியவற்றை இணைக்கும் 146 கிலோமீட்டர் விரைவு தொடருந்து இணைப்புக்கு மிக முக்கிய பகுதியாகும்.
இந்த திட்டம் 10.8 கிலோமீட்டர் நீளத்தில் முத்து ஆற்றின் கழிமுகத்தை ஹ_மென் பாலத்தின் அருகில் ஸிசுயாங்கை கடந்து முத்து ஆற்றில் அமைந்துள்ள குவாங் சோ, தென்கிழக்கு குவாங் சோவில் அமைந்துள்ள துங்குவனையும்; இணைக்கிறது. 2009 எப்ரல் மாதம் நிறைவு அடையும் இப்பணிக்கு நான்கு அகழ்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2.4 பில்லியன் யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டம், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகமான குவாங் சோ-சென்ஸான்- ஹாங்காங் விரைவு தொடருந்து 2010 ஆம் ஆண்டு சேவையை தொடங்கவுள்ளது. இத்தொடருந்து ஒரு மணி நேரத்தில் இந்த மூன்று இடங்களுக்கும் செல்ல உதவும்.

சீனாவில் மகிழ்ச்சியான நகரம்
சீனாவில் மகிழ்ச்சியை தேடுபவரா நீங்கள், ஸிஜிங் மாகாண தலைநகர் ஹாங்ஸ_ செல்லுங்கள். மூன்று மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட 10 மகிழ்ச்சியான நகரங்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் இந்நகர் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஓரியன்டல் அவுட்லுக் என்ற இதழ் நடத்திய இக்கருத்துக்கணிப்பில் வடகிழக்கு சீனாவிலுள்ள லியோன்லிங் மாநில தலைநகர் ஸன்யாங் க்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. சேஜியன் மாநில நகர்களான நிங்போ மற்றும் தாய்சோ அடுத்தடுத்த இடங்களையும், தென் சீனாவிலுள்ள குவாங்துங் மாநிலத்திலுள்ள சூஹாய் மற்றும் சுங்ஷான் நகர்கள் ஐந்தாவது, ஆறாவது இடங்களையும், கிழக்கு ஷான்துங் மாநில சிங்தௌ ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன.
சீனாவின் பொருளாதார நகரங்களில் ஒன்றான ஷாங்ஹாய் எட்டாவது இடத்தையும், தலைநகர் பெய்ஜிங் ஒன்பதாவது இடத்தையும், தென்மேற்கு சீனாவிலுள்ள சிச்சுவான் மாநில தலைநகர் செங்து பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. நவம்பர் தொடக்கத்தில், சிங்குவா செய்தி நிறுவனம், சீன நகராட்சி தலைவர்கள் அமைப்பு மற்றும் சீன மக்கள் தொகை நல அமைப்பு ஆகியவற்றின் மேலாண்மையில் ஷாங்காயிலுள்ள இதழால் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. எந்நகரத்தில் மகிழ்ச்சியான உணர்வு எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை குறிக்க இக்கணிப்பு, மக்களிடம் கேட்டுக்கொண்டது. மக்கள் குறுந்தகவல், இணையதளம் அல்லது களஆய்வு கேள்விகளுக்கான பதில் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

தேசிய புள்ளிவிபரத்துறை மற்றும் உள்@ர் அரசு பணி அறிக்கைகளின் புள்ளிவிபரங்கள் படி எப்ரல் திங்களில் கணக்கிடப்பட்ட 269 உயர்நிலை நகரங்களில் 35 நகரங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு, வருமானம், சமூக பாதுகாப்பு, குடியிருப்பு, மருத்துவ வசதி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி, பணி அழுத்த அதிகரிப்பு மற்றும் தனிநபர்களுக்கும், சமூகத்திற்கும் இடையிலான உறவு ஆகியவை மகிழ்ச்சியான நகர்களை தெரிந்தெடுக்கும் பிரதான குறியீடுகளாகும் என்று ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.
ஹிட்லரின் உலகக்கோளம் 115 ஆயிரம் டாலர்:
இரண்டாம் உலகப்போருக்கு பின் அடால்ப் ஹிட்லர் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உலக உருண்டை 115 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. 91 வயதாகும் ஜான் பார்சாமியன் அமெரிக்க படைவீரராக ஜெர்மனியின் தென் பகுதி ஒபர்சால்ஸ்பெர்க்யில் உள்ள ஹிட்லரின் பெர்க்காப் இல்லத்திற்குள் புகுந்தபோது இவ்வுலக உருண்டையை நினைவுப் பொருளாக எடுத்துவந்துள்ளார். இவருக்கு வயதாகி விட்டதால் இதனை விற்க முடிவு செய்தார்.
இந்த உலக உருண்டை வரலாற்றில் சர்ச்சைக்குரியவராக கூறப்படும் ஜெர்மானிய தலைவர் ஹிட்லரோடு சம்பந்தப்பட்டதால் உயர் விலை பெற்றது என வியன்னாவை மையமாகக் கொண்ட சாவதேச கார்னேநெல்லி ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரி பீட்டர் ஆல்மேயர் பெக் தெரிவித்தார்.
டைட்டானிக் கப்பல் விபத்தில் தப்பி உயிர் பிழைத்த இருவரில் ஒருவர் இறப்பு:
19912 ஆம் ஆண்டில் மூழ்கிய டைடானிக் கப்பலிலிருந்து உயிர் பிழைத்த இருவரில் ஒருவராக நம்பப்படும் பார்பரா வெஸ்ட் டெய்ன்டன் அம்மையார் தனது 96 வது வயதில் காலமானார். அக்டோபர் 16 ஆம் நாள் இங்கிலாந்து கேம்போர்னிலுள்ள மருத்துவமனையில் அவர் காலமானார் என்ற அவருடைய தூரத்து உறவினர் பீற்றர் விஸிக் இறுதி சடங்கு றுருரோ பேராலயத்தில் நடைபெற்றது என்றார். டைட்டானிக் வரலாற்று அமைப்பின் தகவலின்படி அப்போது பிறந்து இரண்டு மாதங்களே ஆன இங்கிலாந்தின் சவுதெம்டனை சேர்ந்த எலிசபெத் கிளாடிஸ் டீன் தற்போது டைட்டானிக் துயர விபத்தில் உயிர் பிழைத்து எஞ்சியுள்ள ஒரே நபராகவுள்ளார்.

1911 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள பெர்னேமௌத்யில் பிறந்த டெய்ன்டன் அம்மையார், 1912 ஆம் ஆண்டு எப்ரல் திங்கள் அப்பெரிய கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலில் மூழ்கி, தனது தந்தை எட்வே அர்தர் வெஸ்ட் உட்பட 1500 மக்கள் பலியான அந்த சம்பவத்தை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை. எட்வே அர்தர் வெஸ்ட், டெய்ன்டனையும், அவரது தாய் மற்றும் சகோதரியையும் கொண்ட உயிர் காக்கும் படகு மூழ்கும் டைட்டானிக் கப்பலிருந்து கடலில் இறக்கப்பட்டபோது கையசைத்து பிரியாவிடை அளித்தார் என்கிறார் மேஸ்சுயசெட்ஸிலுள்ள டைடானிக் வரலாற்று அமைப்பின் கேரன் காமுடா கூறினார்.
|