• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-22 10:34:57    
சிங்காய்-திபெத் இருப்புப் பாதை

cri

தமிழன்பன்.......சிங்காய்-திபெத் இருப்புப் பாதை 2006ம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் நாளன்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்ட பின் இருப்புப் பாதை திபெத்திற்கு எந்த அளவிலான பொருளாதார வளர்ச்சி வாய்புக்களை கொண்டு வந்துள்ளது?

கலை........இருப்புப் பாதை போக்குவரத்திற்கு திறக்கப்பட்ட பின் திபெத்தின் பல்வேறு வாரியங்கள் சேவை உணர்வை வலுப்படுத்தி செயல் திறனை உயர்த்தியுள்ளன. தன்னாட்சி பிரதேச அரசும் 11 பணியகங்களும் உருவாக்கிய கள ஆய்வுக் குழு உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தையும், ச்செசியாங், சிங்காய் மாநிலங்களையும் பார்வையிட்ட பின் நடைமுறையிலுள்ள முதலீட்டாளர்களை உட்புகுத்தும் முன்னுரிமைக் கொள்கையை திருத்தியுள்ளன. பிற இடங்களுடனான உறவை திபெத் விரிவாக்கும் அதேவேளையில் திபெத்தை நாட்டின் ஒட்டுமொத்த சந்தையுடன் இணைக்க பாடுபட்டுள்ளது.

தமிழன்பன்.........இம்முயற்சியில் மகிழ்ச்சிகரமான நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறுங்களேன்.

கலை.........லாசா சியெதுங் விழா, சுமாலாமா சிகர பண்பாட்டு விழா போன்ற பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007ம் ஆண்டு நடைபெற்ற லாசா சியெதுங் பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை நடவடிக்கையில் மொத்தம் 41 ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் மொத்த முதலீட்டு தொகை 751 கோடி யுவானை எட்டியுள்ளது.

தமிழன்பன்........பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை நடவடிக்கை மேற்கொள்ளும் தருணத்தில் திபெத் தனிச்சிறபியல்பு மிக்க சுற்றுலாத் துறையை திபெத் மக்கள் எப்படி வளர்ப்பார்கள்?

கலை......சிங்காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்திற்கு திறந்த பின் இவ்வாண்டின் முதல் ஆறு திங்களில் 7 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் திபெத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். போத்தலா மாளிகை, லொபுலிங்கா கோயில் சக்காஸ் கோயில் போன்ற புகழ் பெற்ற திபெத் கோயில்கள் பயணிகளின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன.

தமிழன்பன்........அருமையான இயற் காட்சி மிகுந்த இடங்களில் கண்டிப்பாக திபெத் இன நாட்டுப்புற பண்பாட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலை.......ஆமாம். சுற்றுலாத் துறையை வளர்க்கும் போது நாட்டுப்புற பண்பாட்டு பாதுகாப்பில் திபெத் தன்னாட்சி பிரதேச அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

தமிழன்பன்.......இது பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.

கலை.......சொல்கின்றேன். திபெத் மக்கள் பொருள் சாரா பண்பாட்டு மரவு செல்வங்களின் பாதுகாப்புப் பணிக்கு மிகவும் முக்கியம் கொடுத்துள்ளனர். இதற்கான பாதுகாப்பு அமைப்பு முறை பூர்வாங்க ரீதியில் நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு சிறுபான்மைத் தேசிய இனங்களிடையில் பாரம்பரிய பண்பாட்டு பரிமாற்றம் செழுமையானது. நாட்டுப்புற இலக்கியமான கசார் மன்னரின் வரலாறு "கசார் என்னும் காவியம்","நாட்டுப்புற நடனங்களான மாங்கான் சியென்சு","சாங்து கோச்சான்","திங்சிங் ஞெப்பா","மன்பா இசை நாடகம்","ச்சாங் இசை நாடகம்",பாரம்பரிய கைவினை தொழில் நுட்பம்,"லாசா பட்ட "பாரம்பரிய திபெத் மருத்துவ மருந்துகள் போன்ற 24 பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ இடங்கள் நாட்டின் முதலாவது தொகுதி அரசு நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம் என்ற பெயர் பட்டியலில் தேர்ந்தெடுத்து சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழன்பன்........நாட்டுபுற பண்பாட்டை பாதுகாக்கும் பணியில் வேறு சாதனைகள் ஏதாவது பெறப்பட்டுள்ளனாவா?

கலை.......இது பற்றி நான் எடுத்து கூறுகிறேன். சிறு பான்மைத் தேசிய இன நாட்டுபுறப் பண்பாடு முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள பல வாய் மொழி வழி கலைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவை நன்றாக ஆராய்ந்து தொகுக்கப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளன. முழுமையற்ற புள்ளிவிபரங்களின் படி, 2006ம் ஆண்டு வரை, பத்தாயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் பேட்டி காணப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான பல்வகை நிழற்படங்களும் 100க்கும் அதிகமான சிறுவட்டுகளும், 500க்கும் மேலான ஒலி நாடாக்களும், பத்தாயிரம் இசை, பாடல்களும், ஒரு கோடி எழுத்துக்களும் பத்திரமாக சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழன்பன்.......எத்தனை ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன?என தெரியுமா?

கலை...... திபெத் இனம் பற்றி மொத்தம் 1000க்கும் மேலான பாரம்பரிய பண்பாட்டு கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 30க்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டு ஆய்வுப் படைப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழன்பன்........கலை சிங்காய்-திபெத் இருப்புப் பாதை கட்டியமைக்கப்பட்ட பின் திபெதிற்கு கொண்டு வந்த மா பெரும் மாற்றங்கள் பற்றி நாம் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் விளக்கிக் கூறியுள்ளோம்.

கலை.......ஆமாம். ஆனால் இது போதாது. வாய்ப்பு இருந்தால் நாம் இது பற்றி வேறோறு சமயம் விவாதிப்போம்.