• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-22 14:20:48    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணி
பெய்ஜிங் ஒலிம்பிக்" எனும் பொது அறிவுப்போட்டிக்கான 1வது கட்டுரை

cri

2001ம் ஆண்டு ஜுலை திங்கள் 13ம் நாள், மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 112வது முழு அமர்வில், பெய்சிங் மாநகருக்கு, 2008ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் உரிமை கிடைத்தது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், சீனாவில் முதல்முறை நடைபெறும். 2001ம் ஆண்டு டிசம்பர் திங்கள், 29வது பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் செயல் குழு நிறுவப்பட்டது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், 2008ம் ஆண்டு ஆகி்ஸ்ட் திங்கள், 8ம் நாள் முதல், 24ம் நாள் நடைபெற உள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் செயல் குழுவின் துணை தலைவர் வாங் வைய், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் ஆயத்த பணியை விளக்கி கூறினார்.

பெய்சிங்கிற்கு, 3000க்கு மேலான ஆண்டுகளின் வரலாறு இருக்கிறது. சீன வரலாற்றில், யுவாங் மீன், ச்சிங் ஆகிய மூன்று வம்சங்களின் தலைநகராகும். 1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்டு, பெய்சிங், புதிய சீனாவின் தலைநகராக மாறியுள்ளது. இப்போதைய பெய்சிங், 1 கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொள்கின்ற நவீன சர்வதேச மாநகராகும்.

உலகின் எழு பெரிய அற்புதங்களில் ஒன்றான பெருசுவர், சீனாவின் பழைய காலத்தின் மன்னர் பூங்கா கோடைகால பூங்கா, உலகில் மிக பெரிய மன்னர் மாளிகை கட்டுமான பெய்ஜிங் அரண்மனை அருங்கலைகாட்சியகம், சீன மன்னர்கள், கடவுளுக்கு வணங்கு செய்த இடமான தியே தாங் கோயில் ஆகிய நான்கு புகழ்பெற்ற இடங்கள், ஐ.நா.வின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால், பண்பாட்டு மரபுச் செல்வங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நாளுக்குநாள் குறைந்து வரும் பழைய பெய்சிங்கில் நிலவும் ஹுதோ மற்றும் ஸ் ஹி யுவாங், நூறுக்கணக்கான ஆண்டுகள் மூலம், பெய்சிங் மக்களின் வாழ்க்கை மாற்றத்தின் வரலாற்று சான்றுகளாக மாறியுள்ளன.

2001ம் ஆண்டு, பெய்சிங்கிற்கு, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் உரிமை கிடைத்தது. கடந்த 6 ஆண்டுகளாக, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு பெய்சிங் மாபெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தனிச்சிறப்புடைய உயர் நிலை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதை பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணியின் லட்சியமாக கொண்டு, பாடுபடுகிறது என்று வாங் வைய் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது

தனிச்சிறப்புடைய உயர் நிலை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது, உலகிற்கு நாம் அளித்த வாக்குறுதி மட்டுமல்ல, சீன அரசு மற்றும் சீன மக்களின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும்ய பொதுவாக கூறின், திட்டமிட்டபடி, இதற்கான பல்வேறு ஆயத்த பணிகள், தடையின்றி மேற்கொள்ளப்பட்டுகின்றன என்றார் அவர்.

தனிச்சிறப்பு, உயர் நிலை ஆகியவை, எட்டு துறைகளில் வெளிகாட்ட வேண்டும் என்று அவர் மேலும் அறிமுகப்படுத்தினார். ஒன்று, உயர் நிலை விளையாட்டு அரங்கு வசதிகள் மற்றும் போட்டிகளுக்கான செயல் பணி இருக்க வேண்டும். இரண்டு, உயர் நிலை துவக்க விழாவும் பண்பாட்டு நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். மூன்றாவது, உயர் நிலை செய்தி ஏடுகளின் சேவையும், நல்ல செய்தி ஏடுகளின் மதிப்ும் இருக்க வேண்டும். நான்காவது, உயர் நிலை பாதுகாப்பு பணி இருக்க வேண்டும். ஐந்தாவது, உயர் நிலை தொண்டர் அணியும் சேவையும் இருக்க வேண்டும். ஆறாவது, உயர் நிலை போக்குவரத்து வசதிகளும், வாழ்க்கைக்கான சேவையும் இருக்க வேண்டும். ஏழாவது, உயர்நிலை நகர புகழ் இருக்க வேண்டும். எட்டாவது, பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள், தலைசிறந்த சாதனைகளை பெற வேண்டும் என்பன, இந்த எட்டு துறைகளில் இடம் பெறுகின்றன.

சுமார் 6 ஆண்டுகளான பயிற்சி மூலம், இந்த லட்சியத்தை மென்மேலும் நெருங்கி வருகிறது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான ஆயத்த பணியின் முக்கிய பகுதியான, ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அரங்குகளின் கட்டுமான முன்னேற்றத்தின் மீது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கவனிக்கப்பட வில்லை என்று வாங் வைய் கூறினார். 37 விளையாட்டு போட்டி அரங்குகளில், 10 அரங்குகளின் கட்டுமானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மைய விளையாட்டு போட்டி அரங்கான தேசிய விளையாட்டு போட்டி அரங்கு, துவக்க விழாவால், 2008ம் ஆண்டின் துவக்கத்தில் நிறைவேற்றும். இது தவிர, பிற விளையாட்டு போட்டி அரங்குகள், இவ்வாண்டின் இறுதியில் நிறைவேற்றும். பிற ஆயத்த பணிக்கு மன நிறைவு தெரிவிக்க சொல்லலாம் என்று வாங் வைய் தெரிவித்தார். தர்போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான செயல் பணி, தொடர்ந்து ஆழமாகி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு போட்டிக்கான திட்டப்பணிகளுக்கான நிகழ்ச்சி நிரல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உலகத்தை ஈர்க்கின்ற பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறி, வெளியிடப்பட்டுள்ளது. தீபத் தொடரோட்ட போக்கில், ஜொல்மோலுங்மா சிகரத்தை அடையும் புத்தாக்க சிந்தனை, உலகிற்கு வியப்பு வழங்கும்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிக்கு பெய்சிங் முழு நகரவாசிகளும், சீன மக்களும் ஆதரவு அளிக்கின்றனர். இதற்கான தோண்டர்களை திரட்டும் பணியில், இந்த ஆதரவு முழுமையாக வெளிகொணர்ந்துள்ளது. இப்போட்டிகளுக்கு மொத்தம், 1 லட்சம் தோண்டர்கள் தேவை. இவ்வாண்டின் ஜூலை திங்களின் இறுதி வரை, விண்ணப்பம் செய்த மக்கள் தொகை, 5 லட்சத்துக்கு மேலை எட்டியுள்ளது என்று வாங் வைய் கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நகருக்கு, நல்ல போக்குவரத்து வசதிகளும், நகர சூழலும் இருக்க வேண்டும். இவ்விரு துறைகளில், கடந்த சில ஆண்டுகளாக, பெய்சிங் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, போக்குவரத்து கட்டாயத்தை தணிவுப்படுத்தும் வகையில், பொது போக்குவரத்தின் முக்கிய பாதை கட்டுமானத்தை பெய்சிங் விரைவுப்படுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் போது, பொது போக்குவரத்துக்கு பிரச்சினை இல்லை.

அதே வேளையில், நகர சுற்றுசூழலை மேம்படுத்துவதில், பெய்சிங் செயலாக்க முன்னேற்றமடைந்துள்ளது.

இப்போது முதல், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வரை சுமார் 8 திங்கள் காலத்தில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பொது விதிகள், சர்வதேச விதிகள், சீன அரசாங்கத்தின் கோரிக்கைகள் ஆகியவற்றுக்கிணங்க, பல்வேறு பணிகளை பெய்சிங், கூடிய விரைவில் மேற்கொள்கின்றது என்று வாங்வைய் குறிப்பிட்டார்.

நமது கூட்டு முயற்சியுடன், தனிச்சிறப்புடைய உயர் நிலை பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காகவும் ஒலிம்பிக் லட்சியத்தின் வளர்ச்சிக்காகவும் ஒரு இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்காகவும் நாம் மேலும் பாடுபடுவோம் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.