• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-23 17:24:28    
சீனாவின் ஊக்கமருந்து பணி

cri

சீனாவின் ஊக்கமருந்து பணி

சீனாவில் ஊக்கமருந்து எதிர்ப்பு மையத்தின் திரை நீக்கு விழா 12ம் நாள் நடைபெற்றது. இம்மையத்தின் கட்டுமான நிறைவு, ஊக்கமருந்து எதிர்ப்பு பணியை சீன அரசு வலுப்படுத்துவதிலான மாபெரும் முன்னேற்றமாகும் என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் Duan Shijie தெரிவித்தார்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, சீனானின் ஊக்கமருந்து எதிர்ப்பு மைய ஆராய்ச்சிக் கூடம் 4500 ஊக்கமருந்து பரிசோதனை பணிகளை மேற்கொள்ளும். பரிசோதனை பணியாளர்களின் எண்ணிக்கை 20 வெளிநாட்டு நிபுணர்கள் உட்பட 150 பேரை எட்டும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு பின், இம்மையம் அன்றாட ஊக்கமருந்து பரிசோதனை பணிகளில் ஈடுபடும் என்று சீனாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு மையத்தின் தலைவர் Du Lijun தெரிவித்தார்.

8வது சிறுபான்மை தேசிய இனங்கள் விளையாட்டு போட்டி

8வது சீனச் சிறுபான்மை தேசிய இனங்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி 10ம் நாளிரவு சீனத் தென் பகுதியிலுள்ள Guang Zhou நகரில் துவங்கியது.
இத்திங்களின் 10 முதல் 18ம் நாள் வரை, இப்போட்டி நடைபெறுகின்றது. 34 பிரதிநிதிக் குழுக்களை சேர்ந்த 6300க்கு அதிகமான வீரர்களும் வீராங்கனைகளும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். வரலாற்றில், முன் கண்டிராத மிகப் பெரிய சிறுபானஅமை தேசிய இனங்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி இதுவாகும்.

"Hai Nan சுற்றுலா" மிதிவண்டி போட்டி

சர்வதேச நெடுஞ்சாலையிலான 2007ம் ஆண்டு "Hai Nan சுற்றுலா" மிதிவண்டி போட்டி நவம்பர் 10ம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள San Ya நகரில் நிறைவடைந்தது.
போலந்தின் Intel-Acation அணியின் வீரர் Robert Radosz 26 மணி 40 நிமிடங்கள் 48 வினாடிகள் என்ற நேரப் பதிவில், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இப்போட்டியின் மொத்த நீளம் 1061.8 கிலோமீட்டராகும். 24 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 18 அணிகளும் 105 வீரர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.