
அரசு சாரா பல்வகை வடிவங்களிலான ஒத்துழைப்புக்கு சீன அரசு பெரிய ஆதரவு அளிக்கிறது. உயர் நிலை அரசு வாரியங்களிடையிலான பரிமாற்றம் மற்றும் கலந்தாலோசனை மூலம், அரசு சாரா ஒத்துழைப்புக்குக் கொள்கையான ஆதரவையும் சீன அரசு அளித்து வருகிறது. சீன, ஐப்பானிய மற்றும் தென் கொரிய பண்பாட்டு அமைச்சர்கள் கருத்தரங்கு, 9வது ஆசிய கலை விழாவின் முக்கிய நடவடிக்கையாகும். கலந்தாலோசனை மூலம், பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் பன்முகங்களிலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். சீனப் பண்பாட்டு அமைச்சர் sunjiazheng இதை வெகுவாகப் பாராட்டினார். அரசுகளிடையிலான தொடர்பு மூலம், பல்வேறு அரசு சாரா குழுக்களின் பரிமாற்றத்துக்கு மேலும் பரந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய பண்பாட்டுப் பரிமாற்றம், சீன-தென் கொரிய உறவுக்கும், சீன-ஜப்பானிய உறவுக்கும், நிதானமான அடிப்படையை ஏற்படுத்தியுள்ளது. Nantong நகரில் நடத்தப்பட்ட இம்மூன்று நாடுகளின் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் அல்லது மூன்று நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்களிடை சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. இம்மூன்று நாடுகளிடையிலான அல்லது இரு தரப்புகளிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் புதிய கட்டத்துக்கு முன்னேற்றப்படும். இம்மூன்று நாடுகளின் பொருளாதாரத்திற்கு, சமூகத்தின் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புக்கும் நலன் தரும் என்று sunjiazheng கூறினார்.

இம்மூன்று நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்கள் கருத்தரங்கில், Nantong அறிக்கையில் கையொப்பமிட்டனர். சீன, ஜப்பானிய மற்றும் தென் கொரியப் பண்பாட்டு ஒத்துழைப்பு அமைப்புமுறையை அவர்கள் கூட்டாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பிரதேசத்தின் நிதானமும் செழுமையும் ஊக்குவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில், தென் கொரியாவில், சீன, ஜப்பனிய மற்றும் தென் கொரியப் பண்பாட்டு அமைச்சர்கள் கருத்தரங்கு மீண்டும் நடத்தப்பட இம்மூன்று நாடுகளின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு ஜப்பானிய பண்பாட்டு ஆணையத்தின் தலைவர் guanqingmubao ஒத்த கருத்து தெரிவித்தார்.

நண்பர்களே, பண்பாட்டுத் தொடர்புக்கான அரசின் ஆதரவு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|