• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-26 16:41:22    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய செய்திகள்

cri

2008 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான கண்கவர் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் அரங்கான புதுப்பொலிவு பெற்ற சீனாவின் தேசிய விளையாட்டரங்கு அடுத்த ஆண்டு ஏப்ரம் திங்களில் முதன் முறையாக ஒரு விளையாட்டு போட்டியை நடத்தவுள்ளது. பறவைக்கூடு என்று தற்போது செல்லமாக அழைக்கப்படும் தேசிய விளையாட்டு அரங்கின் அதி நவீன, அழகான கட்டமைப்பை மக்கள் ஒலிம்பிக்கிற்கு முன்பாகவே நேரடியாக சென்று அமர்ந்து கண்டுகளிக்க ஏப்ரம் திங்களில் நடைபெறும் போட்டி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அடுத்த மார்ச் திங்களில் பறவைக்கூடு விளையாட்டு அரங்கின் முழுமையான கட்டமைப்பு பணிகள் நிறைவேறிய பின், ஏப்ரல் திங்களில் சர்வதேச நடைபந்தய போட்டி நடத்தப்படும் என்று அறியப்படுகிறது. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 200 தடகள வீரர்கள் பங்கேற்கும் இந்த நடை பந்தயத்தின் நெறி பறவைக்கூடு விளையாட்டரங்கையும், அதையொட்டிய ஒலிம்பிக் பூங்காவையும் உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. 2008ம் ஆண்டு சீன தடகல விளையாட்டு போட்டியும் மே திங்களில் இந்த பறவைக்கூடு விளையாட்டரங்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் 55 சிறுபான்மைத் தேசிய இனங்கள் பங்கேற்ற சிறுபான்மைத் தேசிய இன விளையாட்டு போட்டி குவாங்துங் மாநிலத் தலைநகரான குவாங்சோவில் நடைபெற்றது. 15 வகை போட்டிகள் இடம்பெற்ற இந்த சிறுபான்மைத் தேசிய இன விளையாட்டு போட்டி முதன் முறையாக சிறுபான்மைத் தேசிய தன்னாட்சி பிரதேசங்களுக்கு அப்பால் நடந்தது. நவம்பர் 10 முதல் 18 வரை நடந்தேறிய இவ்விளையாட்டுப் போட்டி, பெருமளவில் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த ஒரு நிகழ்வாக அமைந்தது. 1953ம் ஆண்டில் முதன் முதலாக துவங்கிய சிறுபான்மைத் தேசிய இன விளையாட்டு போட்டியில் அப்போது 13 சிறுபான்மைத் தேசிய இனங்களே பங்கேற்றன. 29 ஆண்டுகால் இடவெளிக்கு பின் 1982ம் ஆண்டில் இரண்டாவது சிறுபான்மைத் தேசிய இன விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதன் பின் 1991ம் ஆண்டு முதல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சிறுபான்மைத் தேசிய இன விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

2008 ஒலிம்பிக் போட்டியின் உபசரிப்பு நாடான சீனா, இப்போட்டிக்கான தனது விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இடம்பெறும் பிரதிநிதிக்குழுவை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை மொத்தம் 500க்கு மேற்பட்டோர் சீனாவின் பெயரில் போட்டியில் பங்கேற்பதற்க தகுதிபெற்றுள்ளதாக அறியப்படுகிறது. 26 விளையாட்டுகளின் 211 வகை பந்தயங்களில் பங்கேற்கும் 514 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தகுதி பெற்றுள்ளனர். மொத்தமாக 2008 ஒலிம்பிக்கில் சீனா 550 முதல் 570 வரையான வீரர்கள், வீராங்கனைகளை கொண்ட மிகப்பெரிய பிரதிநிதிக்குழுவாக பங்கேற்கும்.