• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-27 10:41:35    
பாதாலிங் என்ற பெருஞ்சுவர்

cri

பெய்ஜிங் வடமேற்குப் பகுதியிலுள்ள பாதாலிங் என்ற பெருஞ்சுவர், தன் செழுமையான பண்பாட்டு உள்ளடக்கத்தாலும், கம்பீரமான இயற்கைக் காட்சிகளாலும், பத்தாயிரம் நீளமான பெருஞ்சுவரின் பகுதிகளில் மிகப் புகழ்பெற்ற பிரதிநிதியாக திகழ்கிறது.

பண்டைக்காலம் தொட்டு, பாதாலிங் என்ற பெருஞ்சுவர், முக்கியமான ராணுவ போர் தந்திர முனையாக இருந்தது. Chunqiu Zhanguo என்ற காலத்தில், வடக்குப் பகுதியிலுள்ள தேசிய இனத்தின் தாக்குதலைத் தடுப்பதற்காக, இங்கு பெருஞ்சுவர் கட்டியமைக்கப்பட்டது. மிங் வம்சகாலத்திலுள்ள Chang An Ye Hua என்ற ஒரு நூலின்படி: பாதை, இதில் பிரிக்கப்பட்டு, எட்டு திசைகளுக்கும் செல்கிறது. அதனால், பாதாலீங் என அழைக்கப்பட்டுள்ளது. இது, மிக முக்கிய நுழைவாயில் ஆகும். பாதாலிங் பெருஞ்சுவரின் போர் தந்திர தகுநிலை மிக முக்கியமானது. மிங் வம்சகாலத்தில், தற்காப்புத் திறமையை வலுப்படுத்துவதற்காக, பாதாலிங் பெருஞ்சுவரின் 80 ஆண்டுகால சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், பெருஞ்சுவரின் கட்டுமானத்தை ஆணையிடுவதற்காக, ஜப்பானின் எதிர்ப்பு பிரபல ஜெநரல் Qi Jiguang வடக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

வரலாற்றில், பாதாலிங் பெருஞ்சுவர், Ju Yong Guan எனும் நுழைவாயிலை பாதுகாத்திருந்தது. இப்பெருஞ்சுவருக்கும் இன்றைய நான் க்கோக்கும் இடையில், 20 கிலோமீட்டர் நீளமான பள்ளத்தாக்கு இருக்கிறது. பள்ளத்தாக்கில், தற்காப்பு நகரான Ju Yong Guan, இப்பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ளது. பாதாலிங் பெருஞ்சுவர், பள்ளத்தாக்கின் வட பகுதியின் மிக உயரான இடத்தில் இருக்கிறது. இரு மலைகள் இரு பக்கங்களில், நடுவில் ஒரு பள்ளத்தாக்கு உயரமான இடத்தில், அதன் நில அமைப்பு என மிக ஆபத்தானதாக பாதாலிங் பெருஞ்சுவர் அமைந்துள்ளது.

பாதாலிங் பெருஞ்சுவரின் சிறப்பான நில அமைவால், படைகள் கொள்ளையடிக்கப்பட்ட இடமாக மாறியது. எனவே, அப்போது, பெருஞ்சுவரை அமைத்தது, அதிக போர் தந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தப் பகுதியில், வரலாற்றிலுள்ள பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அண்மை வரலாற்றில், அங்கு, Zhan Tianyouவின் தலைமையில் சீனாவால் தற்சார்ப்பாகக் கட்டியமைக்கப்பட்ட முதல் இருப்புப்பாதையான Jingzhang இருப்புப்பாதை கட்டப்பட்டுள்ளது, Sun Yixian பாதாலிங் பெருஞ்சுவரில் ஏறியது முதலிய முக்கிய சம்பவங்கள் உள்ளன.

இது வரை, இப்பெருஞ்சுவர்ப் பகுதி, வரவேற்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 12 கோடியாகும். சராசரியாக ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகள். பல வெளிநாட்டு அரசுத் தலைவர்களும் உலகப் புகழ்பெற்ற பெரியோர்களும் இங்கு வந்து, பயணம் மேற்கொண்டுள்ளனர். இது, சீனாவுக்கும் உலகிற்கும் இடையிலான நட்பின் இணைப்பாக மாறியுள்ளது. இது, உலகிற்கு, சீனத் தேசத்தின் அழகைக் காட்டுகிறது.