• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-27 17:28:44    
கீழ்சிந்தாமணி ம. பிரவீன்குமாரின் கடிதம்

cri

க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் கடிதம், கீழ்சிந்தாமணி ம. பிரவீன்குமார் எழுதியது. செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் சீனாவின் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்களுக்கு சம விகித வருமான வரிவிதிப்பு பற்றிய செய்தித்தொகுப்பு கேட்டேன். சீனாவின் பொருளாதார நிலைமை பற்ரியும், சம விகித வரிவிதிப்பின் பயன்கள் பற்றியும் கேட்டதால், சீனப்பொருளாதார வளர்ச்சி பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.


கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி நேயர் ஏ. எஸ். மஸ்ஃபா எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் எனும் நூல் கிடைத்தது. சீன மொழி கற்கவேண்டும் என ஆசையோடு இருந்தேன். என் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இந்நூல் எனக்கு கிடைத்தது. எளிமையான முறையில் சீன மொழியைக் கற்க இந்நூல் உதவுகிறது. இநூலை வெளியிட்ட சீன வானொலி நிலையத்தினருக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
க்ளீட்டஸ்: வெண்ணந்தூர் எஸ். சுப்ரமணி எழுதிய கடிதம். 2008ம் ஆண்டு சீனத்தலைநகர் பெய்சிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தீபச்சுடர் ஓட்டம் பற்றி விளக்கமாக விளையாட்டுச் செய்திகளில் வாசிக்கக் கேட்டோம். இது பற்றி செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியிலும் விரிவாக கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி மு. ப. சித்தி கதீஜா எழுதிய கடிதம். நான் உங்கள் வானொலியின் நிகழ்ச்சிகளை விரும்பி கேட்டு வருகிறேன். கேள்வியும் பதிலும், மலர்ச்சோலை, அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு, நேயர் விருப்பம் ஆகியவை எனது மனதை கவர்ந்த நிகழ்ச்சிகளாகும். மட்டும்மல்லாது அறிவிப்பாளர்களாகிய உங்கள் குரலும் அழகாக இருக்கிறது. வானொலியின் என்னையும் நேயராக இணைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.


அன்பு கதிஜா நேயராக உங்களை இணைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து நிகழ்ச்சிக்களைக் கேட்டு, உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.
க்ளீட்டஸ்: அடுத்து வளவனூர் உ. ஜோதிலட்சுமி எழுதிய கடிதம். சீனத் தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில், கலைமகள் அவர்கள் கூறிய நவீன மேய்ச்சல் பண்ணையை நேரில் கண்டது போல் இருந்தது. மங்கோலிய இன மக்களின் முன்னேற்றத்தை அறிய உதவியது. சீனாவில் 55 சிறுபான்மைத் தேசிய இனங்கள் இருப்பதாக அறிந்தேன். பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை பற்றி அறிய சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் சகோதர சகோதரிகள் அளித்த அரிய வாய்ப்புக்கு நன்றிகள் பல.
கலை: அடுத்து மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி சென்னை எஸ். ரேணுகாதேவி எழுதிய கடிதம். சீன மூதாதையர் எங்கிருந்து வந்தவர்கள் என்ற ஆய்வு பற்றியும், சிகாகோவிலுள்ள வானளாவிய கட்டிடம் பற்றியும் கேட்டோம். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவில் இறந்தவர்களின் உடலை எரியூட்டாமல், காகிதப்பெட்டியில் சுற்றி, மரத்தினடியில் அடக்கம் செய்துவிடுவதை கேட்டோம். இதன் மூலம் இறந்த உடல் மக்கி மண்ணோடு மண்ணாவதோடு, மரத்திற்கும் பயனளிக்கும். இத்தகைய அரிய செய்திகளை மலர்ச்சோலை நிகழ்ச்சியில் வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.
க்ளீட்டஸ்: அடுத்து அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து மறைமலை நகர் சி. மல்லிகாதேவி எழுதிய கடிதம். சீனாவில் நெல் பயிரிடும் தொழிலில் முன்னேற்றம் கண்டுள்ள அற்புதமான மனிதரை பற்றி அறிந்தோம். 1951ம் ஆண்டு முதல் இவர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். நவசீனா நிறுவப்பட்ட பிறகு சிறப்பாக ஆராய் ஆரம்பித்தார். 83 வயதுடைய இவர் பூச்சிகளை சமாளிப்பதிலும் வல்லவர் என்று அறிந்தேன். இவரை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்றும் கூறுயதைக் கேட்டேன். நாமும் இவரை பாராட்டுவோம்.


கலை...: தொடர்ந்து உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து 5 நாட்கள் ஒலிபரப்பி, பல்வேறு மாவட்ட நேயர் மன்றங்கள் பங்கு பெற்றது சிறப்பாக இருந்தது. எங்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக ஆசிரியர் செல்லத்துரை அcஅர்களின் கவிதை வரிகள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.
க்ளீட்டஸ்: ராமியம்பட்டி சீ. பாரதி எழுதிய கடிதம். டார்பூர் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய சீன நிபுணர்களின் கருத்து கேட்டேன். இதில் அமெரிக்காவின் நிலைப்பாடு, சூடான் மீதான நிர்ப்பந்தம் திணிப்பு , சூடானின் தற்போதைய நிலை ஆகியவற்றை அலசி ஆராய்ந்த செய்தித்தொகுப்பு, விளக்கமாக அமைந்திருந்தது.