• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-27 20:23:35    
இரு கரை ஒத்துழைப்பு

cri

பெரு நிலப் பகுதியில் தைவான் மாணவர்கள் பற்றி எடுத்து கூறுகின்றோம். ஆனால், தைவானில் படிக்கும் பெரு நிலப் பகுதியின் மாணவர்கள் மிக குறைவு. இத்துறையில் கடும் சமனற்ற நிலைமை நிலவுகின்றது. பல்கலைக்கழகங்களுக்கிடை பரிமாற்றத்தின் மூலம் தைவானுக்குச் சென்ற பெரு நிலப் பகுதியின் மாணவர்கள் தைவானில் கூடுதலாக 4 திங்கள் காலம் படிக்க முடியும். மட்டுமல்ல, பட்டம் பெற முடியாது.
பெரு நிலப் பகுதியின் மாணவர்களை வரவழைப்பது, தைவானில் பல்கலைக்கழகத்தின் மாணவர் எண்ணிக்கை பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று கோ மின் தாங் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதி zhou shouxun கூறினார். தைவானின் பல்கலைக்கழகங்களுக்காக அவர் பிரச்சாரம் செய்தார்.


க்கிலுங் நகரில், கடல் உயிரின வாழ்க்கை துறை மிக சிறப்பானது. தெற்கு பகுதியிலான பிங்துங், வேளாண் மற்றும் வேளாண் உற்பத்தி துறையில் மேம்பாடுடையது. கிழக்கு பகுதியிலுள்ள ஹுவா லியன், தைதுங் முதலிய பல்கலைக்கழகங்களில், உயிரின வாழ்க்கைச் சூழல் மற்றும் சுற்றுலா துறையில் கல்வி மூலவளம் அதிகம். சின் சு அறிவியல் பிரதேசத்தின் அறிவியல் தொழில் நுட்ப கல்வி உலகில் முன்னணியில் இருக்கின்றது. இவை எல்லாம் எதிர்காலத்தில் தைவானுக்கு ஈர்ப்பு ஆற்றல் தரும் என்று கருதுகின்றேன் என்றார் அவர்.
கல்வியும் வேலை வாய்ப்பும் பிரிக்க முடியாத 2 பகுதிகளாகும். தற்போது, தைவான் பல்கலைக்கழக மாணவர்கள் பெரு நிலப் பகுதியில் வேலை வாய்ப்புகளைத் தேடுவதில் கட்டுப்பாடு ஏதும் இல்லை. அவர்கள் அனுபவிக்கும் பொது நலன் அதிகரித்து வருகின்றது. பெரு நிலப் பகுதி மக்களைப் போல் அவர்களும் சமூகக்காப்புறுதியை அனுபவிக்கின்றனர்.
கணக்காளர், மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 15 சிறப்பு தொழில்களுக்கான தகுநிலைத் தேர்வு தைவான் மக்களுக்கு திறக்கப்படுவதாக நடப்பு பண்பாட்டு கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது.


பெரு நிலப் பகுதி தைவான் மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் புதிய சந்தையாக மாறியுள்ளது என்று தைவான் ming chuan பல்கலைக்கழகத்தின் வேந்தர் li shuan கருதுகின்றார். இந்த நிலைமையில், கல்வி துறையிலான இரு கரை ஒத்துழைப்பை மேலும் ஆழமாக வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது
இரு கரைகளின் ஆசிரியர்கள் சேர்ந்து பாடம் நடத்தலாம். மாணவர்களுக்கு கூட்டாக வழிகாட்டி, ஆய்வில் ஒத்துழைக்கலாம். பரஸ்பர மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளலாம். இரு கரை உயர் கல்லூரிகள் கூட்டாக கல்வி தரத்தை உயர்த்தலாம் என்றார் அவர்.
மே திங்கள் நடுப் பகுதியில், பெரு நிலப் பகுதியின் புஃச்சியேன் மாநிலத்தின் nan ping கல்லூரி, வூ யி சான் தொழிற்சல்வி கல்லூரி ஆகியவை தைவான் wu feng தொழிற்கல்வி கல்லூரி, nan rong தொழிற்கல்வி கல்லூரி ஆகியவற்றுடன் உடன்படிக்கையை உருவாக்கியது. இதன் படி, இரு தரப்புகள் பரஸ்பர மதிப்பெண்களை ஏற்றுக்கொண்டு, ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடை பரிமாற்றத்தை துவங்கின.

 
தொழிற்கல்வி ஒத்துழைப்பு இரு கரை கல்வி ஒத்துழைப்பில் ஒரு பகுதி தான். பீகிங் பல்கலைக்கழகத்தின் அலுவல் கமிட்டியின் தலைவர் min wei fang கூறியதாவது
வரும் காலத்தில், தைவான் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தைவானின் பல பல்கலைக்கழகங்களுடன் பரிமாற்றத்தை விரிவாக்குவது பற்றிய உடன்படிக்கையை உருவாக்குவோம். மேலும், இரு கரை மாணவர்களுக்கிடை நிலையான பரிமாற்றம் பற்றி உடன்படிக்கையை உருவாக்குவோம் என்றார் அவர்.