• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-27 20:36:09    
சீனாவில் பாக்கு

cri

தாம்பூலம் என்றும் சொல்லப்படும் வெற்றிலை பாக்கை ஒரு திருப்தியான விருந்து உண்டபின், சாப்பிடுவது நம் ஊரில் பொதுவாகக் காணப்படுகிறது.
சீனாவிலும் இந்த பழக்கம் இருக்கிறது என்றால் கொஞ்சம் வியப்பாகத் தான் இருக்கும், அல்லவா?
வெற்றிலை பாக்கு போட்டு வாய் சிவக்க இங்கு மக்களை பார்க்க முடியாது அல்லது நல்ல விருந்து உண்ட பின், யாரும் வெற்றிலை பாக்கு எங்கே என்று தேடுவதை காண முடியாது. ஆனால், பாக்கு சாப்பிடும் பழக்கம் சீனாவின் Hai Nan மாநிலத்தில் இன்றும் உண்டு.


தென் சீனாவின் Hainan மாநிலத்தில், கடந்த 1300 ஆண்டுகாலமாகவே பாக்கு மரம் வளர்க்கும் வழமை காணப்படுகிறது. அவ்வளவு ஏன் சீன மருந்துகளில் முக்கியமாக கருதப்படும் 4 முக்கிய முலப்பொருட்களில் ஒன்று பாக்கு.
கி.பி. 618 முதல் 907 வரையான தங் வம்சக்காலம், கி.பி. 960 முதல் 1270 வரையான சுங் வம்சங்காலம் இவற்றின் போதே பாக்குகள் சீனாவில் பிரபலமாகியிருந்தன. அக்காலத்தில், அரசவைக்கு செல்லும் போது, அல்லது அரசரை காணச் செல்லும் போது, மாநில, மாவட்ட அகிகாரிகள், பாக்கை, ஒரு அன்பளிப்புப் பொருளாக கொண்டு சென்றனராம். காலப்போக்கில், பாக்கு பண்பாடு ஒன்றே உருவானது என்றும் கூறலாம்.
வரலாற்று பதிவேடுகள் மற்றும் உள்ளூர் குறிப்புகள், பதிவுகளின் படி விருந்தினரை உபசரிக்கும் வகையில் பாக்கு தரப்படும் வழமை நீண்ட காலமாகவே, Hai Nan மாநிலத்தில் இருந்து வந்துளளது. கி.பி. 263 முதல் 720 வரையான Jin வம்சக்காலத்தில் Dao Gu என்பவரால் திரட்டப்பட்ட ஒரு கலைக்களஞ்சியத்தில், Hai Nan மக்கள், மதிப்புக்குரிய விருந்தினர்கள் வருகை தரும் போது, பொதுவாகவே, பாக்குக் கொட்டைகளை அவர்களுக்கு அளிக்கும் வழமை இருந்தது என்று குறிப்பிடப்படுகிறது.
வேறு ஒரு பதிவட்டின் படி, தேனீர் கொண்டு அல்ல, பாக்கு கொடுத்தே, விருந்தினர்கள் உபசரிக்கப்பட்டனர் என்று அறியப்படுகிறது. வேறு சில பதிவுகள் கூறும் கருத்து இதுதான், Hai Nan மக்கள் நீண்ட நெடுங்காலமாகவே, பாக்குக் கொட்டைகளை அன்பளிப்புப் பொருளாக, கருதினர். பெறுமதி கொண்ட மதிப்பான நண்பர்களுக்கும், உறவினர்களும் வேறு எதையும் அல்ல பாக்கையே அன்பளிப்பாக தந்தனர்.


800 ஆண்டுகளுக்கு முன், சுங் வம்சக்காலத்தில் வாழ்நத் சு தங்போ என்ற கவிஞர், ஒரு கவிதையில், அழகான ஒரு பெண் தலையில் மல்லிகைப்பூவைச் சூடி, ஒய்யாரமாய் பாக்கை மென்று கொண்டிருந்தாள் என்று வர்ணித்துள்ளார். இது, Hai Nan மக்களிடையே, பாக்கு வளர்ப்பு, பயன்பாடு மற்றும் பாக்கு மீதான பற்று நீண்ட காலமாகவே இருந்துள்ளதை உணர்த்துகிறது.
இன்றைக்கும் கூட, Wang Ning, Ling Shui, Wuzhishan ஆகிய பாக்கு அதிகம் விளையும் பகுதிகளில் உள்ள மக்கள், பாக்கை வரப்பிரசாதமாக, நட்பின் அடையாளமாக கருதுகின்றனர். விருந்தினர் வரும் போது, முதலில் அவர்கள் தருவது, பாக்கைத்தான். பாக்கை கடிக்க முடியாதவர்கள் கூட, மரியாதைக்காக, Hai Nan மக்களின் விருந்தோம்பலை மெச்சும் விதமாய், பாக்குகளை எடுத்துக்கொள்வதுண்டு. வசந்த விழா உள்ளிட்ட விழா நாட்களில், Hai Nan மாநிலத்தின், மக்களது வீடுகளில் எது இருக்கிறதே இல்லையோ, நிச்சயம் பாக்கு இருக்கும்.
இளைஞர், இளம் பெண்களை பொறுத்த வரை, பாக்கு என்பது, காதலின், அன்பின் ஒரு அடையாளம். ஒரு இளைஞன், இளம்பெண் ஒருத்தி மீது காதல் வயப்பட்டால், அப்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் செல்லும் போது, முதலில் அன்பளிப்பாக பாக்கை கொண்டு செல்ல வேண்டுமாம். இது Fang Bing Lang என்று சீன மொழியில் கூறப்படுகிறது. இதற்கு "பாக்கு அளிப்பது" என்று பொருள். இந்த இளைஞன் தரும் பாக்கை, அவன் காதல் வயப்பட்ட விருப்பப்பட்ட பெண்ணிண் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால், அது சம்மதம், ஒப்புதல் என்று பொருள். திருமண விழாவில், பாக்கு மேலும் முக்கியத்துவம் பெறும். மணமக்கள், தங்களை வாழ்த்த வரும் அனைவருக்கும். பாக்கு அளித்து, நன்றி கூற வேண்டும்.


இதை எல்லாம் கேட்டால், என்னடா இது தமிழகத்தில். நாம் தான் பாக்கு வெற்றிலை மாற்றி திருமணம் பேசுகிறோம். சீனாவிலும் அப்படிதானா? என்று ஆச்சரியப்படுகிறோம் அல்லவா?
பாக்கை மென்று சாப்பிடும் போது ஆரம்பத்தில் ஒரு கசப்பான, துவர்ப்பான சுவை இருக்கும். ஆனால் போகப் போக வித்தியாசமான ஒரு உணர்வு ஏற்படும். கவிஞர் Su Dong Po ஒரு கவிதையில் கூறுவதை போல, பாக்கு சாப்பிட்டே போதை கூட அடையலாம்.