• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-28 17:08:06    
இளவரசனும் அவனது வில்லும்

cri

முன்பொரு காலத்தில் சுவான் என்றொரு இளவரசன் வாழ்ந்து வந்தான். அவன் வில்வித்தையில் ஆர்வம் கொண்டவன். வில்வித்தயில் ஓரளவு தேர்ந்தவனும் கூட. தான் எவ்வளவு பெரிய வில்வித்தை வீரன் என்று பிறரால் புகழப்படுவதை மிகவும் விரும்பியவன் இந்த இளவரசன். 15 கிலோ எடை கொண்ட வில்லைக்கூட அவனால் தூக்க முடியாது என்றாலும், அவனது வில்லை கண்டதும் அவனுடன் இருந்த சில அடிவருடிகள். இளவரசே என்ன கணம், என்ன கணம், எப்படி உங்களால் இதை தூக்க முடிகிறது என்று அவனை புகழ்பாடினர். என்னமோ அந்த வில் மிகவும் கணமானது போலவும், அதை அவர்களால் தூக்க முடியாதது போலவும், அந்த வில்லை கொஞ்சம் போல தூக்குவது போல நடித்து இளவரசனை மகிழ்ச்சி படுத்தினார் அந்த அடிவருடிகள். அத்தோடு விட்டார்களா, இளவரசே உங்கள் வில் நிச்சயம் குறைந்தது 45 கிலோவாவது இருக்கும். உங்களை தவிர வேறு யாரால் அதை தூக்கிவிட முடியும் என்று அண்ட புளுகு ஆகாசப் புளுகு புளுகித்தள்ளினார்கள்.

இளவரசனுக்கும் இதையெல்லாம் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. அவனுக்குள் தான் ஒரு பெரிய பலசாலி, வீராதி வீரன் என்ற எண்ணம் அவனுள் வேரூன்றிக்கிடந்தது.
இந்த இளவரசன் வாழ்நாள் முழுதும் 15 கிலோ எடையை ஒத்த வில்லையே பயன்படுத்தினான் என்றாலும், அவனை பொறுத்த வரை தான் 45 கிலோ எடைகொண்ட வில்லை எளிதாக கையாண்டதாகவே எண்ணினான். உண்மையில் 15 ஆனால் பெயரளவில் 45 கிலோ. வெறும் பேச்சுக்காக, தன்னைத்தானே பெரிதாய் நினைத்துக்கொள்வதற்காக, உண்மையை மறுத்து, மறந்து பொய்யான ஒன்றை புகழாய் நினைத்து வாழ்ந்தான் அந்த இளவரசன்.