• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-28 16:28:43    
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி

cri

பெய்ஜிங் 2008ம் ஆண்டு ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணி சீராக நடத்தப்பட்டு வருகிறது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்பு குழுவின் துணை செயல் தலைவர் tang xiao quan அம்மையார் அண்மையிர் தெரிவித்தார்.

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நிகழ்ச்சி நிரல், சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான 20 விளையாட்டரங்குகள், 28 பயிற்சி அரங்குகள், ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமம் ஆகியவை, நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விளையாட்டரங்களுக்கான திட்டப்பணி, தடையின்றி முன்னேறி வருகின்றது. அனைத்து விளையாட்டரங்குகளிலும் வரையறைக்கு இணங்க, தடையற்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். உபசரிப்பு மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பணி, சீராக முன்னேறி வருகின்றது. பெய்ஜிங் 2008ம் ஆண்டு ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அடுத்த ஆண்டு செப்டம்பர் 6ம் நாள் முதல், 17ம் நாள் வரை நடைபெறும் என்று tang xiao quan அம்மையார் தெரிவித்தார்.

ஒரு வாரம் நீடித்த 2007ம் ஆண்டு சீன பூப்பந்து போட்டி, அண்மையில் குவாங்சோ நகரில் முடிவடைந்தது. 23 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 271 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீன வீரர் bao chun lai, மலேசிய வீரர் LEE CHONG WEIயை வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், மலேசிய வீராங்கனை Wong Mew Choo, பிரபல சீன வீராங்கனை xie xing fangகை எதிர்பாராதவிதமாய் தோற்கடித்து, தங்க பதக்கத்தை தட்டிச்சென்றார்.
சீன ஆடவர் இரட்டையர் guo zhen dong/xie zhong bo இணை, இந்தோனைசிய வீரர்கள் மாஸ்கி/கோங்த்லா இணையிடம் தோல்வியடைந்து, வெள்ளி பதக்கத்தை பெற்றனர்.

மகளிர் இரட்டையர் போட்டியில், சீன இணை gao ling/zhao ting ting, தன் அணி தோழிகளை தோற்கடித்து, முதலிடம் வகித்தனர்.
கலப்பு இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டம், இந்தோனேசிய இணையால், தட்டிச்செல்லப்பட்டது.