 இன்றைய இன்ப பயணம் பற்றிய குறிப்பில் Hai nan தீவு பற்றி அறிய உள்ளோம். இத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டால் இக்குறிப்புகள் உங்களுக்குப் பயனுள்ளதாய் அமையும். Hai nan தீவில் பல விளையாட்டு இடங்கள் உள்ளன. ஆனால், குளிர்காலத்தில், சூரிய ஒளி குளியல் மற்றும் கடல்அழகைப் பார்த்து ரசிப்பதற்குமே மிகப் பெரும்பாலான வெளியூர் சுற்றுலா பயணிகள், Hai nan தீவுக்குச் செல்லுகின்றனர். அப்படி செல்லும் சுற்றுலா பயணிகள் அத்தீவிலுள்ள san ya பிரதேசத்தைச் சுற்றி விளையாட தவறக்கூடாது. san ya பிரதேசத்தின் காட்சி, மிக அழகாக இருப்பதோடு நீல கடல் அழகு அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் செழுமை மிக்க இயற்கை காட்சி ஆகும்.

போக்குவரத்து:சுற்றுலா தலங்களின் அட்டவணை படி, போக்குவரத்து நெறிகளை முடிவு செய்தால் செலவின் பெரும் பகுதி, போக்குவரத்துக் கட்டணத்திற்கு மட்டுமே செலவிடப்படும் எனவே போக்குவரத்து செலவைச் சிக்கனப்படுத்தினால், பயணச்செலவு பெரிதும் குறைக்கப்படுவது உண்மை. முதலாவது, தொடர் வண்டியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனென்றால், தொடர் வண்டியின் கட்டணம் குறைவாக இருக்கின்றது. அத்துடன், இரவு நேரங்களில் தொடர் வண்டியில், தூங்கலாம். ஆனால், பெய்சிங்க்கும் Hai nan தீவுக்கும் இடையிலான தொலைவு அதிகமாக இருப்பதால் தொடர் வண்டி மூலம், அதிக நேரம் ஆகிறது. இரண்டாவதாக, விமானத்தைத் தெரிவு செய்வது சிறந்தது, நேரத்தைச் சிக்கனப்படுத்துவது விமானப்பயணத்தின் பயனாகக் கொள்ளலாம். இதனால், விமானப் பயணத்தைப் பெரும்பாலோர் தேர்வு செய்கின்றனர்.

Hai nan தீவின் நெடுஞ்சாலை சீராக இருப்பதால் கார் ஓட்டிச்செல்ல மிக சிறந்தது. வாடகை காரை விட, சொந்த கார் வசதியாக இருக்கும். ஆனால், Hai nan தீவில் பெட்ரோல் அதிக விலையுள்ளதாகும். தங்கும் விடுதி:தற்போது, Hai nan தீவுக்குச் செல்ல சரியான காலமாகும். தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு அறை முன்பதிவு செய்தால், மொத்த செலவு குறையும். தங்கும் விடுதி பதிவு செய்வது சுற்றுலாவின் முக்கியப் பகுதி என்பதை மறந்து விட கூடாது. சுவையான உணவு:மீன், இறைச்சி ஆகியவை Hai nan தீவின் சிறப்பு உணவுகள் ஆகும். இவை சுவையான உணவுகள் மட்டுமல்ல, இதன் விலையும் குறைவாக இருக்கின்றது. san ya பிரதேசத்துக்கு சென்றால், மீன் மற்றும் இறைச்சி வகைகளைச் சாப்பிடுவது உறுதி.

விளையாட்டு:இப்போது, பெய்சிங்கில் குழிப்பந்து விளையாட முடியாது. ஆனால், san ya பிரதேசத்துக்குச் சென்று குழிப்பந்து விளையாடலாம். san ya பிரதேசத்தில் குழிப்பந்து விளையாட கட்டணம் குறைவாக இருப்பதால், அப்பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் குழிப்பந்து விளையாட விரும்புகின்றனர். குறிப்பு:ஆண்டு முழுவதும் san ya பிரதேசத்தின் சராசரி தட்பவெட்பநிலை,21 சென்டிகிரேடாகும். எனவே, இங்கு செல்லும் போது கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிவது சிறந்தது
|