• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-29 17:50:23    
மத்திய கமிட்டியின் அரசியல் குழு

cri

கலை.........வணக்கம் நேயர்களே. இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் தமிழன்பன்ழன்பன் தி. கலையரசி இருவரும் தொடர்ந்து சீனக் கம்யூனிஸட் கட்சி பற்றிய தகவல்களை அறிமுகப்படுத்துகின்றோம்.

தமிழன்பன்.......கலை கடந்த வாரத்தில் மாசேதுங் சிந்தனை பற்றியும் சீனக் கம்யூன்ஸிட் கட்சியின் தேசிய மாநாடு பற்றியும் எனக்கும் நேயர்களுக்கும் அறிமுகப்படுத்தினீர்கள்.

கலை........ஆமாம். மாசேதுங் சிந்தனை பற்றியும் சீனக் கம்யூன்ஸிட் கட்சியின் தேசிய மாநாடு பற்றியும் அறிமுகபடுத்தி அவற்றை நன்றாக புரிந்து கொள்ள உங்களுக்கும் நேயர்களுக்கும் நான் கூறிய விளக்கம் போதாது. வாய்ப்பு இருந்தால் நான் மேலும் கூடுதலாக அறிமுகப்படுத்துவேன்.

தமிழன்பன்......அப்படியிருந்தால் நான் இன்று இரண்டு வினாக்களை கேட்கலாமா?

கலை.......கேளுங்கள்.

தமிழன்பன்......... ஒரு கட்சிக்குத் தலைமைப் பீடம் என்று ஒன்று இருக்க வேண்டும். அப்படிதானே.

கலை......ஆமாம்.

தமிழன்பன்......அப்படியிருந்தால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்ச நிலை தலைமைப் பீடம் எது?

கலை.......இந்தத் தலைமைப் பீடத்தின் பெயர் மத்திய அரசியல் குழு என்பதாகும். இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அமைப்பாதவும் மத்திய தலைமை பீடமாகவும் பங்கு வகிக்கின்றது.

தமிழன்பன்........இது எப்போது நிறுவப்பட்டது?

கலை.......1927ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் நிறுவப்பட்டது.

தமிழன்பன்......... ஆக, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாவிட்டன.

கலை......ஆமாம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் 5வது தேசிய மாநாட்டில் மத்திய அரசியல் குழுவை நிறுவியது.

தமிழன்பன்.......மத்திய அரசியல் குழு எப்படி உருவாக்கப்பட்டது?

கலை........மத்திய கமிட்டியின் முழு அமர்வில் மத்திய அரசியல் குழு வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டது.

தமிழன்பன்.......சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது தேசிய மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி சட்டத்திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

கலை.......மத்திய கமிட்டியின் முழு அமர்வு மத்திய அரசியல் குழுவின் தலைமையில் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும் என்பதே அத்தீர்மானம்.

தமிழன்பன்.......முழு அமர்வு நடைபெறாத காலத்தில் யார் மத்திய கமிட்டியின் கடப்பாட்டை நடைமுறைபடுத்துவர்?

கலை.......மத்திய கமிட்டியின் முழு அமர்வு நடைபெறாத காலத்தில் மத்திய அரசியல் குழுவும் அதன் நிரந்தரக் கமிட்டியும் மத்திய கமிட்டியின் கடப்பாட்டை நிறைவேற்றுகின்றன.

தமிழன்பன்.......அப்படியிருந்தால் மத்திய அரசியல் குழு குறிப்பிட்ட காலத்தில் மத்திய கமிட்டியிடம் பணி பற்றி அறிக்கையிட வேண்டுமா?

கலை.......ஆமாம். குறிப்பிட்ட காலத்தில் மத்திய கமிட்டியிடம் மத்திய அரசியல் குழு பணி பற்றி அறிக்கையிட வேண்டும்.

தமிழன்பன்.......மத்திய அரசியல் குழு நடைமுறைப்படுத்தும் முறை எந்த விதமான முறை?

கலை.........கூட்டுத் தலைமை கோட்பாடாகும். மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் மத்திய அரசியல் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.

தமிழன்பன்........சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நெறி, கோட்பாடு, கொள்கை ஆகியவற்றை நிறைவேற்றுவதில் ஏதேனும் வரையறை உண்டா?

கலை........ஆமாம். இவற்றை கண்டிப்பான முறையில் இவற்றை நிறைவேற்ற வேண்டும்.

தமிழன்பன்.......முக்கிய பிரச்சினைகள் பற்றிய மத்திய அரசியல் குழுவின் தீர்மானங்கள் மீண்டும் மத்திய கமிட்டியால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா?

கலை.......ஆமாம். மத்திய அரசியல் குழு மத்திய கமிட்டியின் தலைமைப் பீடத்தில் பணியாளர்கள் மாற்றம் பற்றியும் கட்சியின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் மேற்கொள்ளும்

தீர்மானங்கள் மத்திய கமிட்டியின் முழு அமர்வில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழன்பன்........நீங்கள் விளக்கியதன் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது, மத்திய கமிட்டியின் முழு அமர்வு நடைபெறாத காலத்தில் மத்திய அரசியல் குழுவும் அதன் நிரந்தர கமிட்டியும் மத்திய கமிட்டியின் கடப்பாட்டை நடைமுறைபடுத்த வேண்டும் ஆகிய தகவல்களை நான் தெளிவாக அறிந்து கொண்டேன். விளக்கி கூறியமைக்கு மிக்க நன்றி.