
பெய்ஜிங்கின் சாங்பிங் மாவட்டத்தில் ஒரு காவல்துறை அதிகாரி, பொது மக்களுக்கு சேவை செய்யும் தனது பணியை அண்மையில் தொடங்கியுள்ளார். இந்த காவல்துறை அதிகாரி ஒரு இயந்திர மனிதன். ரோபோ என்பது தான் சிறப்பு. தனது தலையில் உள்ள மூன்று ஒளிப்படக்கருவிகள். நெஞ்சில் உள்ள ஒரு நுண்துளை ஒளிப்படக்கருவி என நான்கு ஒளிப்படக்கருவிகளால் தனது சுற்றுப்புறத்தை ஆய்வு செய்யும் இந்த இயந்திர மனிதனை பற்றி பெய்ஜிங் டைம்ஸ் நாளேடு செவ்வாய் அன்று செய்தி வெளியிட்டது.
காவல்துறையை அழைக்க வேண்டுமென்றால் பொது மக்கள் அதன் வயிற்று பகுதியில் உள்ள சிகப்பு பொத்தானை அழுத்தினால் போதும். இயந்திர மனிதன் தானே காவல்துறை தலைமையகத்தோடு தொடர்பு கொள்ளும். அதன் நெஞ்சில் பொருத்தப்பட்டுள்ள ஒலிவாங்கி மூலம் பொது மக்கள் காவல்துறை அதிகாரியோடு பேசலாம். இந்த இயந்திர காவல்துறை அதிகாரி ஒளிப்படக்கருவிகள் பொருத்தப்பட முடியாத இடங்களிலும், அதிக மக்கள் நடமாடும் பகுதிகளிலும் பயன் படுத்தப்படுவார். இவ்வாறு பொது மக்களுக்கு பயன்பட்டு, குற்றவாளிகளுக்கு திகிலூட்டுபவராக இருப்பார் என்று சாங்பிங் காவல்துறை தெரிவித்துள்ளது.
02. நிலக்கரி சுரங்க தீ 50 ஆண்டுகளுக்கு பின் அணைக்கப்பட்டது:
வடமேற்கு சீனாவில் 12.43 மில்லியன் டன் நிலக்கரியை கரியாக்கிய நிலத்தடி தீ 50 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கப்பட்டுள்ளது. சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள உள்ள நிலக்கரிவயல் தீ தடுப்பு திட்ட அலுவலகம் தெரிவித்த தக் நிலக்கரி வயலிலான தீ அணைக்கப்பட்டுள்ளது. இதனால் 651 மில்லியன் டன் நிலக்கரி பாதுகாக்கப் பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலக்கரி படுகையை பல ஆண்டுகளாக கண்காணிக்கும் அதிகாரிகள் 2009 ஆம் ஆண்டு பிரதேச மற்றும் தேசிய அதிகாரிகளுக்கு இறுதி அறிக்கை அளிக்கயுள்ளனர் என்று நிலக்கரிவயல் தீ தடுப்பு திட்ட அலுவலக துணைத்தலைவர் ஹெய் சுங்யுங் கூறினார். 9,23,500 சதுரமீட்டர் பரவிய தீ 100 மீட்டர் ஆழத்திற்கு மேலான நிலக்கரி வயலை எரித்துள்ளது. 1950 களில் தொடங்கிய இந்த தீ, ஆண்டுக்கு சல்ஃபர் ஆக்சைடு மற்றும் கார்பன்மோனோக்சைடு உள்பட 70,000 டன் நச்சு வாயுவை வெளியாக்கியுள்ளது என்று ஹெய் கூறினார். 89 மில்லியன் யுவான் செலவான இத்திட்டத்திற்கு சுரங்கத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.
சன்சி வட பகுதிக்கு அடுத்தப்படியாக ஆண்டுக்கு 50 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் சின்சிங் தன்னாட்சி பிரதேச சீனாவின் இரண்டாவது பெரிய நிலக்கரி உற்பத்தி இடமாகும். தக் நிலக்கரி சுரங்கம் சின்சிங் தன்னாட்சி பிரதேசத்திள் இரண்டாவது பெரிய சுரங்கமாகும்.
03. யாசர் அராஃபத் நினைவகம் திறப்பு:
யாசர் அராஃபத் கல்லறை மேல் புதிதாக கட்டப்பட்டுள்ள நினைவகம் நவம்பர் 11 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பளிங்குகல் மற்றும் ஜெருசலேம் கற்களால் கட்டப்பட்டுள்ள இப்புதிய கல்லறை கட்டுமான அமைப்பு புனித குரான் சொற்றொடர்களாலும், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொழுகை இடம், அiயெசநவ மற்றும் அலங்கார நீர்நிலை ஆகியவற்றை கொண்டுள்ளது. அரசு தலைமையகத்திற்கு அருகில் அராஃபத் நினைவு அருங்காட்சியகம் திறக்கவும் பாலஸ்தீனர்கள் திட்டமிட்டுள்ளனர்.
1960 ஆம் ஆண்டுகளில் யாசர் அராஃபத் பத்தா அமைப்பை நிறுவி 1993 இல் இஸ்ரேலோடு கையெழுத்தான தற்காலிக அமைதி உடன்படிக்கைக்கு முன்பு வரை அதை எதிர்ந்து போராட்டத்தை முன்னின்று நடத்தி வந்தார். இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் இவ்வுடன்படிக்கை முடிவுக்கு வரவே, 2000 ஆம் ஆண்டில்; பாலஸ்தீனர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினர். இஸ்ரோலும், அமெரிக்காவும் அமைத்க்கு தடையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அராஃபத் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் பிரான்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
திரை நீக்கு விழாவில், பாலஸ்தீன தேசிய நிர்வாக அமைப்பின் தலைவர் முகமது அப்பாஸ், அராஃபத்தை பின்பற்றுபவராக இருக்க போவதாக ஊடகங்களுக்கு உறுதி அளித்துள்ளார். "இறைவன் நினைத்தால் ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட தனி பாலஸ்தீன பாதையில் தொடர்வோம்" என்று கூறினார்.
04. இணைய தலைமுறையின் முதிய நட்சத்திரம்
இணைய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சொந்தமாக இன்னும் வீடு இல்லாத பலர் இன்றைக்கு சொந்தமாக இணையதளம் வைத்துள்ளனர். இன்னும் பலர் வலைப்பூ என்று அழைக்கப்படும் பிலாக்களை தங்களது கருத்துக்களை உலகறியச் செய்யும் ஒரு வடிவமாக, ஊடகமாக வைத்துள்ளனர். வலைப்பூக்கள் இல்லாத இளவட்டங்கள் இன்றைக்கு குறைவாக இருந்தாலும், அதை அறியாதவர்கள் மிகச் சொற்பமானவர்களே. உண்மையில் இணையத்தில் உலாவவும், வலைப்பூக்களில் வலம் வரவும் வயது ஒன்றும் தடையல்ல. இணையதளம் என்றால் அது எத்தனையாவது மாடி என்று கேட்ட ஒரு மூதாட்டி இன்று இணைய உலகில் நட்சத்திரமாக இருக்கிறார். அவருக்கு வயது 95.
வலைப்பூக்களில் வலம் வரும் இணைய தேனீக்களில் மிக வயதானவர்களில் ஒருவர் இந்த 95 வயது மூதாட்டியான மரியா அமீலியா லோபெஸ். பிலாக் எனும் வலைப்பூ ஏதோ ஒரு காகித நோட்டு புத்தகம் என்றெண்ணிய இந்த மூதாட்டி தனது பேரன் இணையத்தில் உலாவுவதை கண்டு ஈர்க்கப்பட்டு, எனக்கும் வேண்டும் இணையம் என்றார்.
இன்றைக்கு அவரது வலைப்பூவில் அவர் எழுதும் தகவல்களை வந்து வாசித்து செல்வோரின் எண்ணிக்கை 60 ஆயிரம். வயதான மூதாட்டியை எவரும் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. நிறைய பேர் இவர்களை அன்பு செய்வதில்லை. ஆனால் இணையத்தில் 16, 18 வயது இளைஞர்கள் கூட தங்களது வாழ்க்கையை பற்றி பகிர்ந்துகொண்டு, தன்னிடம் ஆலோசனைகள் கேட்பதாக இந்த மூதாட்டி குறிப்பிடுகிறார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இந்த 95 வயது இணைய நட்சத்திரம் கண்பார்வை மங்கிய காரணத்தால் தனது பேரனின் உதவியோடு தனது வலைப்பூக்களில் எழுதுகிறார்http//:amisas.blogspot.com என்ற முகவரியை சொடுக்கினால் இந்த மூதாட்டியின் வலைப்பூ உங்கள் கண்களுக்கு விருந்தாகும்.
|