ஹசாக் இன மக்கள், முக்கியமாக, சிங்கியாங்வின் யி லி ஹசாக் தன்னாட்சி சோயிலும், உருமுச்சியிலும் வாழ்கின்றனர். சிலர், gansu மாநிலத்தின் akesa, ச்சிங்கை மாநிலம் முதலிய இடங்களிலும் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை 11 இலட்சத்துக்கு மேலாகும்.
ஹசாக் இனத்துக்கு சொந்த மொழி உண்டு. இது Altic மொழிக் குடும்பத்தின் tujue கிளையைச் சேர்கிறது. 1959ம் ஆண்டு இலத்தீன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஹசாக் இனமொழியை உருவாக்கப்பட்டது. பல பழைய கவியம், கதைகள்,பழமொழி ஆகியவைகளும், salihai மற்றும் saman, aerkaleke முதலிய புகழ் பெற்ற வரலாற்று காவியங்களும் இவ்வின மக்களிடையே பரவியுள்ளன.

ஹசாக் இன மக்கள், பெரும்பாலும் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான ஆயர்கள் கால்நடைகளை பராமரிப்பதற்கு ஏதுவாக இடம்பெயர்ந்து காலத்தின்படி குடியேறுகின்றனர். எங்கே நீரும் புல் பூண்டுகளும் இருக்கின்றனவோ, அங்கோயே அவர்கள் குடியேறுகின்றனர்.
முன்பு, ஹசாக் இன மக்கள் saman மதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 11வது நூற்றாண்டிற்குப் பின், இஸ்லாம் மதத்தை தழுவ தொடங்கினர்.
வீட்டுகாரர்களுடன் இருக்கின்ற போது, வருந்தினர்கள் அவர்களின் கால்நடைகளைக் கணக்கிட ஹசாக் இன மக்கள் விரும்புவதில்லை. உணவுகளைத் தாங்கும் பெட்டிகளின் மேல் உட்காருவதற்கு அனுமதி கிடைப்பதில்லை. பெற்றோரின் முன்னால் தங்களது குழந்தைகளை பிறர் மொழுமொழுவென்றிக்கிறது என பாராட்டுவதை ஹசாக் மக்கள் விரும்புவதில்லை. இப்படி செய்வதால், குழந்தைக்கு தீயை வந்து வரும் என்று அவர்கள் கருதுகின்றனர். பன்றி, நாய், கழுதை முதலிய விலங்குகளின் இறைச்சி, இயற்கையாக இறந்த விலங்குகள், விலங்குகளின் ரத்தம் ஆகியவற்றை இவர்கள் உண்பதில்லை.

பால், ஆடு பால், manaizi என்ற பானம் ஹசாக் இன மக்களின் அன்றாட பானங்களாகும். அதில், குதிரை பால் சத்துடைய பானமாக அருந்தப்படுகிறது..
தேநீர், ஹசாக் மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடம் வகிக்கின்றது. அவர்கள் முதியோரை அதிகமாக மதிப்பவர்கள். தேநீரை அருந்தும் போது, முதலில் முதியோருக்கு தான் தேநீர் கொடுப்பது வழக்கம்.
குர்பான், rouzi, nawurezi முதலிய விழாக்கள், ஹசாக் இன மக்களின் முக்கிய விழாக்களாகும்.

|