"ஆகஸ்ட் 15ஆம் நாளின் நிலா" என்னும் பாடல் ஒலிபரப்பப்படுகின்றது.
சீனாவின் சந்திர நாட்காட்டியின் படி, ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள், நிலா பெளர்ணமியாகும். சீனாவின் பாரம்பரிய பழக்க வழக்கப்படி, இந்நாளில், குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் ஒன்று கூடி, இந்நாளை கொண்டாடுகின்றனர். வெளியூரில் தங்குவோர், தங்களது சொந்த ஊரிலான தனது குடும்பத்தினரை நினைத்துக் கொள்கின்றனர். ஆகஸ்ட் 15ஆம் நாளன்று, சீனப் படைவீரர்கள், தத்தமது மனைவி மீது கொண்டுள்ள நினைப்பை இப்பாடல் வர்ணிக்கின்றது. தற்கால சீனப் படைவீரர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும், தாய்நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சிக்காகவும் மேற்கொண்டுள்ள அர்ப்பணம் இப்பாடலில் பாராட்டப்படுகின்றது.
|