சீனாவில் காலணிகளின் தயாரிப்பு
cri
கடந்த ஆண்டு, சீனாவின் காலணி தயாரிப்பு தொழில் நிறுவனங்களின் ஆண்டு உற்பத்தி அளவு, ஆயிரம் கோடியைத் தாண்டியது. உலகின் மொத்த உற்பத்தி அளவில் இது, 68 விழுக்காட்டு பங்குகள் வகிக்கிறன.
Guang Dong மாநிலத்தின் Dong Guan நகரில் நிறைவடைந்த முதலாவது சர்வதேச காலணி தயாரிப்பு தொழில் கருத்தரங்கிலிருந்து கிடைத்த செய்தி இவ்வாறு கூறுகிறது.
கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளில், உலகில் காலணி தயாரிப்பு தளம், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா முதலிய வளர்ந்த நாடுகளிலிருந்து, ஆசியாவின் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கிற்கு நகர்ந்தது. இதற்குப் பின், சீனப் பெருநிலப்பகுதி, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு நகர்ந்தது. புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டு, உலகில் தயாரிக்கப்பட்ட 1480 கோடி காலணிகளில், 1350 கோடி காலணிகள், ஆசியாவில் தயாரிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான காலணிகள், சீனப் பெருநிலப்பகுதியில் தயாரிக்கப்பட்டன என்று ஆசிய காலணி தயாரிப்புத் தொழில் சங்கத் துணை தலைவர் Zhang Hua Rong கூறினார்.
|
|