• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-03 15:51:09    
8வது சீனாவின் கலை விழா

cri

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 8வது சீனாவின் கலை விழா, அண்மையில் சீனாவின் மத்திய பகுதியிலுள்ள hubei மாநிலத்தில் முடிவடைந்தது. நாடளவில் நடைபெறும் இக்கலை விழா, அரங்கில் நிகழும் கலைப்படைப்புகளின் சாதனைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

நவம்பர் 5ம் நாள் முதல், hubei மாநில 6 நகரங்களின் ஏறக்குறைய 30 அரங்குகளில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த கலைக்குழுக்கள், தலைசிறந்த படைப்புகளை அரங்கேற்றின. அத்துடன், சீன கலைத்துறையின் உயர்ந்த விருதான wenhua விருதிற்கு அவை போட்டியிட்டன. இக்கலை விழாவில் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகள் பல உள்ளூர் பாரம்பரிய நாடகங்களை தழுவி அமைந்திருந்தன. இளைஞர்களையும், பார்வையாளர்களையும் ஈர்த்து, புது யுகத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தும் வகையில், ஆக்கப்பூர்வமான கலை ஆராய்ச்சிகளைப் படைப்பாளர்கள் மேற்கொள்வதை இது வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 150 ஆண்டுகள் வரலாறு வாய்ந்த chu நாடகம், hubei மாநிலத்தில் அரங்கேற்றப்பட்ட முக்கிய நாடகங்களில் ஒன்றாகும். chu நாடகம், அப்படியே எழுதப்பட்டு அரங்கேற்றப்பட்டது. இந்நாடகம், கதா பாத்திரங்களை வர்ணிப்பதில் தலைசிறந்தது. அதிகமான வாழ்க்கை உணர்வுகளை இது உள்ளடக்கியுள்ளது. ஆனால், மேலதிக மக்களை அரங்குகளுக்கு ஈர்த்து கலைநிகழ்ச்சியைக் கண்டுகளிக்க வைப்பது மற்றும் இளைஞர்களிடையில் எப்படி செல்வாக்கை நிலைநிறுத்துவது என்பது chu நாடகம் உள்ளிட்ட பல பாரம்பரிய நாடகங்கள் கூட்டாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்றாகும். Hubei மாநிலத்தின் wuhan இன் chu நாடகக் குழு, இளைஞர்கள் விரும்பும் மார்ச் திங்களில் தேயிலை மணம் வீசுவது என்று பொருள்படும் sanyuechaxiang என்ற நாடகத்தை இயற்றியது. உள்ளூர் பிரதேசத்தின் தனிச்சிறப்பு, இனிமையான இசை மற்றும் நடைமுறை முக்கியத்துவம் கொண்ட இந்நாடகம், வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது என்று இந்நாடகத்தின் இயக்குனர் கூறினார்.

சீனாவின் பல்வேறு பிரதேசத்தின் பல்வகை பண்பாடுகளை வெளிப்படுத்துவது, பல கலைக்குழுகளுக்கிடையில் புது படைப்புகளை இயற்ற விரைவுபடுத்துவது, இக்கலை விழாவின் நோக்கமாகும். இசை நாடகம், நவீன நாடகம் உள்ளிட்ட பல வடிவங்களில் படைப்புகள், தனிச்சிறப்புகளை வெளிப்படுத்தின.

நண்பர்களே, 8வது சீனக் கலை விழா என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.