• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-04 16:33:40    
மரம் நடுவது பற்றிய திட்டப்பணி

cri

நீண்டகாலமாக மரம் நடுவதன் மூலம், வட கிழக்கு சீனாவின் மேற்குப் பகுதி, சீனாவின் வட பகுதி மற்றும் வட மேற்கு சீனாவின் பெரும்பாலான பகுதியில், மர வளர்ப்பு இடங்களின் அளவு, 100 கோடி கன மீட்டரை நெருங்கியது. 180 கோடி டன் கரிய மில வாயு இம்மரங்களால் கிரகிக்கப்பட்டது. அண்மையில் சீனாவின் Yin Chuan நகரில் நடைபெற்ற தேசிய மணல் தடுப்பு கூட்டத்திலிருந்து கிடைத்த செய்தி இவ்வாறு கூறுகிறது.
வட கிழக்கு சீனாவின் மேற்குப் பகுதி, சீனாவின் வட பகுதி மற்றும் வட மேற்கு சீனாவின் பெரும்பாலான பகுதியின் நிலப்பரப்பு, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 42 விழுக்காடு வகிக்கிறது. முன்பு, இப்பகுதிகளில் தாவரங்கள் சீர்குலைக்கப்பட்டிருந்தன. மணல் மயமாக்கம் மற்றும் மண் அரிப்பு நிலைமை கடுமையானவை. 1979ஆம் ஆண்டு முதல், இப்பகுதிகளில் வனப் பாதுகாப்பு மண்டல திட்டப்பணி நடைமுறைப்படுத்தப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளில், இத்திட்டப்பணிக்கு சீனா சுமார் 400 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. 1999ஆம் ஆண்டு முதல், 2004ஆம் ஆண்டு வரை, இப்பகுதிகளிலான Shan Xi, Gan Su, Ning Xia, சிங்கியாங், உள் மங்கோலியா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பாலைவனமயமாக்க நிலப்பரப்பு, 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் குறைந்துள்ளது. மணல் மயமாக்க நிலப்பரப்பு, சுமார் 8 ஆயிரம் சதுர கிலோமீட்டர் குறைந்துள்ளது.