சீனச் சமூக அறிவியல் கழகத்தின் மதிப்பீடு
cri
2007ஆம் ஆண்டு சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு வேகம் 11.6 விழுக்காட்டை அடையக்கூடும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட அதிகம் என்று சீனச் சமூக அறிவியல் கழகம் இன்று வெளியிட்ட "2008ஆம் ஆண்டுக்கான பொருளாதார நீல அறிக்கை" மதிப்பிடுகிறது. இவ்வாண்டு, ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை சீனா தொடர்ந்து வலுப்படுத்தி மேம்படுத்தி, பொருளாதாரத்தின் வேகமான அதிகரிப்பை விரைவுபடுத்தியது. பொதுவாகக் கூறின், தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நிலைமை சீராகி வருகிறது என்று நீல அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒட்டுமொத்த பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் அதிகரித்து வருவதால், நகரவாசிகளின் வருமானமும் கிராமவாசிகளின் வருமானமும் தொடர்ந்து வேகமாக அதிகரித்துள்ளன. சீனாவின் அன்னிய வர்த்தக சாதகமான நிலுவையும், அன்னிய செலாவணி கையிருப்பும் தொடர்ந்து உயர் வேகத்துடன் அதிகரித்து வருகின்றன. 2007ஆம் ஆண்டு முழுவதிலும், அன்னிய வர்த்தக சாதகமான நிலுவை, கடந்த ஆண்டில் இருந்ததை விட அதிகம். இது, 26 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என்று நீல அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
|
|