• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-04 16:09:55    
தேயிலை மற்றும் குதிரைப் பாதை

cri

பட்டுப்பாதை பற்றி நாம் ஏற்கனவே சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் விரிவாக தகவல்களை தந்தோம். பட்டு வெளியுலகத்துக்கு கொண்டு செல்லப்படும் வழியாகவும், அதன் மூலம் சீனப் பண்பாடும் வெளியுலகத்துக்கு அறிமுகமாகும் காரணமாகும் பட்டுப்பாதை அமைந்தது.


அந்த வகையில் தேயிலையும், சீனர்களால் உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டுக்கொரு பாதை போல், தேயிலைக்கும் ஒரு பாதை இருந்தது. தேயிலை வர்த்தகம் நடைபெற உதவிய இப்பாதை தேயிலை மற்றும் குதிரைப்பாதை என்று அழைக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் குதிரைகளின் குளம்புகளும், மனிதர்களது காலடிகளும் கடந்து சென்ற இந்த பண்டைய பாதை தென் மேற்கு சீனாவில், சிங்காய் திபெத் பீடபூமியையும், சீனாவின் ஒதுக்குப்புறத்தையும் இணைத்தபடி அமைந்திருந்தது.
தேயிலை, உப்பு, சர்க்கரை முதலிய பொருட்கள் திபெத்துக்கும், குதிரைகள், பசுக்கள், கஸ்தூரி, விலங்கு ரோமங்கள் (கம்பளி) மற்றும் இதர உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் சீனப் பெருநிலப்பகுதிக்கும் கொண்டு செல்லப்பட இந்த தேயிலை மற்றும் குதிரைப்பாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.


தங் வம்சக்காலத்தில் (கி.பி 618-907 வரையான) பண்டைய தேயிலை மற்றும் குதிரைப்பாதை முதலில் உருவானது எனலாம். திபெத்தில் நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்பட்ட காலம் வரை, ஏறக்குறைய 1960கள் வரை இந்த பாதை பயன்பாட்டில் இருந்தது. சீராக அமைக்கப்படாத, மேடும் பள்ளமுமாய் கிடந்த இப்பாதை பண்பாட்டு பரிமாற்றத்துக்கும் மதம் மற்றம் இன இடப்பெயர்வுக்கும் குடியேற்றத்துக்கும் வழியாக அமைந்தது என்பது சிறப்பு. இந்த அம்சத்தில் ஏறக்குறைய பட்டுப்பாதையை போன்றே செல்வாக்கு கொண்டது தேயிலை மற்றும் குதிரைப்பாதை.
தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மற்றும் யுன்னான் மாநிலங்கள், திபெத் தன்னாட்சி பிரதேசம் ஆகியவற்றின் குறுக்கே 4000 கி. மீ. நீண்டிருந்தது இந்த தேயிலை மற்றும் குதிரைப்பாதை. நவீன நாகரிகத்தின் வரவால், காணாமல் போன, வழக்கொழிந்த பட்டுப்பாதையை போன்றே தேயிலை மற்றும் குதிரைப் பாதையும் இல்லாது போனது. ஆனால் சீனாவின் வளர்ச்சியில், மேம்பாட்டில் இந்த பாதைகளின் பங்களிப்பும், செல்வாக்கும் அளப்பரியது. சீனாவின் பல்வேறு இனங்கள், குறிப்பாக, தாய், யி, Han, Bai, Naxi, திபெத் முதலிய இனங்களின் பண்பாடு இப்பாதையின் வழியே சந்தித்து, ஒன்று கலந்து, மேம்பட்டன.


சிங்காய் திபெத் பீடபூமியின் Hengduan மலைகளினூடே கடந்து சென்ற தேயிலை மற்றும் குதிரைப் பாதை. அதன் பண்பாட்டு, வரலாற்று மதிப்புக்காக மட்டுமன்றி அறிவியலாளர்கள், நாடாய்வு செய்வோர், பயணிகள் என்று பலரும் பாராட்டும் ஒரு பாதையாக விளங்கியது. இதற்கு முக்கிய காரணம் Hengduan மலைகளை சூழ்ந்து காணப்படும் பல்வகை உயிரினங்களின் செறிவும், சிக்கலான புவி நிலையுமே ஆகும்.