• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-04 16:16:22    
ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன்

cri

2007ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் இடம் பெற்ற ஆதிக் குடி மக்களின் உரிமை பற்றிய அறிக்கை மூலம் 61-வது ஐ.நா பேரவையின் முழு அமர்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட ஆதிக் குடிமக்களின் உரிமை தொடர்பான தீர்மானம் பற்றி அறிய முடிந்தது. மேலும் அதில் நிறைவேற்றப் பட்ட தீர்மான வாசகங்கள் உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மனித குலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பயன்படும்என்பது தின்னம்.


............ விழுப்புரம் முத்துசிவக்குமரன்
புதிய ரகக் கிராமப்பற ஒத்துழைப்பு மருத்துவ முறைமை திட்டத்தின் கீழ் இதுவரை 72 கோடி பேர் சீனாவில் பயன் அடைந்துள்ளார்கள் என்ற செய்தியை படித்தேன். அதிலும் கிராமப்புற விவசாயிகள் 80 விழுக்காட்டுக்கு மேல் இதில் இணைந்து பயன் பெற்றிருக்கிறார்கள் என்ற கூடுதல் தகவலும், கிராமப்புற வளர்ச்சிக்கும் அங்கு வாழும் மக்களின் நல மேம்பாட்டுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மத்திய ஆசியாவின் சீனா, ரஷியா உட்பட 8 நாடுகள் இணைந்து வான் வழி பட்டுப்பாதை அமைப்பது பற்றி உருமுச்சி நகரில் கூடி விவாதித்தன என்ற செய்தியினையும் படித்தேன்.

......... மதுரை 20. என் இராமசாமி
சீனாவில் 1920ல் மிங் மற்றும் சிங் வம்ச காலங்களில் கட்டப்பட்டது . தியந்தான் என்ற சொர்க்கக் கோயில். இது வசந்த காலத்தில் அமோக விளைச்சலுக்காகவும் கோடைகலலத்தில் மழை பெய்யவும் பிரார்த்தனை செய்து, குளிர் காலத்தில் சொர்க்கத்தை நோக்கி வணங்கிய இடமாகும். இது பழங்கால கட்டிடங்களில் சிறந்தது மற்றும் புகழ் பெற்ற கோயில் ஆகும். இதன் சிறப்பை நாளெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்போல் தோன்றுகிறது. இந்த சொர்க்கக் கோயில் சீனாவின் புராதன சிறப்பை வெளி உலகத்திற்கு எடுத்து காட்டுகிறது.

 
.......... இலங்கை யாழ்பாணம் ஈசன்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் "சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனச் சமூகமும்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில், சீனாவில் இணக்க சமூகம் உருவாக்குதல், புதிய சோசலிச கிராமத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன. இணக்க சமூகம் பற்றி கூறும் போது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பல்வேறுபட்ட பொது மக்களின் அடிப்படை கருத்துக்களை எடுத்துக் காட்டுதல் என்பன உள்ளடங்குகிறன.
அடுத்ததாக இணக்க உலகம் பற்றி நோக்கும் போது, நாடுகள் ஒன்றுக் கொன்று உதவி புரிவதுடன், ஒருவர் மற்றொருவர் மீது நல்லிணக்கம் மற்றும் பணிவுடன் நடப்பதை எடுத்துக் காட்டுகிறது.
அடுத்த விடயமாக, 2005ம் ஆண்டு நடைபற்ற "புதிய சோசலிசக் கிராமப்புறத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற கூட்டத்தில்,கிராமப்புறப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், கிராமப்புற தார்மீக நாகரீக உருவாக்கம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


............... பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன்
பண்பாடு பாரம்பரிய பழக்க வழக்கங்கள், இவை அனைத்து நாடுகளிலும் இருந்தபோதிலும் அவை நாட்டுக்கு நாடு வித்தியாசமாக உள்ளன. அந்த வகையில் சீனப் பண்பாட்டு பழக்க வழக்கங்களை பற்றி கூறியபோது எங்கள் வியப்பை மேலும் அதிகப்படுத்தியது. சீன உணவு பழக்கங்களில் உள்ள இங்கிதங்கள் அவர்களின் விருந்தோம்பலில் கடைபிடிக்கும் பண்பாட்டு முறையில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதை தெரிந்து கொண்டதில் சீனக் குடும்பங்களில் சென்று பழகிய அனுபவத்தை தந்தது என்றுதான் கூற வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் சீன மக்களின் மீதான நேசத்தை அதிகப்படுத்துகிறது. அடுத்த வாரத்தில் இன்னும் பல தகவல்களை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.