• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-04 16:22:53    
சீனாவில் சுறுசுறுப்பாக வளர்ந்து வரும் அகன்ற அலைவரிசை இணையம்

cri

இணைய தளத் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியுடன், இணையம் மூலம் மேலும் அதிகமான பணி நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் பாரம்பரிய இணையம் மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற இயலாது. மாறாக, அகன்ற அலைவரிசை இணைய வசதி பெருமளவில் அதிகரித்து வரும் மக்களின் தேவையை நிறைவேற்ற முடியும். இதேவேளையில், தற்காலத் தகவல் தொழில் நுட்பத்தின் முக்கிய பகுதியாகவும் இது மாறியுள்ளது. சீனா ஒரு வளரும் நாடாகும். இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக அகன்ற அலைவரிசை இணையம் சீனாவில் வேகமாக வளர்ந்து வருகின்றது.


அகன்ற அலைவரிசை என்றால் என்ன என்று நீங்கள் கேட்கக் கூடும். தற்போது, அகன்ற அலைவரிசை இணையத்தின் கட்டுமானம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். முதுகெலும்பு இணையம், நகர இணையம், குடியிருப்பு இணையம் ஆகியவை இந்த 3 பகுதிகளாகும். மேலும் தெளிவாக விளக்க வேண்டுமானால், இவை உயர்வேக நெடுஞ்சாலை, நகரப் பாதை, நகர மையத்திலிருந்து ஒவ்வொரு குடும்பத்துக்குச் செல்லும் சாலை ஆகியவற்றுக்குச் சமமாகும். பொதுவாகக் கூறின், முதுகெலும்பு இணைய இணைப்பின் வேகம் 2500 MB, சேரும் இணைப்பின் வேகம் 1 MB அடைந்தால், இது அகன்ற அலைவரிசை இணையமாக அழைக்கலாம்.
அகன்ற அலைவரிசை இணையம் உலகளவில் தகவல் இணையத்தின் அடிப்படை வசதியாக மாறியுள்ளது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளில் தகவல்களை அனுப்புவதில் இது பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றது. சீனாவின் அகன்ற அலைவரிசை இணையம் வேகமாக வளர்ந்து வருகின்றது. சீனப் பொறியியல் கழகத்தின் துணைத் தலைவர் WU HE SHUAN கூறியதாவது,


சீனாவில், இணையத்தைப் பயன்படுத்துவோரில் 70 விழுக்காட்டினர் அகன்ற அலைவரிசை சேவையைப் பயன்படுத்துகின்றனர். தவிர, இந்த விகிதாச்சாரம் திங்களுக்கு ஒரு விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரித்து வருகின்றது என்றார் அவர்.
தேசியப் பொருளாதாரத்தில் அடிப்படை, ஆதாரத்தூண், மற்றும் வழிகாட்டல் தன்மை வாய்ந்த தகவல் மற்றும் செய்தி தொடர்பு தொழில், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்க்கையின் உயர்வுக்கும் இன்றியமையாத பங்கு ஆற்றுகின்றது. சீனாவில்அகன்ற அலைவரிசை இணையத்தின் பரவல், சீன மக்களின் வாழ்க்கை வடிவத்தையும் வாழ்க்கை பழக்கங்களையும் மாற்றிவிடும். எதிர்காலத்தில், குடியிருப்புப் பிரதேசத்தின் அகன்ற அலைவரிசை இணையம், மக்களுக்கு வசதியான விருப்பத் தெரிவு பட நிகழ்ச்சி, விடியோ தொலைபேசி, விடியோ கூட்டம், மின்னணு வர்த்தகம், தொலைக்கற்றல் என்னும் நெடுஞ்தூரக் கல்வி, நெடுஞ்தூர மருத்துவச் சிகிச்சை முதலிய சேவைகளை வழங்கலாம்.

 குடியிருப்பு மக்கள் வீட்டில் தங்கி, தரவு கிடங்கிலான திரைப்பட நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க கோரிக்கை செய்யலாம். ஒரே நேரத்தில் சில நூறு ஏன் சில ஆயிரம் மக்கள் ஒரே திரைப்படத்தை கோரினாலும், திரைப்படம் வழங்கப்படும் வேகத்தை அது பாதிக்க போவதில்லை. இந்த இலக்கை நிறைவேற்றுவது பற்றி சீன தகவல் தொழில் அமைச்சர் ZHANG XIN SHENG கூறியதாவது
அகன்ற அலைவரிசை இணையத்தைப் பரவல் செய்வதுடன், தற்போதைய அகன்ற அலைவரிசை இணையத்தின் update பணியை விரைவுபடுத்த வேண்டும். தற்போதைய அகன்ற அலைவரிசை இணையத்தின் சேரும் தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, அகன்ற அலைவரிசை இணையத்தின் வேகத்தை உயர்த்தி, இதன் நகர மற்றும் முதுகெலும்பு கட்டமைப்பை மேம்படுத்தி, இச்சேவையின் தரத்தையும் நலனையும் இடைவிடாமல் உயர்த்த வேண்டும் என்றார் அவர்.