சிங்காய் ஏரி
சிங்காய் ஏரிக்கு அருகில் உள்ள உயிரின வாழ்க்கைச் சூழல் மேலும் மோசமாகாமல் தவிர்க்கும் பொருட்டு, அடுத்த ஆண்டு முதல், சிங்காய் ஏரி பள்ளத்தாக்கின் உயிரின வாழ்க்கைச் சூழல் மீது சிங்காய் மாநிலம் ஒட்டுமொத்த மேம்பாட்டு திட்டப்பணியை மேற்கொள்ளும். இத்திட்டப்பணிக்கு மொத்தம் 54 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புல்வெளி பாழாவதன் கட்டுப்பாடு, காற்று மற்றும் மணல் தடுப்பு, காடு வளர்ப்பு, நீர் மண் வளப் பாதுகாப்பு, உயிரின வாழ்க்கைச் சூழல் மீதான கண்காணிப்பு முதலியவை இத்திட்டப்பணியில் இடம்பெறுகின்றன. இம்மேம்பாட்டுத் திட்டப்பணி அடுத்த ஆண்டு துவங்கும். திட்டப்படி 2012ஆம் ஆண்டு இது நிறைவேறும். சிங்காய் ஏரி, சிங்காய்-திபெத் பீடபூமியின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு சுமார் 4300 சதுர கிலோமீட்டராகும். இது சீனப் பெருநிலப்பகுதியில் மிகப் பெரிய ஏரியாகும். சீனாவில் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியுமாகும்.
|