ஆசியான் நாடுகளில் யுன்னான் மாநிலத்தின் முதலீடு
cri
இவ்வாண்டின் நவம்பர் திங்கள் இறுதி வரை, தென் சீனாவின் யுன்னான் மாநிலம், ஆசியான் நாடுகளில் 95 அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களை நிறுவியுள்ளது. இந்நாடுகளில் யுன்னான் மாநிலத்தின் மொத்த முதலீட்டுத் தொகை, 30 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. யுன்னான் மாநிலத்தின் வணிக அலுவலகத்திலிருந்து கிடைத்த செய்தி இதை கூறுகிறது. இந்த முதலீட்டுத் தொழில் நிறுவனங்களில், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் 70 விழுக்காடு வகிக்கின்றன என்று தெரிய வருகிறது. யுன்னான் மாநிலத்தின் மொத்த முதலீட்டுத் தொகையில் 80 விழுக்காட்டு பகுதி, மியன்மார், லாவோஸ், வியட்நாம் ஆகிய மூன்று நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
|
|