• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-05 10:34:29    
திபெத்தில் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு

cri

திபெத்தின் லின் ச்சி

மனித குலத்துக்கான கடைசி சுத்தமான நிலம் திபெத் தான் என்று மக்கள் அனைவரும் கூறுகின்றனர். திபெத் பற்றி குறிப்பிடுகையில், அங்குள்ள நீல வானம், வெண்ணிற மேகக் கூட்டங்கள், பச்சை நிற மலை, தூய்மையான நீர் ஆகியவை நினைவில் தோன்றுவது நிச்சயம். ஆனால், திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன், இந்தச் சுத்தமான நிலம் எவ்வளவு காலத்திற்கு நிலைநிறுத்தப்படும் என்ற மக்களின் கவலை தவிர்க்கப்பட முடியாதது. மேலும், சிங்ஹாய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதுடன், திபெத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் பெருமளவு அதிகரிப்பு, திபெத்தின் பலவீனமான உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்பது பற்றியும் மக்கள் கவலைப்படுகின்றனர். இந்தச் சந்தேகத்துடன், திபெத்திலுள்ள லின் ச்சி மாவட்டத்துக்கும் லாசா நகரத்துக்கும் எமது செய்தியாளர் சென்றார்.

கடல் மட்டத்திலிருந்து தாழ்வான இடத்தில் அமைந்துள்ள லின் ச்சியில் செடி கொடிகள் படர்ந்து வளர்கின்றன. நீர் வளம் செழிப்பாக உள்ளது. திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில், உயிரின வாழ்க்கைச் சூழல் பகுதியை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தை லின் ச்சி மாவட்டம் முதலில் முன்வைத்தது. லின் ச்சியிலுள்ள புல்லையும் மரங்களையும் செவ்வனே பாதுகாத்து, திபெத்திற்கான உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு திரையைக் கட்டியமைக்க வேண்டும் என்று இம்மாவட்டம் கூறியது. லின் ச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியகத்தின் உயிரின வாழ்க்கைச் சூழல் பிரிவுத் தலைவர் HUANG GUANG YAO செய்தியாளரிடம் பேசுகையில், வணிகம் மற்றும் முதலீட்டை ஈர்க்கும் போக்கில், சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்கும் திட்டப்பணியை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

சூரிய ஆற்றல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது

"2002ஆம் ஆண்டு இறுதி முதல் 2003ஆம் ஆண்டு தொடக்கம் வரை, நமது மாவட்டத்தில் காரை ஆலை ஒன்றின் கட்டுமானம் துவங்கியது. லின் ச்சி பொருளாதார வளர்ச்சியை பொறுத்து வரை இது நன்மை தரக் கூடியதே. அப்போது நமது பிரதேசத்தின் வளர்ச்சி விரைவாக இருந்தது. காரை பயன்பாட்டு அளவு அதிகம். ஆனால், இந்நிலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, கட்டிமுடிக்கப்படாத இக்காரை ஆலையை மூடி நிறுத்தினோம். இது ஒரு உண்மையான உதாரணம்" என்றார் அவர்.
கண்டிப்பான நிர்வாகத்தைத் தவிர, தூய்மையான எரியாற்றலின் பயன்பாட்டையும் லின் ச்சி மாவட்டம் மும்முரமாக பரவலாக்குகிறது.

லின் ச்சி மட்டுமல்ல, திபெத்திலுள்ள பல இடங்களிலும், சூரிய ஆற்றல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. லின் ச்சி மாவட்டத்தின் பா யீ வட்டத்துக்கு 30 கிலோமீட்டர் தொலைவில், மீத்தேன் வாயு பயன்பாட்டுக்கான முன்மாதிரி கிராமம் ஒன்று உள்ளது. 2006ஆம் ஆண்டு மே திங்களில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அறிவியல் தொழில் நுட்பப் பணியகம் முதலீடு செய்து இக்கிராமத்தில் மீத்தேன் வாயு திட்டப்பணியைக் கட்டியமைத்தது. இவ்வாண்டு 66 வயதான கிராமவாசி சொமாலாம் செய்தியாளரிடம் கூறியதாவது—

மீத்தேன் வாயுவைப் பயன்படுத்துவது

"மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தத் துவங்கிய பின், வீடு சுத்தமாக காணப்படுகிறது. மீத்தேன் வாயு இல்லாத நாட்களில், ஆண்டுக்கு சுமார் 3 வண்டி சுமை மரத் துண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். சமையல், பன்றித் தீனி தயாரிப்பு ஆகியவற்றுக்காக, பகலும் இரவும் விறகுகளைக் எரிக்க வேண்டியிருந்தது. வீட்டுக்குள்ளே உணவு சமைத்து, விறகுகளை எரித்ததால் அசுத்தமாக இருந்தது. தற்போது சுகாதாரத் துறை பெரிதும் மேம்பட்டுள்ளது" என்றார் அவர்.

இக்கிராமத்தை விட்டு, லாசா நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், ஷான் சி மாநிலத்திலிருந்து வந்த சுற்றுச்சூழல் தொண்டர்களை எமது செய்தியாளர் சந்தித்தார். இத்தொண்டர்களில் பெரும்பாலானோர், ஷான் சி மாநிலத்தின் தா தோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களாவர். சி நிங் நகரிலிருந்து புறப்பட்ட அவர்கள் மிதி வண்டியில் 318வது இலக்க தேசிய நெடுஞ்சாலையில் திபெத்துக்குள் நுழைந்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்வதுடன், பயண நெறியின் நெடுகில் வறுமையில் சிக்கியுள்ள துவக்கப் பள்ளிகளின் நிகழ்வு நிலைமை பற்றியும் கள ஆய்வு செய்வது என்பது அவர்களின் நோக்கமாகும். இத்தொண்டர் குழுவின் முன்னணியில் LI JIAN PENG என்னும் மாணவரை எமது செய்தியாளர் பேட்டி கண்டார்.

"அனைவரும் அறிந்தவாறு, ஷான் சி மாநிலத்தில் காற்று மாசுபாடு கடுமையானது. இங்கே பயணமாக வந்து பார்த்து, ஷான் சியுடன் ஒப்பிடுகையில், இங்குள்ள சுற்றுச்சூழல் பாதுக்காப்புப் பணி ஓரளவு நன்றாக உள்ளது. ஒரே முறை பயன்பாட்டுக்கான ப்ளாஸ்டிக் பை என் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. யூ சு எனும் இடம் முதல், இங்கே வரை, இத்தகைய ப்ளாஸ்டிக் பை ஒன்றுமில்லை. வலைப்பின்னல் பையும் மறுபயன்பாடு செய்யத்தக்க காகிதப் பையும் பயன்படுத்தப்படுகின்றன. இச்செயல் மிகவும் நன்றாக உள்ளது என்று கருதுகின்றேன். நீர் மூலவளத்தையும் உள்ளூர் மக்கள் பேணிக்காக்கின்றனர்" என்றார் அவர்.

பயணத்தின் போது, இந்த பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து வேட்டை நடத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல, தங்களது தொண்டர் குழுவுக்குள் பல விதிகளையும் வகுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஒரே முறை பயன்பாட்டுக்கான உணவு பாத்திரங்களைப் பயன்படுத்த மறுப்பது, கண்ட இடங்களில் குப்பைக் கூளங்களை எறியாமல் தவிர்ப்பது, சாலையில் விடப்பட்ட குப்பைக் கூளங்களை தன்னால் இயன்ற அளவில் சேகரிப்பது முதலியவை இவ்விதிகளில் அடங்கும். பெரும்பாலும் இளைஞர்களால் உருவான இந்தக் குழுவில் 60 வயது நெருங்கிய முதியவர் ஒருவரும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பாராத ஒரு வாய்ப்பினால், இந்தத் திபெத்திற்கான மிதி வண்டி பயணத்தில் அவர் கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறியதாவது—

"நிலம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு நல்ல குடி நீர் சூழல் வழங்குவது என்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். ஏனென்றால், சிங்ஹாய்-திபெத் பிரதேசம், சீனாவில் ஒரு பெரிய நீர் தேக்கம். அது மாசுபட்டால், நிலம் சூழ்ந்த பகுதிகளிலுள்ள நிலைமை பற்றி கற்பனை கூட செய்ய முடியாது" என்றார் அவர்.

கடந்த ஆண்டு ஜுலை முதல் நாள் சிங்ஹாய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின், நாடளவில், ஏன் உலகளவில் கூட, திபெத் பயணம் மேற்கொள்ளும் பேரழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சி, திபெத் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பை வழங்கும் அதே வேளை, அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அறைகூவலையும் கொண்டு வந்துள்ளது. பல்வேறு நிலை வாரியங்களின் பெரும் கவனம் மற்றும் ஆக்கப்பூர்வ பங்கெடுப்புடன், இன்றுவரை, திபெத்தில் நீலமான வானமும் தூய்மையான நீரும் கொண்ட அழகான காட்சிகள் காணப்படலாம். இது மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.