வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல நிகழ்ச்சியின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் வானிலையை வர்ணிக்கும் வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம்.
வாணி – ஆமாம். என்னை பின்பற்றி, மீளாய்வு செய்யுங்கள். முதலில் சில புதிய சொற்கள். 最高, zui gao. இங்கே, zui என்றால் மிகவும் என்று பொருள். Gao என்பது உயர்வு. 最高, zui gao.
க்ளீட்டஸ் --最高, zui gao. மிகவும் உயர்வான
வாணி – அடுத்து, 最低, zui di. இங்கே 低 di என்பது தாழ்வு最低, zui di.
க்ளீட்டஸ் --最低, zui di. மிகவும் தாழ்ந்த
வாணி -- 气温. qi wen, வெப்பநிலை.
க்ளீட்டஸ் --气温. qi wen, வெப்பநிலை.
வாணி -- 今天最高气温22度。Jin tian zui gao qi wen 22 du.
க்ளீட்டஸ் --今天最高气温22度。Jin tian zui gao qi wen 22 du. இன்று மிக உயர் வெப்ப நிலை 22 திகிரி செல்சியஸ்.
வாணி -- 今天最低气温10度。Jin tian zui di qi wen 10 du
க்ளீட்டஸ் --今天最低气温10度。Jin tian zui di qi wen 10 du. இன்று மிக தாழ்ந்த வெப்ப நிலை 10 திகிரி செல்சியஸ்.
வாணி – கடந்த வாரம், உச்சரிப்பு பகுதியில் x என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டோம்.
க்ளீட்டஸ் – ஆமாம், இவற்றுடன் மேலும் 2 முதல் ஒலிகளை மீளாய்வு செய்தோம்.
வாணி – என்னைப் பின்பற்றி இவற்றை வாசியுங்கள். J, q, x
க்ளீட்டஸ் –J, q, x
வாணி -- J, q, x இந்த 3 ஒலிகளின் வேறுப்பாட்டைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
க்ளீட்டஸ் –J, q, x
வாணி – நல்லது. அடுத்து, 喜欢, xi 3வது தொனி, h-u-an, முதலாவது தொனி, 喜欢,xi huan
க்ளீட்டஸ் -- xi 3வது தொனி, h-u-an, முதலாவது தொனி, 喜欢,xi huan, என்பது விருப்பம்.
வாணி – அடுத்து xi huan, என்ற சொல்லுடன் ஒரு வாக்கியம். 我喜欢中国,wo xi huan zhong guo.
க்ளீட்டஸ் --我喜欢中国,wo xi huan zhong guo. நான் சீனாவை விரும்புகின்றேன்.
வாணி --我喜欢印度,wo xi huan yin du. நான் இந்தியாவை விரும்புகின்றேன்.
க்ளீட்டஸ் ---我喜欢印度,wo xi huan yin du. நான் இந்தியாவை விரும்புகின்றேன்.
வாணி – சரி. இப்போது, புதிய வகுப்பைத் துவக்கலாம். முதலில் 下雨了,xia yu le. மழை பெய்கிறது. நீங்கள் வெளியில் உள்ள போது, திடீரென மழை பெய்தால், இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 下雨了,xia yu le.
க்ளீட்டஸ் --下雨了,xia yu le. மழை பெய்கிறது.
வாணி –下雨了,xia yu le.
க்ளீட்டஸ் --下雨了,xia yu le. மழை பெய்கிறது.
வாணி – அதே போல், குளிர் காலத்தில் வெளியே பனி பெய்வதைப் பார்த்தால், நீங்கள் 下雪了。xia xue le. என்று கூறலாம்.
க்லீட்டஸ் --下雪了。xia xue le. பனி பெய்கிறது. வாணி, இந்த வாக்கியத்தில் 了 le, என்ன பொருள்?
வாணி – சீன மொழியில்了 le, என்பதற்குக் குறிப்பிட்டப் பொருள் இல்லை. வாக்கியத்தின் இறுதியில் mood வெளிப்படுத்துவதானே. சரி, என்னைப் பின்பற்றி மீண்டும் வாசியுங்கள். 下雪了。xia xue le.
க்ளீட்டஸ் -- 下雪了。xia xue le. பனி பெய்கிறது.
வாணி –下雪了。xia xue le.
க்ளீட்டஸ் -- 下雪了。xia xue le. பனி பெய்கிறது.
வாணி – அடுத்து, 起风了。Qi feng le. காற்று வீசுகிறது.
க்ளீட்டஸ் --起风了。Qi feng le. காற்று வீசுகிறது.
வாணி – மீண்டும் ஒரு முறை. 起风了。Qi feng le. காற்று வீசுகிறது.
க்ளீட்டஸ் --起风了。Qi feng le. காற்று வீசுகிறது.
வாணி – 阴天了。Yin tian le. வானிலை மேகமூட்டமாய் இருக்கிறது.
க்ளீட்டஸ் -- 阴天了。Yin tian le. வானிலை மேகமூட்டமாய் இருக்கிறது.
வாணி – இனி. உச்சரிப்பு நேரம். இன்று Z, c ஆகிய 2 ஒலிகளைக் கற்றுக்கொள்கின்றோம். முதலில், z, க்ளீட்டஸ், நீங்கள் வாசியுங்கள்.
க்ளீட்டஸ் – Z
வாணி – நல்லது. கடந்த வாரம் 最 zui என்ற சொல்லைக் கற்றுக்கொண்டோம். இது மிகையானதைக் குறிக்கிறது.
க்ளீட்டஸ் – 最高,zui gao, மிக உயர்வு. 最低,Zui di, மிக தாழ்வு.
வாணி --最高,zui gao, z-ui 4வது தொனி, g-ao, முதலாவது தொனி. 最高,zui gao
க்ளீட்டஸ் --最高,zui gao, z-ui 4வது தொனி, g-ao, முதலாவது தொனி. 最高,zui gao
வாணி – c என்ற ஒலி தமிழ் மொழியில் இல்லாதது. கவனமாகக் கேளுங்கள்.
க்ளீட்டஸ் – c
வாணி – c
க்ளீட்டஸ் – c
வாணி – ஒரு புதிய சொல், 菜单,cai dan。 நீங்கள் உணவு விடுதிக்குச் சென்றால், முதலில் பணியாளர் தங்களுக்கு ஒரு உணவு பட்டியலைக் கொடுப்பார். இதன் மூலம், நீங்கள் வேண்டியவற்றைத் தெரிவு செய்யலாம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 菜单,cai dan。 c-ai 4வது தொனி, d-an, முதலாவது தொனி. 菜单,cai dan。
க்ளீட்டஸ் --菜单,cai dan。 c-ai 4வது தொனி, d-an, முதலாவது தொனி. 菜单,cai dan。
வாணி --菜单,cai dan。
க்ளீட்டஸ் --菜单,cai dan。
|