
பின் எனப்படும் ஏரி, முன், பின் மற்றும் மேற்கு ஏரிகள் என மூன்று ஏரிகளைக் கொண்டது. இதன் பெயர் ஷி சா ஹாய். வட ,மத்திய மற்றும் முன் ஏரிகள் ஆகிய மூன்று ஏரிகளை வித்தியாசப்படுத்தும் பொருட்டு இது பின் மூன்று ஏரிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி, கிழக்கில், டி ஆன் மென் wai பெரிய வீதியிருந்து தொடங்கி, மேற்கில், xin jie kou பெரிய வீதிக்கும் தெற்கில், பின் ஆன் பெரிய வீதியிலிருந்து வடக்கில் இரண்டாவது சுற்று பாதையில் சென்று பாய்ந்தது. இதன் மொத்த பரப்பளவு, 146.7 ஹெக்டர் ஆகும். இதிலான நீரின் பரப்பளவு, 34 ஹெக்டர். புல் தரையின் பரப்பளவு, 11.5 ஹெக்டர். இது, 700 ஆண்டுகளுக்கு முன்பு, பெய்சிங் நகரத்தின் யுவான் தா து காலத்து பழமை வாய்ந்த நீர் பரப்பாகும்.

இந்த ஏரி, 13 ஆம் நூற்றாண்டு yuan தா து நகரின் திட்டவடிவமைப்பின் அடிப்படையான ஆதாரங்களில் ஒன்றாகும். yuan வம்ச காலம் முதல்,shi sha hai எனும் ஆற்றின் சுற்றுப்புறப் பிரதேசங்கள், இந்நகரின் பரபரப்பான வணிகப்பகுதியாகும். அப்போது, இது,கப்பல் போக்குவரத்தின் நிறைவு இடமும் ஆகும். எனவே, இது பெய்சிங்கின் பழைய துறைமுகம் என அழைக்கப்பட்டது. அப்போது, இந்த ஏரி யோரங்களில் எங்கெங்கும் மது அருந்த ஏதுவான கடைகளும் பணிமனைகளும் காணப்பட்டன.

மிக முன்னதாக, பின் ஏரியின் சுற்றுப்புறங்களில் இருந்த தெரு கட்டமைப்பு, yuan வம்ச காலத்தில் உருவாகியது. பல கட்டிடங்கள், பெய்சிங்கின் பாரம்பரிய கட்டிடக் கலையின் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஜின்ஸ் ஹீ தொங், யார் ஹீதொங், யென் தை சியெ சியன் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டாகும். shi sha hai சுற்றுப்புறப்பிரதேசங்களில், 40க்கு அதிகமான தொல்பொருள் பாதுகாப்பு இடங்கள் இருக்கின்றன.

இவற்றில், கொங் சிங் ஓங் மற்றும் சென் சின் ஓங் இளவரசர்கள் இல்லங்கள், சொங் சிங் லின் அம்மையார் வாழ்ந்த பழைய இல்லம், கொ மொழ ழொ வாழ்ந்த பழைய இல்லம் ஆகியவை இடம் பெறுகின்றன.
|