
குவாங் சுங் கோயிலை
திபெத்தில், Jokhang கோயிலைப் பார்வையிட்டேன். அலாசானின் குவாங் சுங் கோயிலை வந்து பார்த்து, மகிழ்ச்சியடைந்தேன். வரலாற்றைக் கற்றுக்கொள்வதன் காரணமாக, இக்கோயிலின் பண்பாடு குறித்து, நான் மிகவும் உணர்ச்சி வயப்படுகின்றேன். இங்கு, இயற்கைக் காட்சியும், மதப் பண்பாடும் நன்றாக இணைந்து காணப்படுகின்றன. பல அருமையான நிழற்படங்களை எடுத்து நண்பர்களிடம் காட்டுவேன் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், உள்ளூர் அரசின் ஆதரவுடன், குவாங் சுங் கோயிலின் மத வரலாறும், பண்பாடும் சீராக பாதுகாக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து வருகின்றன. உள்ளூர் மக்களின் மத நம்பிக்கை, போதியளவில் மதிக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும், கோயிலின் செப்பனிடுதல் மற்றும் பேணுதல் பணி, உள்ளூர் அரசு, சிறப்பு நிதித் தொகையை ஒதுக்கீடு செய்து வருகிறது. கோயிலில் முதுமையான லாமாக்களின் வாழ்க்கையை, அரசாங்கம் சிறப்பாக கவனிக்கின்றது.

இது குறித்து, அலாசானின் சோ மாவட்டத்தின் தேசிய மத ஆணையத் துணைத் தலைவர் GAO JIAN ZHONG கூறியதாவது:
உள்ளூர் அரசாங்கம், சிறுப்பான்மை தேசிய இனம் மற்றும் மதத்தில் மிகவும் கவனம் செலுத்தி, திபெத் புத்த மதத்தைச் சேர்ந்த லாமாக்களுக்கு, வாழ்க்கை உதவி வழங்கி வருகின்றது. அரசாங்கங்கள், 137 லாமாக்களை, மிகக் குறைவான வருமானம் உடையவர்களில் சேர்த்து, அவர்களின் வாழ்க்கை இன்னல்களைத் தீர்த்துள்ளது என்றார் அவர்.
குவாங் சுங் கோயிலில் நுழைந்த போது, லாமாக்கள் திருமறை ஓதுவதையும், பயணிகள் பக்தியுடன் அஞ்சலி செலுத்துவதையும் பார்க்கலாம்.
கோயிலின் பக்கத்தில் உள்ள ஒரு உயரமான கற்சுவரில் நீல நிற ஹாதாக்கள் நிறைவாத தொங்கப்படுகின்றன. இந்த ஹாதாக்கள் மங்கலத்தன்மையை எடுத்துக்காட்டி வருகின்றன. மக்கள் தமது மகிழ்ச்சியை ஹாதாவுடன் வானில் தூக்கி வீசினால், மிக அருமையான அதிர்ஷிடம் அவனுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் பயணிகள் செயல்படுகின்றனர்.
அடுத்து, குவாங் சுங் கோயில் பற்றிய சுற்றுலா தகவல் குவாங் சுங் கோயில், நிங்சியா ஹுவே தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் யீன்சுவானிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் அலாசானைச் சேர்ந்த பயான்ஹொட் நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திபெத் புத்த மதப் பண்பாட்டையும் இயற்கைக் காட்சி சுற்றுப்பயணத்தையும் இணைந்து வழங்கும் குவாங் சுங் கோயிலின் நுழைவுச்சீட்டு, நபர் ஒருவருக்கு 30 யுவானாகும்.
|