• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-06 15:50:43    
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் புதுப்பித்தல் பணி

cri

பெய்ஜிங்கிலுள்ள 40 குதெங் எனப்படும் சிறுவீதிகளில் ஆயிரகணக்கான பாரம்பரிய பாணியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஜூன் திங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது. இப்பணி 10,000 குடும்பங்களின் பாதுகாப்பபையும், வாழ்க்கை தரத்தையும் முன்னேற்றுவதற்கு எடுக்கப்படும் மாபெரும் முயற்சியாகும். 1949 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் பெய்ஜிங்கிலுள்ள பழைய வீடுகள் புதுப்பித்தல் பணி அளவில் இது மிக பெரியது. 1,474 குதொங்குகளில் வாழும் 9,635 குடும்பங்கள் இதனால் பயன்பெறுகின்றன என நகராட்சியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dongcheng, Xicheng, Xuanwu மற்றும் Cheongwen மாவட்டங்களில் நடைபெறும் புதுப்பித்தல் பணிக்காக நகராட்சி அதிகாரிகள் இவை ஒவ்வென்றிற்கும் 250 மில்லியன் யுவான் ஒதுக்கீடு பெய்துள்ளனர். மக்களை குளிர் காலத்தில் பாதுகாக்க பயன்படும் வெப்ப வசதி மற்றும் கழிவறை வசதிகள் இப்பணியின் போது கவனத்தில் கொள்ளப்படும் என்று பெய்ஜிங் மாநகர துணைத்தலைவர் Chen Gang திங்கட்கிழமை நடைபெற்ற அத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய ஆய்வின்போது தெரிவித்தார். இந்த பணியின் போது தலைநகருக்கு பொருந்திய குதொங்கின் தோற்றத்தை பழுதடையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் பாதுகாப்பு நிபுணர்களை நியமிப்பர்.

புதுப்பித்தல் பணிக்கான விரிவான வழிமுறைகளை வழங்கிய பெய்ஜிங் நகராட்சி திட்ட ஆணையமும், நகராட்சி கட்டுமானக்குழுவும், வரலாற்று சுவடுகளை பாதுகாப்பதோடு தெருவீதிகளின் பாரம்பரிய தோற்றத்தை மாற்றக்கூடாது என தெரிவித்துள்ளது. ஆரம்பகால தோற்றத்தை பாதுகாத்து உறுதிசெய்ய குதொங்கை அகலமாக்கவோ, வரைவில் மாற்றங்கள் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. பழைய செங்கற்கள் மற்றும் கல் பொருட்கள் பாரம்பரிய கூரை முகப்பை பெறுவதற்காக பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

புதிய ஜன்னல்கள் கூட முற்கால வடிவில் இருக்கும். அலுமினியம் கலந்த ஈய பட்டிக்கு பதிலாக மரப்பட்டிகளில் கண்ணாடி பொருத்தப்படும். சீனாவிலுள்ள சிறு நகரங்களில் கூட தற்போது மரபட்டியை பயன்படுத்துவதில்லை என்று Xicheng மாவட்டத்தில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் ஒருவர் பெய்ஜிங் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். தனது புதுப்பிக்கப்பட்ட வீட்டில் மின் வெப்ப வசதி அமைக்கப்பட்டுள்ளதால் குளிர்காலத்தில் நிலக்கரி அடுப்பை நம்பியிருந்த நிலை மாறிவிட்டது என்று பயனாளி ஒருவர் தெரிவித்தார். எரியாற்றலையும், நீரையும் சிக்கனப் படுத்துவதை ஊக்குவிக்க அவற்றின் பயன்பாட்டை அளவிடும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

உலக கழிவறை அமைப்பின் மாநாடு தொடங்கியது:

உலக அளவிலான கழிவறை புரட்சியை துவங்கும் நம்பிக்கையோடு உலக கழிவறை அமைப்பின் முதல் மாநாடு நவம்பர் திங்கள் 23 ஆம் நாள் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது. கழிவறை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரத்தை வளர்த்து, உயிர்களை காக்க இது திட்டமிடுகிறது. 60 நாடுகளை சேர்ந்த அரசு மற்றும் ஐநா பிரதிநிதிகள் 2 நாட்கள் கலந்துரையாடல் நடத்தினர். உலகில் 2.6 மில்லியன் மக்களின் சரியான கழிவறை வசதியில்லாத நிலையை நீக்க இது முனைந்துள்ளது.

உலக சுகாதாதர அமைப்பின் கிழக்கு பசிபிக் பகுதியின் இயக்குனர் மருத்துவர் ளூபைநசர ழுஅi "ஆண்டுக்கு 1.8 மில்லியன் மக்கள் சரியான சுகாதார வசதியில்லாமல் தாக்கப்படுகின்ற நோய்களால் பலியாகின்றனர். இதில் 90 விழுக்காட்டினர் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளாவர்" என்றார். உலக அளவில் கழிவறை வசதிகள் அளிப்பதற்கு ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராகும். இத்தொகை உலக அளவில் இராணுவத்திற்கு செலவிடப்படும் செலவின் ஒரு பகுதியாகும் அல்லது ஐரோப்பியர்கள் ஓர் ஆண்டுக்கு பனிக்கூழுக்கு செலவழிக்கும் தொகைக்கு சமமாகும். சுகாதார வசதிகள் மேம்பட்டால் வாழ்க்கையும் பாதுகாக்கப்படும் என்று யுனிசெப் செயல் இயக்குனர் அன் வினிமன் கலந்துரையாடலின்போது வழங்கப்பட்ட ஒளிப்பட செய்தியில் கூறினார்.

மேலும், தென் கொரியாவை சேர்ந்த சிம் ஜியே டக் என்பவர் தனது அரசியல் பணிவாழ்வின் போது பொது கழிப்பிடங்களை அழகாக்கியதால் திருவாளர் கழிவறை என்ற சிறப்பு பெயர் பெறுகிறார். கழிவறை போன்ற வடிவமைப்புடைய இவரது இரண்டு மாடிவீடு உலக கழிவறை அமைப்பின் முதல் மாநாட்டின் நினைவாக திறக்கப்பட்டுள்ளது. தேசிய அவையின் உறுப்பினரான சிம் சொந்த நகரான சுவென்னில் அமைந்துள்ள கழிவறை அமைப்பில் கட்டப்பட்டுள்ள தனது வீடானது இக்கழிவறை புரட்சிக்கான கவனத்தை கொண்டு வரும் என நம்புகிறார்.

சௌதி அரேபிய இளவரசர் வாங்கிய பறக்கும் அரண்மனை:

300 மில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்பிலான மிகப்பெரிய சொகுசு விமானம் சௌதி அரேபிய இளவரசரால்; வாங்கப்பட்டுள்ளது. உலகின் பெரிய பயணியர் விமானமான யு380 செய்து முடிக்கப்பட்டதுடன் இளவரசர் அல்வாலீடு பின் தலாலின் பறக்கும் அரண்மனையாக இருக்கும் என்று அவ்விமான உற்பத்தி நிறுவனம் கூறியது. SAS விமான நிறுவனம் இவ்வகை விமானங்களுக்கு குறிப்பிட்ட விலைப்பட்டடியலை கொள்ளவில்லை. ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனியான விலை இருக்கிறது. அதன் கால்பந்து விளையாட்டு மைதானத்திற்கு ஒத்ததான இறக்கைகள் மட்டும் 320 மில்லியன் டாலரை விட அதிகமாகும். இது 6,000 சதுரமீட்டர்கள் கொண்ட விமானத்தின் உட்புறத்தை வடிவமைப்பதற்கான செலவை உள்ளடக்கவில்லை. உடபுற வடிவமைப்பில் தனி படுக்கையறை, திரையரங்கு, உடற்பயிற்சி நிலையம் முதலியவை அடங்கும். இந்த சொகுசு விமானத்திற்கு 15 விமான பணியாட்களை நியமிக்க வேண்டியுள்ளது.

50 வயதாகும் இளவரசர் அல்வாலீடு சுமார் 200 பில்லியன் டாலர் சொத்துகளை கொண்டு உலக பணக்காரகளில் 13 வதாக திகழ்கிறார் என்பது குறிப்பிடதக்கது. யு380 ரக பெரிய விமானங்கள் மத்திய, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியவில் உள்ளவர்களால் வாங்கப்படும் என எதிர்பார்ப்பதாக இவ்விமான உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முற்கால கடல் தேள் மனிதரை விட பெரியது:

முற்கால கடல் தேளின் கவ்வுகின்ற உறுப்பு பகுதியை பிரிட்டன் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்காத அளவுக்கு நீளமான, காரின் அளவைவிட பெரிதானது அந்த தேள் என்று எண்ணக்கூடிய அளவுக்கு அவ்வுறுப்பு பெரிதாக உள்ளது. 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான பழைய பாறைகள் பற்றிய கண்டுபிடிப்புகள் சிலந்திப்பூச்சி, புழுபூச்சிகள், நண்டுகள் மற்றும் இதை போன்ற பல உயிரினங்கள் இதற்கு முன்னால் எண்ணப்பட்டதைவிட மிக நீளமானதாக இருந்துள்ளதை இது தெரிவிக்கின்றது என்று பிரிஸ்டோல் பல்கலைக்கழக தொல்லியலாளர் சைமன் பிராடி கூறினார்.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மிகப்பெரிய அசுரத்தனமான வளர்ச்சிக்கொண்ட ஆயிரங்கால் அட்டைகள், தேள்கள், கரப்பான் பூச்சிகள் பொன்வண்டுகள் இருந்தன என்று இத்தகைய பூச்சிகள் பற்றிய தொல்லியல் பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஊர்ந்து, தவழ்ந்து செல்லும் இப்பூச்சிகள் இவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என எண்ணியதில்லை என்று பிராடி தெரிவித்துள்ளார். இதுவரை எண்ணப்பட்டதைவிட இக்கடல் தேள் அரை மீட்டர் நீளமானது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அப்படியானால் தற்போதைய மனிதரின் உயரத்தை விட அதிக உயரம் கொண்டதாக அழிந்துபோன இக்கடல் தேள் இருந்துள்ளது. இயற்கையான எதிரிகள் இல்லாததால் பல மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்த இந்த கடல் தேள் காலப்போக்கில் மிகப்பெரிய மீனால் அழிக்கப்பட்டது என்று தென்கிழக்கு ஜெர்மனியிலுள்ள பிரிபெர்க் மைனிங் அகாடமி தொல்லியலாளரும் பேராசிரியருமான ஜார்ஜ் சச்னேடர் தெரிவித்தார்.