• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-07 10:13:39    
சீனாவின் தொங் இனம்

cri

சீனாவின் தொங் இன மக்கள், முக்கியமாக குய்சோ மாநிலத்தின் liping, congjiang, ஹுநான் மாநிலத்தின் xinhuang, jingxian, குவாங்சி மாநிலத்தின் sanjiang, longsheng ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள் தொகை, 25 லட்சத்து 10 ஆயிரமாகும். தொங் இன மக்கள், பல கடவுள்களையும், இயற்கையையும் வழிபடுகின்றனர்.

தொங் இன மக்களுக்கு சொந்த மொழி உண்டு. இது, சீன-திபெத் மொழி குடும்பத்தின் தொங்-ஷுய் கிளையைச் சேர்ந்ததாகும். பெரும்பாலோர், சீன மொழியை அறிந்துள்ளனர். தொங் இன நாடகம், தொங் இன மக்களிடையிலான நாடகமாகும். இவ்வின மக்கள், கட்டடக் கலையில் வல்லவர்கள். ஒவ்வொரு கிராமத்தில், சிறப்பு வடிவத்திலான மரக் கட்டிடங்கள் காணப்படுகின்றன. மரத்தாணிகளைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட இத்தகைய கட்டிடங்கள், சீனப் பழங்கால கட்டிடக் கலையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.

வேளாண்மை தொங் இன மக்களின் முக்கிய தொழிலாகும். வனத்தொழில், துணைத் தொழிலாகக் கருதப்படுகிறது. மீன், நெல் முக்கியமான பயிராக விளைகிறது. நெல் வயலில் மீனை வளர்ப்பதில் அவர்கள் வல்லவர்கள்.

தொங் இன ஆண்கள் மதுவை அருந்த விரும்புகின்றனர். பெரும்பாலானோர் வீட்டில் நெல்லால் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த அளவு சாராயத்துடன் கூடிய மதுவை அருந்துகின்றனர்.

தொங் இனத்தின் பாரம்பரிய விழாக்களின் நாட்கள், வெவ்வேறு இடங்களில் வேறுபடுகின்றன. பொதுவாக, விழாவின் போது விருந்து அளிக்க வேண்டும். குறிப்பாக, திருமணம், குழந்தை பிறப்பு, மரணம் ஆகியவற்றின் போது வெவ்வெறு அளவிலான விருந்துகள் அளிக்கப்படுவது வழக்கம்.

திருமண விழா, பாலம் கட்டியமைப்பு விழா முதலியவை, தொங் இனத்தின் முக்கிய விழாக்களாகும். சந்திர நாள் காட்டியின்படி 10ம் திங்களின் முதல் நாள், தொங் இன மக்களின் திருமண விழாவாகும். அன்று பல இணைகள் திருமணம் செய்து கொள்கின்றனர்.

தொங் மொழி, தெற்கு மற்றும் வடக்கு என இருவகை வட்டார மொழிகளாகப் பிரிக்கப்படுகிறது. தெற்கு வட்டார மொழியைப் பேசுகின்றவர்கள், கிராமங்களில் முரசுடன் கூடிய மாளிகைகளைக் கட்டியமைக்க விரும்புகின்றனர். இத்தகைய மாளிகைகள், தொங் இனக் கிராமத்தின் முக்கிய சின்னமும், பூர்வீக குடும்பத்தினர்கள் பற்றிய நிகழ்ச்சிகள் விவாதிக்கும் முக்கிய இடமும் ஆகும்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040