• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-07 15:43:16    
உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை

cri

உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு நவம்பர் 30ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் Zurich நகரில் கால் பந்தில், 2007ம் ஆண்டின் உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது பெறுவோர் வேட்பாளரின் பட்டியலை வெளியிட்டது.
ஆடவர் துறையில், இவ்விருது பெற போர்ச்சிக்கல் வீரர் Cristiano Ronaldo, பிரேசில் வீரர் Kaka, அர்ஜென்டீன வீரர் Lionel Messi ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
மகளிர் துறையில், ஜெர்மன் வீராங்கனை BirgitPrinz, பிரேசில் வீராங்கனை Marta, Cristiane ஆகியோர் இவ்விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.


உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு டிசம்பர் 17ம் நாள் Zurich நகரில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. அவ்வேளை, 2007ம் ஆண்டின் உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதைப் பெறும் இறுதி பட்டியலை உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு வெளியிடும்.
சீன கால்பந்து சங்கம்
2007ம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின், சிற்ந்த கால்பந்து சங்கத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் 28ம் நாள் ஆஸ்திரேலியாவின் சீட்னி நகரில் நடைபெற்றது. சீனக் கால்பந்து சங்கம் இவ்வாண்டின் தலைசிறந்த சங்கத்திற்கான விருதைப் பெற்றது.
சிறுவர் மற்றும் இளைஞர்கள் கால்பந்து, மகளிர் கால்பந்து ஆகிய துறைகளில் சீனக் கால்பந்து சங்கம் மிக மதிப்புள்ள பங்காற்றியதால், சீனக் கால்பந்து சங்கத்துக்கு இவ்வாண்டிற்கான தலைசிறந்த சங்க விருதை வழங்க தாங்கள் முடிவு செய்ததாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்தது.


Davis டென்னிஸ் போட்டி
Davis டென்னிஸ் போட்டி 1ம் நாள் அமெரிக்காவின் Portland நகரில் முடிவடைந்தது. அமெரிக்க அணி 3-0 என்ற கணக்கில் ரஷிய அணியை வென்று இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. அமெரிக்க அணி, Davis டென்னிஸ் போட்டி வரலாற்றில், 32வது முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருப்பது, குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 30ம் நாள் நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில், அமெரிக்க அணி வெற்றி பெற்றது. 1ம் நாள் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் ஆட்டத்திலும், அமெரிக்காவின் BobBryan, MikeBryan இணை 3-0 கணக்கில் ரஷியாவின் Davydenko, Andreev இணையைத் தோற்கடித்தனர்.
Davis டென்னிஸ் போட்டி என்பது உலக டென்னிஸ் போட்டியில் முக்கிய ஆடவர் குழு போட்டி என்பது குறிப்பிடதக்கது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி
2008ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான குழுக்களை பிரிப்பதற்கு சீட்டெடுப்பு விழா டிசம்பர் 2ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் Lucerne நகரில் நடைபெற்றது. C குழுவில் இத்தாலி, பிரான்ஸ், Holland, ருமேனியா ஆகிய 4 அணிகள் இடம் பெற்றன. இந்த அணிகள் வலுவான ஆற்றல் கொண்டவை. இதில், இத்தாலி அணி 2006ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. பிரான்ஸும் Hollandஉம் பாரம்பரிய கால் பந்து அணிகளாகும்.


A குழுவில் ஸ்விட்சர்லாந்து, செக் குடியரசு, போர்ச் அக்கல், துருக்கி ஆகிய 4 அணிகளும்.
B குழுவில் ஆஸ்திரியா, கிரோஷியா, ஜெர்மனி, போலந்து ஆகிய 4 அணிகளும்.
D குழுவில் கிரீஸ், ஸ்வீடன், ஸ்பெயின், ரஷியா ஆகிய 4 அணிகளும் இடம் பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு ஜூன் 7 முதல் 29ம் நாள் வரை, 2008ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஸ்விட்சர்லாந்திலும் ஆஸ்திரியாவிலும் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.