திபெத்தில் தேசிய இன அதிகாரிகள்
cri
கடந்த ஆண்டின் இறுதி வரை, முழு திபெத் தின்னாட்சி பிரதேசத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்துக்கு மேலாகும். இவ்வெண்ணிக்கை மொத்த அதிகாரிகளில் சுமார் 70 விழுக்காடாகும். சிறுபான்மை தேசிய இன அதிகாரிகள் திபெத் பொது நிர்வாகத்தில் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளனர். திபெத் இனம் உள்ளிட்ட பல சிறுபான்மை தேசிய இனங்களை முக்கியமாக கொண்ட தேசிய இனத் தன்னாட்சி பிரதேசமாக திபெத் திகழ்கின்றது. கடந்த பல ஆண்டுகளாக, தேசிய இன ஊழியர் மற்றும் அதிகாரிகளின் பயிற்சியில் நடுவண் அரசும், தன்னாட்சி பிரதேச அரசும் உயர் கவனம் செலுத்தி வருகின்றன. பல தேசிய இன ஊழியர்கள், தன்னாட்சி பிரதேசம் மற்றும் நகரங்களில் முக்கிய பதவி ஏற்றுள்ளனர்.
|
|