• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-10 21:57:41    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நுழைவுச்சீட்டு

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது சுற்று நுழைவுச்சீட்டு விற்பனை பணி இன்று மீண்டும் துவங்கியது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் திட்ட படி, டிசம்பர் 10 முதல் 30ம் நாள் வரை, இச்சுற்று விற்பனை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நுழைவுச்சீட்டு பங்கீடு கணிணி மூலம் முடிவு செய்யப்படுகிறது.


சீன உணவுத் துறையிலான தொழில் நிறுவனங்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை இன்று பெய்சிங்கில் அதிகாரப்பூர்வமாக துவங்கியன.
நல்லதரமுடைய சேவைக்கு உத்தரவாதம் அளிப்பது முதலிய பல்வேறு நடவடிக்கைகளை இது முக்கியமாகக் கொண்டு, உணவக சேவையின் வரையறைமயமாக்கத்தை முன்னேற்றி, உணவுத் துறையின் ஒட்டுமொத்த தரத்தையும் சேவை நிலையையும் உயர்த்தி, சீரான சேவை புகழையும் நேர்முக சமூகக் கருத்துகளையும் நிலைநாட்ட வேண்டும் என்று சீன உணவக சங்கத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் மகளிர் கால் பந்து போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், 28ம் நாள் இரவு ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் அணியும் டென்மார்க் அணியும் மோதின. 90 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியைத் தோற்கடித்து, பெய்சிங் ஒலிம்பிக் மகளிர் கால் பந்து போட்டியில் கலந்துகொள்ளும் தகுதி பெற்றுள்ளது.
இரு தரப்பின் முதலாவது சுற்று ஆட்டத்தில், ஸ்வீடன் அணி 4-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியைத் தோற்கடித்தது.


ஜெர்மனி, நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகளின் மூன்று ஐரோப்பிய அணிகள் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் மகளிர் கால் பந்து போட்டியில் கலந்துகொள்ளும் தகுதி பெற்றுள்ளன.
பெய்சிங் ஒலிம்பிக் காட்சி சிற்பங்கள் கண்காட்சி
உலகம் முழுவதும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பிரச்சாரம் செய்வது, மனித குலத்திற்கு ஒலிம்பிக் கருத்துகளை விளக்கி கூறுவது, ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர்வது ஆகியவற்றை நோக்கமாகக்கொண்ட பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு காட்சி சிற்பங்கள் கொண்ட கண்காட்சி நலம்பர் 29ம் நாள் அமெரிக்க Virginia மாநிலத்தின் George Mason பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்பு, அமெரிக்காவின் Los Angeles, சிக்காகோ முதலிய நகரங்களில் இக்கண்காட்சி நடைபெற்றுள்ளது. NBC, CBS முதலிய அமெரிக்க முக்கிய செய்தி ஊடகங்கள் மற்றும் உள்ளூர் சீன மொழி செய்தி நாளேடுகளின் செய்திகளை இது ஈர்த்துள்ளது.


2005ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் நாள் முதல், உலகம் முழுவதும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக்குழு ஒலிம்பிக் காட்சி பற்றிய சிற்பங்களை அணிதிரட்ட துவங்கியது. 90 நாடுகள் பிரதேசங்களை சேர்ந்த கலைஞர்கள் இந்நடவடிக்கையில் பங்கெடுத்துள்ளனர் என்று அறியப்படுகின்றது.